Published:Updated:

மண்புழு மன்னாரு!

மண்புழு மன்னாரு!

மண்புழு மன்னாரு!

மண்புழு மன்னாரு!

Published:Updated:
##~##

நாம படிச்சோ... கேட்டோ... நம்ம மண்டைக்குள்ள ஏத்தி வெச்சுருக்குற விஷயங்கள், தகவல்கள் எல்லாமே ஒரு வகையில செல்வம்தான். படிச்சவங்க பாஷையில சொல்லணும்னா... 'இன்ஃபர்மேஷன் ஈஸ் வெல்த்' (Information is wealth).. தகவல் சேகரிப்புங்கறது, தேனீங்க சிறுகச்சிறுக தேனைச் சேர்க்கற மாதிரியான விஷயம். எந்தத் துறையில ஜெயிக்கணும்னாலும், அந்தத் துறையைப் பத்தின தகவல் அறிவு அவசியம். அந்த வகையில சில முக்கியமான தகவல்களை உங்களோட பகிர்ந்துக்கப் போறேன்.

நம்ம நாட்டோட, முக்கியத் தொழில்... விவசாயம். அதனால, அதோட வளர்ச்சிக்கு பல திட்டங்களை மத்திய அரசும், மாநில அரசும் செயல்படுத்திக்கிட்டு இருக்கு. அதைப் பத்தி இங்க பார்க்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இயற்கை விவசாயம்தான், இனி உலகம் முழுக்க கொடிகட்டிப் பறக்கப் போவுது. அந்த இயற்கை விவசாயத்தை நாடு முழுக்க வேகப்படுத்தறதுக்காக, நாட்டோட நாலு மூலையிலும், மண்டல இயற்கை வேளாண் மையத்தைத் தொடங்கியிருக்கு, மத்திய அரசு.  தென் மண்டல அலுவலகம், கர்நாடக மாநிலம் பெங்களூருல இருக்கு. மண்புழு உரம் தயாரிப்பு, சாண எரிவாயு, செயல்விளக்கத் திடல்னு விவசாயிங்களுக்கு மானியங்களை வாரி வழங்குது, இந்த மையம். இதுமட்டுமில்லாம, விவசாயிங்களுக்கு 'இயற்கை விவசாயச் சான்றிதழ்’ வாங்கறதுக்காகவும் இந்த மையம் வழிகாட்டிக்கிட்டு இருக்கு.

தொடர்பு முகவரி: Regional Centre of Organic Farming, BANGALORE. Tel/Fax: 080-23330616.
 National Centre of Organic Farming Ghaziabad, Ph: 0120-2764212, 276499

மண்புழு மன்னாரு!

காய்கறி, பழங்கள் மாதிரியான தோட்டக்கலைப் பயிர்களைப் பிரபலப்படுத்தறதுக்காக... தேசியத் தோட்டக்கலை வாரியம், பல வகையான மானியத் திட்டங்களை செயல்படுத்திக்கிட்டு இருக்கு. நாத்து உற்பத்தியில இருந்து, விற்பனை வரைக்கும் விதவிதமான மானியங்களை அள்ளிக் கொடுக்கிறாங்க. அதுமட்டுமில்லீங்க, முன்னோடி விவசாயிங்களோட பண்ணைகள், ஆராய்ச்சி நிலையங்கள்னு விவசாயிகளோட அறிவை அபிவிருத்தி செய்ற விஷயங்களுக்காகவும் நிதி உதவி செய்யுது, இந்த மையம். தமிழ்நாடு, புதுச்சேரிக்கான மண்டல அலுவலகம், சென்னையில இருக்கு.

தொடர்பு முகவரி: தேசியத் தோட்டக்கலை வாரியம், எண்: 37, இரண்டாவது மாடி, சிட்கோ ரெடிமேட் கார்மெண்ட் காம்ப்ளக்ஸ்,

கிண்டி தொழிற்பேட்டை, சென்னை-600032. தொலைபேசி: 044-22501151/22500965.

உள்ளூருக்குள்ளயே உழன்றுக்கிட்டிருக்காம... உற்பத்தி செய்ற பொருளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செஞ்சு, லாபம் பார்க்க விருப்பம் உள்ள விவசாயிகளுக்காக இந்தத் தகவல். 'அபீடா’னு சுருக்கமா அழைக்கப்படுற 'விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம்' (Agricultural and Processed Food Products Export Development Authority),காய்கறிகள், பழங்கள், ஆட்டிறைச்சினு எல்லா பொருள்களையும் ஏற்றுமதி செய்றது தொடர்பா விவசாயிகளுக்கு உதவி செய்யுது. சந்தை வாய்ப்பு பத்தின விவரங்களையும், ஆலோசனைகளையும்கூட இங்க தெரிஞ்சுக்கலாம். குறிப்பா, இயற்கை விவசாய விளைபொருட்களுக்கான விற்பனை வாய்ப்பு அதிகளவு இருக்கு. இந்த ஆணையத்தோட, தென்மண்டல அலுவலகம் கர்நாடக மாநிலம் பெங்களூருல இருக்கு.

தொடர்புக்கு:

Regional Incharge, Agricultural and Processed Food Products Export Development Authority, 12/1/1 ,Palace Cross Road, Bangalore-560 020. Telephone: 080-23343425/ 23368272

'நண்டு வளர்த்தா நல்லதா, இறால் வளர்ப்பு லாபமா?’னு ஆர்வத்தோட இருக்கற விவசாயிங்களுக்கு... 'வாங்கய்யா, வாங்க...’னு கூப்பிட்டு பயிற்சி கொடுத்துக்கிட்டு இருக்குது, சென்னையில இருக்கற மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையம். இந்த மையம், தமிழ்நாட்டுலதான் இருக்கு. ஆனா, நம்ம மாநில விவசாயிங்களைக் காட்டிலும், ஆந்திர மாநில விவசாயிங்கதான் வண்டி, வண்டியா கிளம்பி வந்து பயிற்சி எடுத்துக்கிட்டு போறாங்க... லாபகரமா மீன் வளர்க்கறாங்க.. நாமளும் இதுல கொஞ்சம் கவனம் செலுத்தினா என்ன?

தொடர்புக்கு: மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையம், 75, சாந்தோம் நெடுஞ்சாலை, ராஜாஅண்ணாமலைபுரம், சென்னை-600028. தொலைபேசி:044-24617523.

சூழ்நிலை காரணமா, சிலருக்கு முறையான கல்வி கிடைச்சிருக்காது. ஆனா, எல்லாரும் ஆச்சர்யப்படற அளவுக்கு விஞ்ஞான அறிவு சில விவசாயிங்ககிட்ட கொட்டிக் கிடக்கும். சைக்கிள் பெடலை சுத்தி தண்ணி இறைக்கறது, பூச்சிகளை விரட்ட புதிய கண்டுபிடிப்புனு விதவிதமா ஆராய்ச்சி செஞ்சு அசத்துற அந்த மாதிரி 'கிராமத்து விஞ்ஞானி’களை, வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து, ஊர், உலகம் அறிய பாராட்டி, பணப் பரிசு கொடுக்குது, குஜராத் மாநிலத்துல இருக்கற தேசிய கண்டுபிடிப்பு நிறுவனம் (National Innovation Foundation)விவசாய சம்பந்தமான கண்டுபிடிப்பு மட்டுமில்லீங்க, மக்களுக்கு உதவுற எந்த எளிமையான கண்டுபிடிப்புக்கும் பாராட்டும், பரிசும் காத்திருக்கு இங்க...

National Innovation Foundation-India Satellite Complex, Premchand Nagar, Jodhpur Tekra, Satellite, Ahmedabad 380015, Gujarat. Telephone: +91-79-2673 2456, +91-79-26753501, +91-79-26732095 Toll Free No: 1800-233-5555