Published:Updated:

தண்டோரா

பசுமைக் குழு

தண்டோரா

பசுமைக் குழு

Published:Updated:

இலவசப் பயிற்சிகள்

நன்னீர் மீன் வளர்ப்பு!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் மையத்தில், ஜூலை 29-30-ம் தேதிகளில் நன்னீர் மீன் வளர்ப்பு; 30-ம் தேதி பண்ணைக் கருவிகள் பயன்பாடு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், (எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அருகில்) காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்-603203. தொலைபேசி: 044-27452371.

பசுந்தீவனம்!

திருவண்ணாமலை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜூலை 31-ம் தேதி பசுந்தீவன வளர்ப்பில் நவீனத் தொழில்நுட்பப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், ஸ்ரீராம் நகர், பச்சையம்மன் கோவில் தெரு, திருவண்ணாமலை-1.

தொலைபேசி: 04175-253077.

தண்டோரா

நாட்டுக் கோழி!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில், ஜூலை 30-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. காலை, மாலை தேநீர், மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், குன்றக்குடி,

சிவகங்கை-630 206. தொலைபேசி: 04577-264288.

அசோலா!

கன்னியாகுமரி, விவேகானந்தா கேந்திராவில் ஜூலை 27-ம் தேதி அசோலா வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 94426-46296.