காசி.வேம்பையன்

பளிச்... பளிச்...

நெல்வயலில் களையைத் தடுக்கும்.
இடுபொருள் செலவு குறைவு, கூடுதல் மகசூல்.
20-ம் நாள் முதல் அறுவடை.
தினம் 100 கிலோ. தீவனச் செலவு குறையும்.

கூட்டுப்பயிர் மூலமாகக் கூடுதல் வருமானம் பெற முடியும் என்பதைப் புரிந்துகொண்ட விவசாயிகள், ஒவ்வொரு பயிருக்கும் ஏற்ற ஒரு பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நெல் பயிருக்கு இடையில் அசோலாவை சாகுபடி செய்து வருகிறார் வேலூரைச் சேர்ந்த புருஷோத்தமன். இவர், இயற்கை வேளாண்மை இயக்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

வேலூருக்கு அருகே உள்ள காட்டுப்புத்தூரில் இருக்கும் தனது தோட்டத்தில் இருந்த புருஷோத்தமனை காலை வேளையன்றில் சந்தித்தோம்.

''தொட்டியில அசோலாவை வளர்த்து, மாடுகளுக்குக் கொடுக்கறதை அஞ்சி வருஷமா செய்துகிட்டிருக்கேன். அசோலாவை மாடுகளுக்குத் தீவனமா கொடுக்கும்போது அதுங்களோட உடல் ஆரோக்கியமா இருக்கு, நல்லமுறையில சினை பிடிக்குது, பாலோட அளவும் தரமும் அதிகமாகுது. இந்த வருஷம் ஒரு ஏக்கர்ல ஏ.டி.டி.-37 ரக நெல்லுக்கு இடையில அசோலாவைத் தூவிவிட்டேன். அடர்த்தியா வளர்ந்து கிடக்கு. தினம் 50 கிலோ அசோலாவை எடுத்து மாடுகளுக்குத் தீவனமா கொடுத்துகிட்டிருக்கேன். இந்த ஒரு மாசத்துல ஒண்ணரை டன் அளவுக்கு அசோலாவை எடுத்திருக்கேன்'' என்று சொன்னவர், நெல் வயலில் அசோலாவை வளர்க்கும் விதம் பற்றி விவரிக்கத் தொடங்கினார்- பாடமாக..!

7-ம் நாள் விதைப்பு!

''நெல் சாகுபடி செய்யும் அனைத்து வயல்களிலும் அசோலாவை சாகுபடி செய்யலாம். இயற்கை விவசாயம் செய்யும் வயல்களில் இதன் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். நாற்று நடவு செய்த 7-ம் நாள் வயலில் அசோலாவைத் தூவ வேண்டும். இதற்கு அளவு கிடையாது, அதிகபட்சம் ஏக்கருக்கு 200 கிலோ வரை தூவலாம் (இவர் ஏக்கருக்கு 5 கிலோ தூவி உள்ளார்). பயிர்களுக்கு இடைவெளியில் கிடைக்கும் காற்று, சூரிய ஒளியை பயன்படுத்திக்கொண்டு அசோலா வேகமாக வளரும். நிலத்தில் தூவி விட்ட 15-ம் நாளில் பச்சைப் போர்வை போர்த்தியது போல, நிலம் முழுவதும் அசோலா படர்ந்து விடும். 20-ம் நாளில் இருந்து ஒரு ஏக்கரில் தினமும் 50 முதல் 100 கிலோ வரை அசோலாவை அறுவடை செய்யலாம்.

களை கட்டுப்பாடு!

அசோலா, நிலம் முழுவதும் படர்ந்து விடுவதால், களைகள் குறைவாக இருக்கும். ஒற்றை நாற்று (ராஜராஜன்-1000) முறையில் நடவு செய்த வயலில் 15-ம் நாளில் இருந்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை கோனோவீடரை உருட்ட வேண்டும். அப்படி உருட்டும்போது, கோனோவீடர் சக்கரத்தில் அகப்படும் அசோலாவையும் அழுத்தி விடலாம். இதனால் மண்ணுக்கு அதிக தழைச்சத்து கிடைக்கும். தூர்கள் அதிக அளவில் வெடித்து வெளிவரும். சாதாரண முறையில் நடவு செய்த நிலத்தில், அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கும் களையைக் கையால் எடுத்துவிட்டு, அசோலாவை, மண்ணுக்குள் மிதித்துவிட வேண்டும்.

நடவு செய்த 20-ம் நாளில், 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற விகிதத்தில் உயிர் அமுதத்தை (பார்க்க, பெட்டிச்செய்தி) கலந்து, தெளிக்க வேண்டும் (ஏக்கருக்கு 10 டேங்க்). உயிர் அமுதம் பயிர் வளர்ச்சிக்குத் தேவையானச் சத்துக்களைக் கொடுப்பதோடு, பூச்சித் தாக்குதலையும் குறைக்கிறது.

30-ம் நாள், 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்கிற விகிதத்தில் மூலிகைப் பூச்சிவிரட்டியை கலந்து, தெளிக்க வேண்டும் (ஏக்கருக்கு 10 டேங்க்).

40-ம் நாளில் பாசன நீரோடு, ஏக்கருக்கு 20 லிட்டர் பஞ்சகவ்யாவையும், 50-ம் நாள் பாசனநீரோடு 20 லிட்டர் உயிர் அமுதத்தையும் கலந்துவிட வேண்டும். இதேபோல, 90-ம் நாள் வரை, 10 நாட்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா, உயிர் அமுதம் என மாற்றி மாற்றி கொடுக்க வேண்டும்.

குறையும் செலவு... கூடும் மகசூல்!

அசோலாவை நெல் வயலில் வளர்க்கும்போது, களை கட்டுப்படுகிறது. நீர் ஆவியாவது குறைகிறது. வழக்கமாக வாரம் ஒரு பாசனம் செய்பவர்கள், 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு பாசனம் செய்தால், போதும். அசோலா, காற்றிலுள்ள நைட்ரஜனை மண்ணில் பிடித்து வைக்கும் வேலையைச் செய்வதால், ரசாயன முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு 30 சதவிகிதத்துக்கும் மேல் உரச் செலவு குறைகிறது.

இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இடுபொருள் செலவே தேவைப்படாது. நெல் பயிரின் வளர்ச்சியிலும் அசோலா முக்கிய பங்காற்றுகிறது. சாதாரணமாக 15 தூர்கள் வெடிக்கும் நிலத்தில், 40 தூர்கள் வரை வெடிக்கும். இதன் காரணமாக வழக்கமான மகசூலைவிட 10 முதல் 20 சதவிகிதம் கூடுதல் மகசூல் கிடைக்கும்.

நெல் அறுவடை முடிந்தவுடன், தனியாகவோ அல்லது நெல் வயலின் ஒரு ஓரத்திலோ வாய்க்கால் போல எடுத்து, அதில் தண்ணீர் விட்டு அசோலாவை வளர்த்து வரவேண்டும். அடுத்த முறை நெல் சாகுபடி செய்யும்போது, மீண்டும் அவற்றை வயல் முழுக்கத் தூவிவிடலாம்.

நிறைவாகப் பேசிய புருஷோத்தமன், ''அசோலாவை நெல் பயிருக்கு இடையில் தூவி விட்டா போதும். அதுக்குனு தனியா எந்தப் பராமரிப்பும் தேவையில்ல. தானாவே வளர்ந்து வந்துடும். நெல் மகசூலைக் கூட்டி, தீவனச் செலவைக் குறைச்சி, பாலோட அளவைக் கூட்டினு ஒரு சாதனையே படைக்கற இந்த அசோலா... உண்மையிலேயே விவசாயிகளுக்குக் கிடைச்ச அமுதசுரபி!

என்கிட்ட இருக்கற 5 மாடுகளுக்கு தினம் 5 கிலோ வீதம் அசோலாவைக் கொடுக்குறேன். இதனால ஒரு மாட்டுக்கு 20 ரூபாய் கணக்குல 5 மாட்டுக்கும் சேத்து, 100 ரூபாய் தீவனச் செலவு மிச்சமாகுது. அதோட மண்புழு உரம் தயாரிக்கவும் அசோலாவைப் பயன்படுத்துறேன்'' என்று சொன்னார்.

படங்கள்:ச.வெங்கடேசன்
தொடர்புக்கு, புருஷோத்தமன், அலைபேசி: 98947-84863.

உயிர் அமுதம்!

சாணம் 10 கிலோ, மாட்டுச்சிறுநீர் 10 லிட்டர், கருப்பட்டி அல்லது கருப்பு வெல்லம் ஒரு கிலோ, கடுக்காய்த் தூள் ஒரு கிலோ, புளித்தத் தயிர் ஒரு லிட்டர் ஆகியவற்றை கலந்து மூன்று நாட்கள் நிழலில் வைத்திருந்தால், உயிர் அமுதம் தயாராகி விடும். மூன்று நாட்களுக்குப் பிறகு, ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்குத் தெளிக்க வேண்டும் அல்லது ஏக்கருக்கு 20 லிட்டரைப் பாசன நீருடன் கலந்து விடலாம்.

மாட்டுக்கு 2 கிலோ!

மாடுகளுக்கு அசோலா கொடுப்பதைப் பற்றி பேசிய வேலூர் ஆவின் நிறுவன மேலாளர் டோமினிக், ''அசோலாவை மாடுகளுக்கு கொடுக்கும்போது அவற்றில் இருக்கும் 33% முதல் 44% புரதச்சத்துகளால் பாலின் தரம் கூடுவதுடன், தீவனச் செலவும் குறைகிறது. ஒரு மாட்டுக்கு தினம் ஒரு கிலோ முதல் 2 கிலோ வரை அசோலாவைக் கொடுத்தால் போதும். கறவை மாடு வளர்ப்பு பற்றி நாங்கள் கொடுக்கும் பயிற்சிகளில் அசோலா வளர்ப்பு முறைகளையும் கற்றுக் கொடுக்கிறோம்'' என்றார்.

தண்ணீரில் கழுவ வேண்டும்!

மாடுகளுக்கு அசோலாவைக் கொடுக்கும்போது, தண்ணீரில் நன்றாகக் கழுவிய பிறகே கொடுக்க வேண்டும். புதிதாக இதைக் கொடுத்து பழக்கும்போது சில மாடுகள் சாப்பிடாது. அத்தகைய மாடுகளுக்கு தவிடுடன் கலந்து கொடுத்துப் பழக்க வேண்டும். அல்லது காய வைத்து பொடியாக்கி தீவனத்துடன் கலந்து கொடுக்கலாம். மாடுகளுக்கு மட்டுமல்லாமல் ஆடு, நாட்டுக்கோழி, வான்கோழி, மீன் ஆகியவற்றுக்கும் கொடுக்கலாம். நன்றாக சுத்தம் செய்து வடை செய்து நாமும் சாப்பிடலாம்.

இப்படித்தான் வளர்க்க வேண்டும்... அசோலா!

அசோலாவைத் தனியாக வளர்க்க நினைப்பவர்கள்... நான்கு அடி அகலம், தேவைக்கேற்ப நீளம் உள்ள ஒரு தொட்டியை, தரையில் உருவாக்கி வளர்க்கலாம். அதாவது, நிலத்தைச் சமமாக்கி, நான்கு பக்கமும் செங்கற்களை வரிசையாக வைத்து, அதன் மீது பிளாஸ்டிக்-ஷீட்டை விரித்து, செயற்கையாக தொட்டி போல தயார் செய்துகொள்ள வேண்டும். தொட்டியில், பிளாஸ்டிக் ஷீட் தெரியாத அளவுக்கு சன்னமாக வளமான மண்ணைத் தூவ வேண்டும்.

இதன் மேல் 10 கிலோ பசுஞ்சாணத்தைத் தண்ணீர்விட்டு கெட்டியாக கரைத்துத் தெளிக்க வேண்டும். அதற்கு மேலாக, ஒரு கிலோ கிரசர் மண் அல்லது போர்வெல் போட்ட இடத்தில் உள்ள மண் போட வேண்டும். இதற்கு மேலாக தண்ணீரை ஊற்ற வேண்டும். மண், சாணக் கரைசல், கிரசர் தூள், தண்ணீர் எல்லாம் சேர்ந்து தொட்டியில் பாதி உயரம் அல்லது இரண்டரை அங்குல உயரம் இருந்தால் போதும்.

பிறகு, தொட்டியில் அசோலாவைத் தூவி விட்டால், படர்ந்து பெருகத் தொடங்கும். அடிக்கடி தொட்டியைக் கலக்கி விடவேண்டும். 10 நாளைக்கு ஒரு முறை கொஞ்சம் சாணத்தைக் கரைத்து ஊற்ற வேண்டும். 15-ம் நாளுக்குப் பிறகு, அசோலா பெருகி நிற்கும். அதில் நான்கில் ஒரு பங்கை அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம்.