ஆர். குமரேசன்

பளிச்... பளிச்...

குறைந்தத் தண்ணீரே போதும்.
பராமரிப்புத் தேவையில்லை.
ஏக்கருக்கு

80 ஆயிரம்.

நவநாகரிக மங்கைகளாக இருந்தாலும் சரி, கிராமத்துப் பெண்களாக இருந்தாலும் சரி... அவர்களில் மருதாணியை விரும்பாதப் பெண்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு மகளிர் மத்தியில் மருதாணிக்கு மவுசு உண்டு. அதனால்தான் இன்றும்கூட வீடுகளில் மருதாணிச் செடியை வளர்க்கும் பழக்கம் இருக்கிறது!

மெகந்தி போடுவதற்கு, இளநரைக்கான தைலம் என்று பல வகைகளில் பயன்படுவதால் மருதாணிக்கான தேவை இன்று அதிகரித்து வருகிறது. இதனால், மருதாணியையே தனிப்பயிராகத் தோட்டங்களில் வளர்த்து, லாபம் பார்க்கக் கூடிய வாய்ப்பு இன்று பெருகி வருகிறது. அந்த வரிசையில், மதுரை மாவட்டம், டி. கல்லுப்பட்டியைச் சேர்ந்த ராஜகோபால், மருதாணி விவசாயத்தில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.

மழையைப் பார்த்து மாமாங்கம் ஆன பகுதி போல் காய்ந்த புல், பூண்டுகளுடன் வெறுமையாகத்தான் காட்சியளிக்கிறது டி. கல்லுப்பட்டி. சுட்டெரிக்கும் வெயிலில், கருப்பு மையைக் கொட்டியது போல காணப்படும் கரிசல் பூமியில், அங்கொன்றும், இங்கொன்றுமாக பெயருக்குத்தான் நடக்கிறது விவசாயம். ஊரை ஒட்டிய பெரும்பாலான நிலங்கள், ஏதாவது ஒரு பெயர் சூட்டப்பட்ட நகராக, பெயர்ப் பலகைகளைத் தாங்கிக் கொண்டு, வீட்டுமனைகளாக மாறிக் கிடக்கின்றன. அவற்றுக்கு மத்தியிலும் மலர்ந்து சிரிக்கிறது, ராஜகோபாலின் மருதாணித் தோட்டம்!

பாசனம், அறுவடை மட்டுமே வேலை!

மகிழ்ச்சியோடு வரவேற்ற ராஜகோபால், ''விவசாயம் எங்க குலத்தொழில். இடையில நான் வாத்தியார் வேலைக்குப் போயிட்டேன். இருந்தாலும், விவசாயத்தை விடல. எங்களுக்குச் சொந்தமா 40 ஏக்கர் மானாவாரி காடு இருக்கு. ஆரம்பத்துல அந்த நிலங்கள்ல சிறுதானியங்களைத்தான் பயிர் பண்ணிக்கிட்டு இருந்தேன். வேலைக்கு ஆள் தட்டுப்பாடு வந்த பிறகு, சிறுதானியங்களை விட்டுட்டு மரக்கன்றுகளை நட்டுட்டேன்.

ஊருக்குப் பக்கத்துல இருக்கற இந்த மூணு ஏக்கர், கொஞ்சம் தண்ணித் தட்டுப்பாடு உள்ள பகுதி. அதுல ரெண்டு ஏக்கர்ல இயற்கைச் சாயம் தயாரிக்கப் பயன்படுற அவுரியை நடவு செஞ்சிருக்கேன். அரை ஏக்கர்ல மருதாணியை சாகுபடி செஞ்சிருக்கேன். நடவு பண்ணுன பின்னாடி பாசனமும், அறுவடையும்தான் மருதாணியில நாம பாக்க வேண்டிய பண்டுதம். இதோட வேர் அவ்வளவு சீக்கிரமா சாகாதுங்கிறதால வருஷக் கணக்குல காய்ஞ்சு கிடந்தாலும்... ஒரு மழை பெய்ஞ்சா 'குப்’புனு தழைஞ்சிடும். அதுனாலதான் இதுக்கு 'மருதோன்றி’ங்கற பேரே வந்துச்சு. அதுதான் காலப்போக்குல மருவி 'மருதாணி’னு ஆயிடுச்சு.

வறண்ட பகுதியிலும் வளரும்!

ஆரம்பத்துல வேலிக்காகத்தான் இந்த மருதாணியை வரப்போரமா நடவு செஞ்சேன். நல்லா வளர்ந்த பிறகு, மூணு மாசத்துக்கு ஒரு தடவை, மருதாணி இலை விற்பனை மூலமா 1,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. 'வேலியா வைக்கும்போதே இவ்வளவு வருமானம் கிடைக்குதே, இதையே ஏன் தனிப்பயிரா செய்யக்கூடாது’னு யோசனை வந்துச்சு. அதுக்கப்பறம்தான் வேலியில இருந்த குச்சிகளை வெட்டி, பதியன் போட்டு ஒரு ஏக்கர்ல நட்டேன்.

வளர்ந்த பிறகு, 25 செடியில மட்டும் முள் இல்லாம இருந்துச்சு. முள் இருக்கற செடியை விட, முள் இல்லாத செடியில அறுவடை செய்யறது ஈசியா இருந்துச்சு. அதனால அந்த வயலை அழிச்சுட்டு, முள் இல்லாத செடிகள்ல இருந்து மட்டும் குச்சிகளை வெட்டிப் பதியன் போட்டு, இந்த அரை ஏக்கர்ல நடவு செஞ்சி ரெண்டு வருஷமாயிடுச்சு. வாய்ப்பு இருக்கும்போது மட்டும்தான் பாசனம் செய்வேன். 6 மாசம்கூட தொடர்ந்து பாசனம் செய்யாம இருந்திருக்கேன்.

கிட்டத்தட்ட மானாவாரி மாதிரியே சாகுபடி செய்றதால மூணு மாசத்துக்கொரு தரம் அறுவடை செய்வேன். இதையே முறையா 15 நாளைக்கு ஒரு தண்ணி கொடுத்தா... ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். எப்பவாவது தண்ணி பாய்ச்சுறதைத் தவிர வேறெந்த பண்டுதமும் நான் பாக்குறதில்லை'' என்றவர், மருதாணி சாகுபடி செய்யும் முறைகளை பற்றிச் சொல்லத் தொடங்கினார், பாடமாக.

குச்சியை நட்டா நல்லது!

மருதாணி அனைத்து வகை நிலங்களிலும் நன்றாக வளரும். தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள இடங்களுக்கு ஏற்றப் பயிர். இதை விதை மற்றும் குச்சி மூலமாக சாகுபடி செய்யலாம். விதை மூலமாக நாற்று தயாரித்து நடவு செய்தால், முதல் அறுவடைக்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். குச்சி மூலமாக நாற்று தயாரித்து நடவு செய்தால், ஆறு மாதங்களில் அறுவடை செய்து விடலாம் (இவர் குச்சி மூலமாக நடவு செய்திருக்கிறார்).

மருதாணிச் செடியில் பென்சில் கனம் உள்ள குச்சிகளை, 9 அங்குல நீளத்துக்கு வெட்டிக் கொள்ள வேண்டும். தொழுவுரம், மண் கலந்த கலவையை நாற்றுத் தயாரிக்கும் பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி, அதில் குச்சிகளை நட்டு, நிழலில் வைத்துத் தண்ணீர் ஊற்ற வேண்டும். இப்படி மூன்று மாதம் வளர்த்த பிறகு, வயலில் நடவு செய்யலாம்.

ஏக்கருக்கு 8 ஆயிரம் செடிகள்!

ஒரு ஏக்கர் நிலத்துக்கு 5 வண்டி தொழுவுரம் போட்டு, நன்றாக உழவு செய்து மண்ணைப் புழுதியாக்கிக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு அடி அகலத்துக்கு மேட்டுப்பாத்திகளை நீள, நீளமாக அமைத்துக் கொள்ள வேண்டும். நீளத்தை இடவசதிக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம். பாசனம் செய்வதற்காக ஒரு பாத்திக்கும் அடுத்த பாத்திக்கும் இடையில் ஒரு அடி இடைவெளி இருக்க வேண்டும். பாத்தியின்

மையத்தில் செடியை நடவு செய்ய வேண்டும். செடிக்குச் செடி இரண்டு அடி இடைவெளியும், வரிசைக்கு வரிசை 3 அடி இடைவெளியும் இருக்கவேண்டும். இப்படி நடவு செய்தால், ஏக்கருக்கு 8 ஆயிரம் செடிகள் வரை தேவைப்படும். குறைந்த நிழலில் மருதாணி நன்றாக வளரும் என்பதால், வயலில் ஆங்காங்கே அகத்தி விதையையும் ஊன்றிவிட வேண்டும். தண்ணீர் பாயும் வாய்மடைகளில் ஒரு அடி ஆழ, அகலத்தில் குழி எடுத்து அதில் சாணம் மற்றும் இலை, தழைக் கழிவுகளைப் போட்டு, பாசனநீர் இந்தக் குழிகளில் நிரம்பி வழிந்து செல்லுமாறு அமைக்க வேண்டும். நடவு செய்த உடனே ஒரு தண்ணீர் கொடுக்க வேண்டும். செடி உயிர் பிடித்த பிறகு, 15 நாட்களுக்கு ஒரு முறைகூட தண்ணீர் பாய்ச்சலாம். இதற்குக் களை எடுக்கத் தேவையில்லை. பூச்சி, நோய் தாக்காது என்பதால் பூச்சிவிரட்டி எதுவும் தெளிக்கத் தேவையில்லை.

அரை ஏக்கருக்கு 40 ஆயிரம்!

நடவு செய்த 6|ம் மாதத்தில் இருந்து அறுவடையைத் தொடங்கலாம். அதிலிருந்து மூன்று மாதத்துக்கு ஒரு தடவை அறுவடை செய்யலாம். ஒரு தடவை நடவு செய்தால், இருபது வருடம் வரை மகசூல் கொடுக்கும். மருதாணியில் இலைகள்தான் விற்பனைப் பொருள் என்பதால், செடியின் நுனிப்பகுதியில் அரை அடி உயரச் செடியைக் கொத்தாகக் கையில் பிடித்து, பண்ணை அரிவாள் மூலமாகக் குச்சியுடன் சேர்த்தே அறுத்து எடுத்து, செடிக்கு அருகிலேயே நிலத்தில் போட்டுக் காயவிட வேண்டும்.

அடுத்த நாள், அவற்றை மொத்தமாக சேகரித்து, களத்தில் காய வைக்க வேண்டும். களம் இல்லாதவர்கள் வயலிலேயே சமமான இடத்தில் தார்ப்பாயை விரித்தும் காய வைக்கலாம். மூன்றாவது நாள், கம்பை வைத்து அடித்தால், குச்சியில் இருந்து இலைகள் உதிர்ந்து விடும்.

இந்த இலைகளை எடை போட்டு விற்பனை செய்யலாம். மருதாணி இலையை வாங்குவதற்காகவே வியாபாரிகள் இருக்கிறார்கள். அதனால் அறுவடை நேரத்தில் தகவல் கொடுத்தால், வயலுக்கே வந்து, ஒரு கிலோ மருதாணியை 25 ரூபாய்க்கு வாங்கிக் கொள்வார்கள்.

ஒரு ஏக்கரில் இருந்து மூன்று மாதத்துக்கு ஒரு தடவை ஒரு டன் மகசூல் கிடைக்கும். ஒரு அறுவடைக்கு 2,400 ரூபாய் செலவாகும். முதல் வருடம் மூன்று முறையும், இரண்டாவது வருடத்தில் இருந்து வருடத்துக்கு நான்கு முறையும் மகசூல் கிடைக்கும். முதல் வருடத்தில் செலவு போக 56 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது வருடத்தில் இருந்து 81 ஆயிரம் ரூபாயும் லாபமாக கிடைக்கும்.

சாகுபடி பாடம் முடித்த ராஜகோபால், ''எனக்கு அரை ஏக்கரில் இருந்து ஒரு தடவைக்கு 500 கிலோ வரை மகசூல் கிடைக்குது. செலவெல்லாம் போக வருஷத்துக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. எனக்குத் தெரிஞ்சு, எந்த பண்டுதமும் இல்லாம இவ்வளவு வருமானம் கொடுக்கக்கூடிய பயிர் வேற எதுவுமே இல்லீங்க'' என்றார் மகிழ்ச்சியுடன்.

படங்கள்:என்.ஜி. மணிகண்டன்
தொடர்புக்கு, ராஜகோபால், அலைபேசி: 98421-75940.

விற்பனை வாய்ப்பு எப்படி?

ராஜகோபாலிடம் மருதாணியை வாங்கிக் கொள்ளும் இதே பகுதியைச் சேர்ந்த வியாபாரி கருப்பையாவிடம் பேசினோம். ''மருதாணியோட பயன்பாடு வட நாட்டுல அதிகமா இருக்கு. நாங்களும் விவசாயிககிட்ட வாங்குற இலைகளை வடக்கதான் அனுப்புறோம். கூந்தல் தைலம், மெகந்தி மாதிரியானப் பொருட்கள் தயாரிக்க மருதாணியைப் பயன்படுத்துறாங்க. இதோட தேவைக்கு ஏற்ப தமிழ்நாட்டுல விளையறதில்லை. தென் மாவட்ட விவசாயிகள் மருதாணியை விளைய வெச்சா வாங்கிக்கத் தயாரா இருக்கோம். மருதாணி மட்டுமல்லாம, வேற மூலிகைகள் இருந்தாலும் வாங்கிக்குவோம்'' என்றார்.

தொடர்புக்கு, கருப்பையா,
அலைபேசி: 98423-95441.

மருதாணி சிறு குறிப்பு!

மருதாணி... மறுதோன்றி, ஐவணம், அழவணம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன. இதன் வடமொழி பெயர்... மெகந்தி. இதன் தாவரவியல் பெயர் 'லசோனியா இனெர்மிஸ்' (Lawsonia inermis). இதன் தாயகம் வட ஆப்பிரிக்கா.

இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தில்தான் இதை வணிகரீதியாக வளர்க்கிறார்கள். இதன் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், வாசனைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. சிறந்த கிருமி நாசினியாகவும் இது பயன்படுகிறது. நகச்சுத்தி மற்றும் புண்களுக்கு இது நல்ல மருந்து. கைகளில் இதைப் பூசிக் கொண்டால், உடல் வெப்பம் குறையும். இதன் இலையைக் காய்ச்சும்போது கிடைக்கும் தைலம்... இளநரையை போக்கும். இதன் பூவை ஒரு துணியில் சுற்றி தலைமாட்டில் வைத்துப் படுத்தால்... நன்றாகத் தூக்கம் வரும்.