எச்சரிக்கை
ஆர்.குமரேசன்

பளிச்... பளிச்...

காய்ச்சலும், கொப்புளமும்தான் அறிகுறி.
பாதிக்கப்பட்ட ஆடுகளைத் தனியாகப் பிரித்துவிட வேண்டும்.
மார்ச், ஏப்ரலில் தடுப்பூசி போட வேண்டும்.

தமிழகத்தில் கோடைக் காலம் ஆரம்பித்து விட்டது. 'அப்பப்பா... என்ன வெயில். போன வருஷத்தைவிட, இந்த வருஷம் வெயிலோட தாக்கம் கூடுதலா இருக்கும் போலிருக்கே...' என்றபடி வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக பல்வேறு முயற்சிகளில் இறங்கிவிட்டனர் மனிதர்கள்! ஆனால், கால்நடைகள்?

பொதுவாக வெயில் காலத்தில் மனிதர்களைவிட கால்நடைகளின்பாடுதான் படு திண்டாட்டமாக இருக்கும். எனவே, அவற்றின் மீதான பராமரிப்பில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டிய நேரம் இது.

இதோ... கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக திகழும் ஆடுகளை, அம்மை நோய் தாக்காமல் தடுக்கும் முறைகள் குறித்து, குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தைச் சேர்ந்த முனைவர். ரா. தங்கதுரை பேசுகிறார்...

நோய் அறிகுறிகள்!

''கோடையில ஆடுகளைத் தாக்குற மோசமான நோய்தான் அம்மை. இந்த நோய் கண்ட ஆடுகளுக்கு ஆரம்பத்துல லேசாகவும், பிறகு அதிகமாகவும் காய்ச்சல் இருக்கும். சரியா மேயாது. தொடர்ச்சியா மூச்சிரைப்பு இருக்கும். பிறகு, உடம்புல சின்னச் சின்னக் கொப்புளங்கள் உண்டாகும். இதுதான் அம்மை நோயோட முதல் அறிகுறி. இந்தக் கொப்புளங்கள் உடம்பு முழுக்க... குறிப்பா, ரோமம் இல்லாத பகுதியில அதிகமா இருக்கும். நோய் தாக்குன ரெண்டு, மூணு நாள்ல தோல்ல தழும்பு மாதிரி திட்டுத்திட்டா தெரியும்.

பெட்டை ஆடுகளைப் பொறுத்த மட்டும், பால் மடியில கொப்புளம் ஏற்பட்டு மடிநோயும் உருவாகும். மூக்கு, இமைப்படலத்துல அழற்சி இருக்கும். கண்ணிமை தடிச்சுடும். கண், மூக்கிலிருந்து தண்ணி மாதிரி ஒரு திரவம் ஒழுகும். ஆடுக சோர்ந்து, நடை தள்ளாடி, உணவு எடுக்க முடியாம ஒரு கட்டத்துல இறந்துடும். சினை ஆடுக, குட்டிகள வெளிய தள்ளிடும். உடம்புல நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமா இருக்கற ஆடுக மட்டுமே இறப்பிலிருந்து தப்பிக்கும். இருந்தாலும், உடம்பு இளைச்சுப் போயிடும்.

நோய் பரவும் முறைகள்!

அம்மை நோய்க்கான அறிகுறி தெரிஞ்சதும், உடனடியா கால்நடை மருத்துவர்கிட்ட ஆலோசனை கேட்கறதுதான் முக்கியமான வேலையா இருக்கணும். ஒரு பகுதியில அம்மை வந்துட்டா... அக்கம் பக்கம் வேகமா பரவும். பாதிக்கப்பட்ட ஆடுக ஒண்ணு மேல ஒண்ணு உரசுறது மூலமாகவும், சுவாசத்தின் மூலமாகவும், பண்ணைகள்ல குடிக்கறதுக்காக வெக்குற தண்ணி மூலமாகவும், தீவனம் மூலமாகவும் இந்த நோய் பரவும். ஆடு வளர்க்கறவங்க... நோய் தாக்குன ஆட்டுப் பண்ணைக்குள்ள நடமாடிட்டு, நோய் தாக்காத ஆடுகள் இருக்கற இடத்துல நடமாடினாலும் நோய்க்கிருமி சுலபமா பரவ வாய்ப்பிருக்கு.

குட்டியிலிருந்து பெரிய ஆடுக வரைக்கும் பாரபட்சமில்லாம அம்மை நோய் தாக்கும். இது, செம்மறியாட்டு மந்தையைத் தாக்கினா... உயிர்ச்சேதம் அதிகமாகி, பொருளாதார இழப்பு ஏற்படும். வெள்ளாட்டுல உயிர் இழப்பு குறைவா இருக்கும்.

சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்!

பாதிக்கப்பட்ட ஆடுகளை மந்தையிலிருந்து பிரிச்சு, தனியா பராமரிக்கணும். பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல் (1 சதவிகிதம் பொட்டாசியம் பர்மாங்கனேட், 1,000 சதவிகிதம் தண்ணீர் கலந்த கரைசல்) தயாரிச்சி, உடம்புல இருக்கற புண்ணுகள தினமும் கழுவி, போரிக் ஆசிட் பவுடர் இல்லன்னா... ஆன்ட்டிசெப்டிக் மருந்தையோ தடவணும். நாட்டு வைத்திய முறையில் வேப்ப எண்ணெய்யில மஞ்சள் தூளை கலந்து தினமும் புண்ணு மேல தடவலாம். வாயில அம்மைக் கொப்புளங்கள் இருந்தா... ஆடுகளால தீனி எடுக்க முடியாது. அந்த ஆடுகளுக்கு கஞ்சி வெச்சி தினமும் கொடுக்கணும்.

நோய் வராம தடுக்க, அம்மை நோய்க்கான தடுப்பு ஊசியைப் போடறது நல்லது. குட்டி ஆடுகளுக்கு 3-ம் மாசத்திலும், அதுக்குப் பிறகு தொடர்ந்து ஒவ்வொரு வருஷமும் பிப்ரவரி, மார்ச் இல்லனா... ஏப்ரல் மாசத்திலும் போடணும். இந்த ஊசியை நோய் கண்ட ஆடுகளுக்குப் போடக்கூடாது. போட்டா... ஆடுக செத்துடும். நோய் அறிகுறி இருக்கக்கூடிய பகுதியில வளர்க்கற ஆடுகளுக்குப் போடலாம்.

அனைத்து கால்நடை மருந்துக் கடைகள்லயும் செம்மறியாட்டுக்கு, வெள்ளாட்டுக்குனு தனித்தனியா அம்மை தடுப்பூசி கிடைக்குது. அதை வாங்கி வெயில் காலம் தொடங்குறப்பவே போட்டுட்டா... நிச்சயம் உயிர்ச்சேதத்தை தவிர்க்கலாம். ஒரு தடவை அம்மை நோய் தாக்குன ஆடுகளை பிறகு எப்பவுமே இந்த நோய் தாக்காது.''

தொடர்புக்கு, ரா. தங்கதுரை, அலைபேசி : 94445-46027.