பிரச்னை
ஜி.பழனிச்சாமி
இரா.வினோத்

வாணிபம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனி, இந்தியாவை அடிமைப்படுத்த முயற்சித்ததற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று... நம்நாட்டின் பட்டு வளம்! ஏறத்தாழ தங்கம், வெள்ளி ஆகியவற்றுக்கு இணையான மதிப்போடு நாம் கொண்டாடும் பொருட்களில் பட்டும் ஒன்று! ஆனால், இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பொருளை உருவாக்கும் பட்டு விவசாயிகளின் நிலை? வழக்கம்போல கேள்விக்குறிதான். அதற்கு சமீபத்திய சாட்சி... கர்நாடக மாநிலம், மண்டியாவைச் சேர்ந்த பட்டு விவசாயி ஸ்வாமி கவுடா மற்றும் அவருடைய மனைவி ஆகியோரின் தற்கொலை!

இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 60% பட்டு கர்நாடகாவில்தான் உற்பத்தி ஆகிறது. அதில் 95% மண்டியாவில்தான் உற்பத்தியாகிறது. அதனால் மண்டியாவின் பொருளாதாரமே பட்டு சார்ந்ததுதான்! இந்நிலையில், 'பட்டு இறக்குமதிக்கு அனுமதி’ என்று மத்தியஅரசு கதவைத் திறந்துவிட, ஆடிப்போய்க் கிடக்கிறது மண்டியா.

இதுபற்றி நம்மிடம் பேசிய மண்டியா மாவட்ட பட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் ஆரோக்கியதாஸ், ''இந்த ஆண்டில், பட்டு வளர்ப்புக்காக கிட்டத்தட்ட 12,500 ஹெக்டர் அளவுக்கு மல்பெரி சாகுபடி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீனாவில் இருந்து பட்டு இறக்குமதிக்கு அரசு அனுமதி கொடுத்திருப்பதால், ஒரேநாளில் பட்டின் விலை பாதிக்கும் கீழே இறங்கி விட்டது. ஜனவரி மாதம் வரை கிலோ 380 ரூபாய் வரை விற்று வந்த பட்டு, இப்போது 120 ரூபாய்க்குதான் விற்பனை ஆகிறது.

நினைத்துக்கூட பார்க்காத நஷ்டத்தை எதிர்கொள்ள முடியாமல்தான் ஸ்வாமி கவுடா, மனைவி வசந்தாவுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர்களுடைய மூன்று பிள்ளைகள், இன்று அனாதைகளாக தெருவில் நிற்கின்றன. உழுது விதைத்த நிலத்திலேயே ஒரு விவசாயி தூக்கில் தொங்கினான் என்றால்... எவ்வளவு விரக்தியை அடைந்திருப்பான் என்று எண்ணிப் பாருங்கள்!

உடனடியாக இறக்குமதி பட்டுக்கு 100 சதவிகிதம் சுங்க வரி விதித்து, உள்நாட்டு பட்டு விவசாயிகளை அரசு காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால், தற்கொலைகள் தொடர்வதை யாராலும் தடுக்க முடியாமல் போய் விடும். இதை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை நடத்த இருக்கிறோம்'' என்று சொன்னார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 15-ம் தேதி கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர், கர்நாடகப் பட்டு விற்பனையாளர் சங்கத் தலைவர் அக்னி ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில விவசாயிகள் இரு மாநில எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா, எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ஆகியோரிடம் மனுக்களையும் அளித்தனர். ''விவசாயிகளை என்னுடன் அழைத்துச் சென்று பிரதமரைச் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்'' என்று உறுதியளித்து இருக்கிறார் மாநில முதல்வர் எடியூரப்பா.

இந்த விஷயத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்ட அக்னி ஸ்ரீதர், ''மத்திய பட்ஜெட்டில் கச்சாப் பட்டு இறக்குமதிக்கான வரியை 31 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாகக் குறைத்துள்ளது மத்திய அரசு.

சீனாவில் இருந்து 2 ஆயிரம் டன் அளவிலான பட்டு, எவ்வித சுங்க வரியும் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சீனாவுக்கு இணையான தரத்தில் நம்நாட்டுப் பட்டு இல்லையெனில், தரமான பட்டு உற்பத்திக்கு தேவையான உதவிகளை செய்யத்தான் அரசு முன்வர வேண்டும். ஆனால், இப்படி வரியின்றி இறக்குமதிக்கு அனுமதி கொடுப்பது எவ்வகையில் நியாயம்?'' என்று சீறலாகக் கேட்டார்.

தமிழகத்தின் உடுமலைப்பேட்டை, கண்ணம்மநாய்க்கனூர் பட்டு விவசாயி ராமகிருஷ்ணன், ''பட்ஜெட்ல வரி குறைப்பு அறிவிப்பு வந்த அடுத்தநாளே, உள்நாட்டு பட்டு ஜவுளி தயாரிப்பாளர்கள் 'சிண்டிகேட்’ போட்டுக்கிட்டு பட்டுக்கூடு கொள்முதல் விலையைக் குறைச்சிட்டாங்க. ஒரு கிலோவுக்கான உற்பத்திச் செலவே 280 ரூபாய்க்கு மேல ஆகுதுங்கற நிலையில... நாங்க என்னதான் பண்ண முடியும்?'' என்கிறார் சோகமாக.

தமிழகப் பட்டு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர், வாசுதேவ் ராம்குமார், ''நெசவாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பட்டுநூல் இறக்குமதி வரியைக் குறைத்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. 99% நெசவாளர்கள், கூலிக்குத்தான் நெசவு செய்து கொடுக்கிறார்கள். நெசவாளர்கள் என்ற போர்வையில் கொள்ளைலாபம் பார்ப்பது பெரிய பெரிய ஜவுளி நிறுவனங்கள்தான்'' என்று கொதித்தார்.

உடுமலைப்பேட்டை கோட்ட பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பன்னீர்செல்வத்திடம் இப்பிரச்னை பற்றி கேட்டபோது, ''விவசாயிகளின் தரப்பில் நியாயம் இருக்கிறது. ஆனால், இது மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால், அதைப்பற்றி நான் கருத்து கூற முடியாது'' என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.

இந்நிலையில், மார்ச் 21-ம் தேதி தமிழகம் மற்றும் கர்நாடக மாநில பட்டு விவசாயிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள்.

தேர்தல் ஜோரில், மக்களின் வாழ்க்கைப் பிரச்னையை மறக்கடித்துவிடாமல், உரிய தீர்வைத் தேடித் தரவேண்டியது மாநில அரசின் பொறுப்பு. உடனடியாக அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்!