Published:Updated:

கல்லூரிப் படிப்புடன் களப்பணி... இயற்கைப் பிரசாரத்தில் மாணவர்கள்!

பி.விவேக் ஆனந்த் படங்கள்: தே. தீட்ஷித்

கல்லூரிப் படிப்புடன் களப்பணி... இயற்கைப் பிரசாரத்தில் மாணவர்கள்!

பி.விவேக் ஆனந்த் படங்கள்: தே. தீட்ஷித்

Published:Updated:
##~##

திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில், கடந்த 28 ஆண்டுகளாக 'ஷெப்பெர்ட்’ (மக்கள் மேம்பாட்டுக்கானக் கலை, அறிவியல் திட்டம்) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கே பயிலும் ஒவ்வொரு மாணவரும் ஏதாவது ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே மூன்று நாட்கள் தங்கி, அந்த கிராமத்தின் மக்களுக்கு சேவை செய்வதுதான் திட்டம்!  

''1985-ம் ஆண்டிலிருந்து இத்திட்டம் இங்க செயல்பாட்டுல இருக்கு. இந்தியாவிலேயே முதன்முறையா மக்கள் சேவைக்கான பாடத் திட்டத்தை எங்க கல்லூரியிலதான் அறிமுகப்படுத்தினோம். ஒவ்வொரு மாணவனும் கிராமத்துல தங்கி, அந்த மக்கள், அவங்களோட வாழ்வியல் முறை, பொருளாதாரச் சூழ்நிலை எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும். விடுமுறை நாட்கள்ல அந்த கிராமங்கள்ல வனம், விவசாயம், தொழில், சாலை மேம்பாடு, குழந்தைகளின் படிப்பு இது சம்பந்தமா ஏதாவது ஒரு சேவையை செய்யணும். அவங்க செய்ற வேலைகளோட அடிப்படையில மார்க் கொடுப்போம். அதுல பாஸ் பண்ணணினால்தான்... டிகிரி கிடைக்கும்'' என்று திட்டம் பற்றி சொன்ன மூத்த ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ஸ்டீபன்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கல்லூரிப் படிப்புடன் களப்பணி... இயற்கைப் பிரசாரத்தில் மாணவர்கள்!

''இந்தத் திட்டத்தால, படிப்பு வாசனையே இல்லாத பல கிராமங்கள்ல கிட்டத்தட்ட 24 பாலர் பள்ளிகளை எங்கள் மாணவர்கள் உருவாக்கியிருக்காங்க. நிறைய மாணவர்கள் படிச்சு முடிச்ச பிறகும்கூட, அந்த மக்களுக்கு சேவை செஞ்சுட்டு இருக்காங்க. 'மணிகண்டம்’ங்கிற கிராமத்தில் மட்டும் 1,800 பேர் கல்வி அறிவு பெற எங்க மாணவர்கள் உதவியிருக்காங்க. இப்போ, எங்கள் மாணவர்கள் 94 கிராமங்கள்ல வளர்ச்சிப்பணிகளை செஞ்சுட்டு இருக்காங்க'' என்று பெருமையுடன் சொன்னார்.

இந்தத் திட்டத்தின் கீழ், திண்ணணுர் என்ற கிராமத்தில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த செயின்ட் ஜோசப் கல்லூரியின் மாணவி தீபாவிடம் பேசியபோது, ''நான் எம்.ஏ. இங்கிலீஷ் படிச்சுக்கிட்டு இருக்கேன். எனக்கு பாடம் சொல்லிக் கொடுக்குறது ரொம்பப் பிடிக்கும்.

கல்லூரிப் படிப்புடன் களப்பணி... இயற்கைப் பிரசாரத்தில் மாணவர்கள்!

இந்த ஊர்ல நிலைமை ரொம்ப மோசம். படிக்க வேண்டிய வயசுல பெயின்டிங், கட்டட வேலைனு செஞ்சு, குடும்பத்துப் பசியைப் போக்குறாங்க குட்டிப் பசங்க. அந்த மாதிரி பசங்களுக்கு படிக்கறதோட அவசியத்தைத் தெரிய வெச்சதுனால, பலரும் இப்ப அரசு பள்ளியில சேர்ந்து படிக்கறாங்க. அப்படி பள்ளியில் சேர்ந்த பசங்களுக்காக வார விடுமுறை நாட்கள்ல வந்து பாடம்

கல்லூரிப் படிப்புடன் களப்பணி... இயற்கைப் பிரசாரத்தில் மாணவர்கள்!

சொல்லிக் கொடுக்கிறோம். வருஷத்துல 100 மணி நேரத்தை இவங்களுக்காக நாங்க செலவழிக்கிறோம்'' என்றார் பெருமையாக.

'ஷெப்பெர்ட்’ பணிகளில் மிகச் சிறப்பாக ஈடுபட்டு வரும் சரவணன், ''நான் இப்ப எம்.ஏ. ஆங்கிலம் இறுதியாண்டு படிச்சுக்கிட்டு இருக்கேன். இளநிலைப் படிப்பும் இதே கல்லூரியில்தான் படிச்சேன். அப்பவே நான் ஷெப்பெர்ட் திட்டத்துல இருந்தேன். நாலு வருஷமா உப்புக்காச்சுப்பட்டி கிராமத்துல வேலை செஞ்சுகிட்டு இருக்கேன்.

இளநிலை படிக்கும் போது, சுற்றுச்சூழல் பற்றி விழிப்பு உணர்வை உருவாக்கும் குழுவில் இருந்தேன். இயற்கை விவசாயம் முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு வரை பல விஷயங்களை பாட்டு, நாடகம் மூலமா மக்களுக்கு புரிய வெச்சோம்.

எங்க பேச்சைக் கேட்டு பலரும் இயற்கை விவசாயத்துக்கு மாறியிருக்காங்க. எங்கள மாதிரியே எல்லா கல்லூரி மாணவர்களும் பொதுச்சேவையில இறங்கினா... தமிழ்நாட்டுல படிக்காதவங்களே இல்லைங்கிற நிலைமையை உருவாக்க முடியும்'' என்றார், எதிர்பார்ப்புகளுடன்.

தொடரட்டும் இந்த சேவை..!

தொடர்புக்கு,
ஸ்டீபன்,
செல்போன்: 94431-93512

 ''இயற்கைக்கு மாறினோம்...''

கரூர் மாவட்டம், புரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆர். விஜயலதா,                        

''எங்க ஊர்ல ஆரம்பத்துல நாங்க இயற்கை உரங்களைப் பயன்படுத்தல. இந்த காலேஜ் புள்ளைங்க வந்து, இயற்கை உரங்கள பயன்படுத்துங்கனு அட்டையில எல்லாம் எழுதிக்கிட்டு ஊர்வலமா போச்சுங்க. இதைப்பார்த்த என்னோட கணவர், இனி இயற்கை விவசாயத்துக்கு

கல்லூரிப் படிப்புடன் களப்பணி... இயற்கைப் பிரசாரத்தில் மாணவர்கள்!

மாறிடலாம்னு சொன்னார். அப்புறம் அரை ஏக்கர்ல மட்டும் கரும்பு, உளுந்துனு போட்டு, முழுக்க முழுக்க இயற்கை உரங்கள மட்டும் பயன்படுத்தினோம். வழக்கத்தை விட சுவையும், லாபமும் அதிகமாகவே கெடச்சுச்சு. அதனால, பாக்குறவங்ககிட்டேயும், இயற்கை விவசாயத்துக்கு  மாறுங்கனு அதோட பயன்களை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டேன்'' என்றார், மகிழ்ச்சி பொங்க.

கரூர் மாவட்டம், வடசேரி கிராமத்தைச் சேர்ந்த, முன்னாள் தலைமை ஆசிரியர்,  அண்ணாதுரை, ''ஒரு பதினஞ்சு வருசத்துக்கு முன்னயே எங்க கிராமத்துக்கு  இந்த பிள்ளைங்க இயற்கை விவசாயம் பத்தி கூட்டம் போட்டு சொல்லிக்கிட்டு இருக்கும். அப்பல்லாம்  பெரும்பாலும் யாரும் கண்டுக்கிட்டது இல்ல.

ஒருதடவை திருச்சிக்கு கூட்டிட்டு போய் இயற்கை உரம் தயாரிக்கிறது  எப்படி, மண்புழு உரத்தோட மகிமை பற்றியெல்லாம் நேரடியா செயல்முறையா செஞ்சு காட்டுனாங்க.  அதுலேர்ந்து ஊர்ல பலரும் இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. நானும்கூட இயற்கை விவசாயம்தான் பண்றேன்'' என்றார்.