மசானோபுஃபுகோக்கா

4 உழவில்லாத, செலவில்லாத உற்சாக மகசூல் தொடர்!

முப்பது ஆண்டுகளாக வெளி உலகத் தொடர்புகள் ஏதுமின்றி, உள்ளூர் மக்களிடமும் வெகு குறைவானத் தொடர்புடனும் என் பண்ணைக்குள்ளேயே வாழ்ந்து வந்தேன். 'ஏதும் செய்யாத விவசாய முறை' (DO nothing farm) என்பதை நோக்கிய ஒரே முனைப்பில், இந்த 30 ஆண்டுகளும் இயங்கினேன்.

இதை இப்படி முயற்சிக்கலாமா... அதை எப்படி முயற்சிப்பது?' என ஒன்றின் மீது மற்றொன்று என்று பல முறைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்குவது என்பதே புதிய முறையை உருவாக்குவதற்குரிய பொதுவான வழியாகும். இதுதான் நவீன விவசாயம். விவசாயிகளுக்கு ஓய்வே இல்லாமல் ஆக்கிவிட்டது இந்த நவீன விவசாயம். வேலை மேல் வேலைகளுக்குள் தள்ளிவிட்டது.

இதற்கு நேர் எதிரானது என் வழி. கூடுமானவரை இயற்கையோடு கைகோத்துக் கொண்டு, இயற்கைச் சூழலின் உதவியோடு கூடிய இயற்கை விவசாய முறைக்கு முயற்சிக்கிறேன். இது வேலைகளைக் கூடுதலாக்கவோ... கடுமையாக்கவோ செய்யாமல், முற்றாக எளிமையாக்கும் என்பதுதான் சிறப்பு.

'இதைச் செய்யாமல் விட்டுவிட்டால் என்ன? அதைச் செய்யாமல் விட்டுவிட்டால் என்ன?' இதுவே என் சித்தாந்த முறையாக இருந்தது. இறுதியாக... நான் உழவு செய்யத் தேவையில்லை, ரசாயன உரங்கள் இடத் தேவையில்லை, எரு தயாரிக்கத் தேவையில்லை, பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தேன். நீங்கள் சரியான வழியில் செய்யத் தொடங்கினால், உண்மையில் மிகச் சில விவசாய வேலைகளே தேவைப்படும்.

ரசாயனத் தொழில்நுட்பங்களால் நிலம் அவற்றுக்கு அடிமைப்பட்டுவிட்டது. அதன் காரணத்தால் இயற்கையின் சமநிலை குலைந்துவிட்டது. இந்தக் காரணத்தாலேயே புதிய புதியத் தொழில்நுட்பங்கள் தேவைப்படுவதாகிவிட்டது.

இது விவசாயத்தில் மட்டுமல்ல, மனித சமூகத்தின் பிற பகுதிகளுக்கும் பொருந்தும்.

மக்கள், ஆரோக்கியமில்லாத இயற்கைச் சூழலை உருவாக்கும்போது... மருத்துவர்களும் மருந்துகளும் அவசியமான ஒன்றாகி விடுகிறது. இப்போது நடைமுறையில் உள்ள பள்ளிப் படிப்புக்கு எவ்வித மதிப்பும் இல்லை. ஆனால், 'ஒருவன் கல்வி கற்றவனாக இருக்க வேண்டும்' என்ற கட்டாயத்தை மனிதகுலம் உருவாக்கும்போது, தேவையற்ற ஒன்றே தேவையான ஒன்றாகிவிடுகிறது.

உலகப்போர் முடிவதற்கு முன்பாக, ஆரஞ்சுத் தோப்புக்குச் சென்று 'இயற்கை விவசாயம்' என்று நான் நினைத்திருந்ததைச் செயல்படுத்தத் தொடங்கினேன். கவாத்து செய்யவில்லை. தோப்பை அதன் போக்குக்கு விட்டுவிட்டேன். கிளைகள் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்து கொண்டன. மரங்களைப் பூச்சிகள் தாக்கின.

அந்த இரண்டு ஏக்கர் தோப்பில் இருந்த ஆரஞ்சு மரங்களில் ஏறத்தாழ எல்லா மரங்களுமே நோயுற்று மடிந்தன. அந்த நிமிடத்திலிருந்து இயற்கையான வழிமுறை எது? என்ற கேள்வியே மேலோங்கியிருந்தது. இதற்கு விடை கண்டறிவதற்குள் மேலும் 400 மரங்களை பலி கொடுத்தேன். இறுதியில், 'இதுதான் இயற்கையான வழிமுறை என்று உறுதிபடக் கூறும் முடிவை அடைந்தேன்.

தங்களது இயற்கையான வடிவமைப்பிலிருந்து மரங்கள் எந்த அளவு விலகுகிறதோ... அந்த அளவு கவாத்து வாங்குவதும், பூச்சிகளை அழித்தொழிப்பதும் அவசியமாகிறது. மனிதகுலம் எந்தளவு இயற்கையிடமிருந்து விலகுகிறதோ... அந்த அளவு பள்ளிக்கூட படிப்பு முறை தேவைப்படுகிறது. இயற்கையில் இத்தகையப் படிப்புக்கு வேலையே இல்லை.

நான், முதலில் ஆரஞ்சுத் தோப்பில் செய்த அதே தவற்றை, நிறைய பெற்றோர் தங்களது குழந்தை வளர்ப்பில் செய்கின்றனர்.

எடுத்துக்காட்டாக... குழந்தைகளுக்கு இசையைச் சொல்லித் தரத் தேவையில்லை, மரங்களுக்கு கவாத்து தேவையில்லாதது போல.

ஒரு குழந்தையின் செவி, தானே இசையை ஈர்த்துக் கொள்ளும். நீரோடையின் முணுமுணுப்புகள்; ஆற்றங்கரையோரத் தவளையின் கத்தல்கள்; காடுகளில் இலைகளின் சலசலப்பு எல்லாமே இயற்கையின் ஒலி இசை. இதுவே உண்மையான இசை.

பல்வேறு சம்பந்தா சம்பந்தமில்லாத ஒலிகளுடன் இவை செவிகளை அடையும்போது, இந்த இசையை நேரடியாக ரசித்துப் போற்றும் தன்மையானது மங்கி விடுகிறது. இந்தப் பாதையில் குழந்தையை விட்டுவிடும்போது (இயற்கையின் இசையை ஈர்த்து ரசிக்கும் நிலையிலிருந்து அகற்றும்போது) அந்தக் குழந்தை... ஒரு பறவையின் பாடலை, காற்றின் ஓசையை... இசை என்று உணரும் நிலையை இழந்து விடுகிறது. அதன் காரணமாகவே, இசைக் கல்வி குழந்தையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இயற்கையின் இசை ஒலிகளை ஈர்க்கும் செவியுணர்வுகளுடன் வளர்க்கப்படும் ஒரு குழந்தையால்... வயலினையோ, பியானோவையோ இயக்கி இசைக்கத் தெரியாதிருக்கலாம். ஆனால், உண்மையான இசையை ரசிக்கும், உண்மையான பாடலைப் பாடும் திறமைக்கும், இதற்கும் சம்பந்தம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

'இயற்கையானதே நல்லது' என்று நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால், அவர்களில் வெகு சிலரே இயற்கையானதற்கும் இயற்கையல்லாததற்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்கின்றனர்.

ஒரு மரத்திலிருக்கும் புதியத் துளிர் ஒன்றைக் கத்தரித்து விடும்போது, மீண்டும் சரி செய்யமுடியாத அளவுக்கான சிதைவைத்தான் உருவாக்குகிறோம். மரத்தை அப்படியே இயற்கையாக வளர விடும்போது, கிளைகள் மரத்திலிருந்து வெவ்வேறு பக்கமாக பிரிந்து வளரும். இலைகள் மீது சூரிய ஒளி சீராக விழும். இந்த ஒழுங்குமுறை சிதைக்கப்படும்போது இவைகள் ஒன்றின் மேல் ஒன்றாக வளர்ந்து தங்களுக்குள்ளாகவே பின்னிக்கொள்ளும். சூரிய ஒளி நேராக விழாத பகுதியில் உள்ள இலைகள் உதிர்கின்றன. பூச்சித்தாக்குதல் தொடங்குகிறது. அடுத்தப் பருவத்தில் கிளைகள் கவாத்து வாங்காமல் விட்டு விடும்போது பாதிப்புற்ற கிளைகள் மேலும் மேலும் உருவாகும்.

மனிதர்கள், தப்பான ஒன்றைச் செய்துவிட்டு, அதைச் சரி செய்யாமல் அப்படியே விட்டுவிடுவர். அதன் விளைவுகள் மொத்தமாகத் தாக்கும்போது தனது வலிமை அனைத்தையும் சேர்த்து, வரிந்து கட்டிக்கொண்டு சரி செய்ய முனைவர். அந்த வேலை சரியானது போலத் தோன்றினால் 'அற்புதமான செயல்' என்று தம்மைத் தாமே பாராட்டிக் கொள்கின்றனர்.

ஒரு முட்டாள்மனிதன் வீட்டுக் கூரை மேலேறி ஓடுகளை உடைத்துவிட்டு, பின் மழையின்போது ஒழுகுகிறது என்று ஏறி உடைந்த இடத்தில் ஏதாவது செய்துவிட்டு 'ஆகா, அதிசயமானத் தீர்வைக் கண்டறிந்து விட்டேன்' என்று துள்ளிக் குதிப்பது போலவே உள்ளது மனிதகுலத்தின் பெரும்பாலான செயல்பாடுகள்.

வயலில் வேலைகளுக்கு இடையே எனது நீண்ட கைப்பிடியுள்ள கருக்கருவாளின் கைப்பிடி மீது ஒன்றிச் சாய்ந்து கொண்டு மலைமுகடுகளையும், கீழேயுள்ள கிராமங்களையும் வெறித்துப் பார்க்கிறேன். மாறும் பருவகாலத்தை விட, மனிதர்களின் தத்துவங்கள் எவ்வாறு வேகமாக மாறுகின்றன என்று வியக்கிறேன்.

இந்த கிராமத்திலிருந்தபடி விவசாயம் செய்வதன் மூலம் நான் வெளிக்காட்ட விரும்புவதெல்லாம்... 'மனிதகுலம் எதையும் அறிந்திருக்கவில்லை' என்பதையே. ஏனென்றால், இந்த உலகம் அளப்பரிய ஆக்ரோஷத்துடன் நேர் எதிரான திசையில் ஒடிக்கொண்டுள்ளது. நான் காலத்தால் பின் தங்கியிருப்பது போலத் தோன்றும். ஆனால், நான் கடைபிடிக்கும் இந்த வழியே மிகவும் சரியான வழி என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

கடந்த சில ஆண்டுகளில் இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் உள்ளவர்கள் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்துள்ளது. விஞ்ஞானப் பூர்வமான வளர்ச்சியின் முடிவுக்கான எல்லை எட்டப்பட்டு விட்டது. செய்தத் தவறுகளை உணரத் தொடங்கிவிட்டதாகவும், செய்தவற்றை மறுபரிசீலனைச் செய்வதற்குரிய காலம் வந்து விட்டதாகவும் தோன்றுகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் உழவு செய்யாத விவசாயமே இருந்தது. சுமார் 300, 400 ஆண்டுகளுக்கு முன்புதான் மேலோட்டமாக உழவு செய்யும் முறை ஜப்பானில் அறிமுகமானது. மேற்கத்திய விவசாயத்துடன் வந்து சேர்ந்ததுதான் இன்றைக்கு பயன்படுத்தப்படும் ஆழ உழும் முறை. ஆனால், இந்த முறைகள் காரணமாக ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளால் அடுத்த தலைமுறை... நிலத்தை உழுது பண்படுத்துதலை விட்டுவிட்டு, உழாது பண்படுத்தும் முறைக்குத் திரும்பியிருக்கும் என்பது நிச்சயம்.

உழவு செய்யாத நிலத்தில் பயிர் வளர்ப்பது முதலில் ஆதிகாலத்து முறையை நோக்கி நகர்வதாகத் தோன்றும். ஆனால்...

-புரட்சி பரவும்