Published:Updated:

பசுந்தீவனத்துக்கு 75 % கோழி வளர்ப்புக்கு 50%

மானிய மழை பொழியும் கால்நடைத்துறை! த. ஜெயகுமார் படம்: வீ. நாகமணி

பசுந்தீவனத்துக்கு 75 % கோழி வளர்ப்புக்கு 50%

மானிய மழை பொழியும் கால்நடைத்துறை! த. ஜெயகுமார் படம்: வீ. நாகமணி

Published:Updated:
##~##

இயற்கை விவசாயத்துக்கும் பாரம்பரிய விவசாயத்துக்கும் உறுதுணையாக இருப்பவை, கால்நடைகள்தான். தவிர, விவசாயத்தில் நஷ்டம் வந்தாலும் தொடர்ந்து கைகொடுப்பவையும், ஆடு, மாடு, கோழி... போன்ற கால்நடைகள்தான். ஆனால், தற்போது கால்நடை வளர்ப்பு அருகி வருவதுதான் வேதனையான விஷயம். அதனால், கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில், அரசு சார்பாக பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுபற்றி, கால்நடைப் பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை இயக்குநர் பழனிச்சாமி நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே இடம் பிடிக்கின்றன.

விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நடப்பு ஆண்டில் (2013-14) நிலமற்ற ஏழைப் பெண்கள் ஒன்றரை லட்சம் பேருக்கு, 6 லட்சம் ஆடுகள் வழங்கப்பட உள்ளன. 21 மாவட்டங்களில் 12 ஆயிரம் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இத்திட்டத்தில் பயனடைய விரும்புபவர்கள், அந்தந்த ஊர்களில் நடக்கும் கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்டு, தகவல்களைப் பெறலாம்.  

பசுந்தீவன வளர்ப்பு!

கால்நடை வளர்ப்பு தற்போதைய சூழ்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருக்கிறது. கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம் கொடுப்பதன் மூலம், அதிக பாலை உற்பத்தி செய்யும் வகையில், பசுந்தீவன விதைகளை இலவசமாகக் கொடுத்து வருகிறோம். தீவனப் பயிர்களை வளர்க்க, ஸ்பிரிங்க்ளர்; புற்களை அறுக்க 'அறுவடைக் கருவி’; அறுவடை செய்த புல்லை நறுக்க 'புல் நறுக்கும் கருவி’... போன்றவற்றுக்கு 75% மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்காக 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர், அருகிலுள்ள உதவி கால்நடை மருத்துவரைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் விவசாயிகள் குறை தீர்ப்பு நாளில் மனு செய்யலாம்.

பசுந்தீவனத்துக்கு 75 % கோழி வளர்ப்புக்கு 50%

நாட்டுக்கோழி வளர்ப்பு!

கோழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், நடப்பு ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் சதுரடி இடம் வைத்திருப்பவர்கள், நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அந்த இடத்தில் 250 முதல் 500 கோழிகளை வளர்க்க முடியும். நாட்டுக்கோழி வளர்க்க கொட்டில் அமைப்பதற்கான செலவில் மாநில அரசு 25 சதவிகிதம், மத்திய அரசு 25 சதவிகிதம் என மொத்தம் 50 சதவிகிதம் தொகை மானியமாகக் கிடைக்கும். நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து மேலும் விவரங்களுக்கு கால்நடை உதவி மருத்துவர் மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் மையங்களைத் தொடர்பு கொள்ளலாம். கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி மற்றும் கறிக்கோழி வரும்

பசுந்தீவனத்துக்கு 75 % கோழி வளர்ப்புக்கு 50%

10 மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்ட விவசாயிகள் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் மானியங்களைப் பெறலாம்.  

கறிக்கோழி வளர்ப்பு!

விருதுநகர், விழுப்புரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, தேனி, வேலூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்ட விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். கறிக்கோழிப் பண்ணைகளை அமைப்பதற்கான செலவில் மத்திய, மாநில அரசுகளின் மானியமாக 50 சதவிகித தொகை கிடைத்துவிடும். கடன் உதவிக்காக வங்கிகளுடனான தொடர்பை ஏற்படுத்தி தருகிறோம். தனியார் நிறுவனங்களிடமிருந்து கறிக்கோழிக் குஞ்சுகளை வாங்கி, வளர்த்து விற்பனை செய்யலாம்.

தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் குஞ்சுகளை வாங்கி, வளர்த்து அவர்களிடமே விற்பனை செய்து வருமானம் பார்க்கலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற, 2 ஆயிரத்து 500 சதுரஅடி அளவில் தண்ணீர் வசதியுடன் கூடிய நிலம் இருக்க வேண்டியது அவசியம். மேலும் விவரங்களுக்கு, கால்நடை உதவி மருத்துவர் மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் மையங்களை அணுகலாம்'' என்ற பழனிச்சாமி, நிறைவாக,

நோய் தடுப்பு!

''கால்நடைகளைத் தாக்கும் நோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைக்காக அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகலாம். நாட்டு இன மற்றும் கலப்பு இன மாடுகளுக்கான சினை ஊசிகளும் அந்தந்தப் பகுதியில் உள்ள கால்நடை மையங்களில் கிடைக்கின்றன. தவிர, ஒசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்), காட்டுப்பாக்கம் (காஞ்சிபுரம்), செட்டிநாடு (சிவகங்கை), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), அபிசேகப்பட்டி (திருநெல்வேலி) ஆகிய இடங்களில் இருக்கும் அரசு கால்நடை பண்ணைகளை கால்நடை உதவி மருத்துவர் துணையோடு அணுகி தேவையான தகவல்களைப் பெறலாம்'' என்று வழிகாட்டினார்.

தொடர்புக்கு:

கால்நடைப் பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை,
டி.எம்.எஸ், சென்னை-600006
தொலைபேசி: 044-24321070 / 24321614