Published:Updated:

கண்ணீர் வடிக்கும் தண்ணீர் தாய்!

Vikatan Correspondent

புதுவெள்ளம் படங்கள்: என்.ஜி. மணிகண்டன், தி. விஜய், எம்.குணசீலன், க. தனசேகரன்

'மேட்டூர்ல பத்தாயிரம் கன அடி...

ஒரு லட்சம் கன அடி'னு கணக்குப் போட்டு சந்தோஷப்படறீங்களே... ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரு நாள் மட்டுமே 6 டிஎம்சி தண்ணியை அப்படியே கடலுக்கு தாரை வார்த்துப்புட்டீங்களே?! இது, சென்னைக்கு மூணு மாசத்துக்கு தேவையான குடிநீர்னு நினைக்கறப்ப... ரத்தக் கண்ணீர்தான் வருது எனக்கு!

கண்ணீர் வடிக்கும் தண்ணீர் தாய்!

லர் தூவி, வாழ்த்தி வரவேற்கவெல்லாம் அமைச்சருங்களுக்கு நேரமிருக்கு... ஆனா, அங்கங்க இருக்கற ஏரி, குளம், குட்டைனு ஒழுங்கா தூர்வாரி, என்னைத் தேக்கி வெச்சுக்க மட்டும் நேரமில்ல. எல்லாம் ஸ்ரீரங்கத்துல பள்ளி கொண்டிருக்கற அரங்கனுக்கே வெளிச்சம்!

கண்ணீர் வடிக்கும் தண்ணீர் தாய்!
கண்ணீர் வடிக்கும் தண்ணீர் தாய்!

ம்... முக்கொம்புல வெள்ளக்காரன் அணை கட்டினதுக்குப் பிறகு, வேற அணையைச் சொல்லுங்க பார்ப்போம். 'கதவணைகள கட்டுங்க'னு விவசாயிங்க கதறிட்டே இருக்காங்க... அதைக் கண்டுக்கவும் ஆளில்ல. வீணா... நான் கடலுக்குப் போறத தடுக்கவும் நாதியில்ல...

கண்ணீர் வடிக்கும் தண்ணீர் தாய்!
கண்ணீர் வடிக்கும் தண்ணீர் தாய்!

'சிறுவாணி தண்ணி' பெருமைக்கு மட்டும்தான் ஊர் முழுக்க மணக்குது. ஆனா, ஏரி, குளம்னு கொங்கு மண்டலம் முழுக்க என்னைக் கொண்டுபோய் நிரப்பறதுக்கு, வழிய காணோம். ம்... மறுபடியும் வெள்ளக்காரன் உங்களையெல்லாம் ஆள வந்தாதான் அதெல்லாம் நடக்குமோ!

பில்லூர்ல இருந்து பளீர்னு பாய்ஞ்சு வந்தாலும், பவானி ஆத்துல என்கூட சாயப்பட்டறை கழிவுகளைக் கலந்துவிட்டு, மூச்சு முட்ட வைக்கறீங்க... பயிர், பச்சைகள வளர்த்து எடுத்து, விவசாயிகள வாழ வைக்க வந்த  என்னை, பக்குவமா பராமரிக்காம, வாட்டி வதைக்கறீங்க...

இதெல்லாம் அடுக்குமா?!

கண்ணீர் வடிக்கும் தண்ணீர் தாய்!

ம்... 2,000 ஆயிரம் வருஷத்துக்கு முன்ன கரிகாலன் கட்டிவெச்ச கல்லணை பத்தி பெருமை பேசுறீங்க. ஆனா, எந்த நோக்கத்துக்காக அவன் அணையைக் கட்டினாங்கறத மட்டும் மறந்துடறீங்க. விவசாயிகளுக்காக நீங்களும் அப்படி நாலஞ்சு விஷயத்தை செய்தாதானே... பொங்கிப் பாய்ஞ்சு வர்ற நான், தங்கித் தாலாட்டி... நீருட்டி போக வசதியா இருக்கும்!