வனத்துறை உதவி வனப்பாதுகாவலர்
இரா.ராஜசேகரன்

இடுபொருள் செலவு, வேலையாட்கள் தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு, குறைந்த வருமானம் ஆகிய பிரச்னைகளால் விவசாயத்தை விட்டு தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள் பல விவசாயிகள். ஆனால், மேற்கண்ட பிரச்னைகளின் சுவடுகூட தெரியாமல் லாபகரமாக செய்யக்கூடிய ஒரு விவசாயமும் இருக்கிறது. அதுதான் மூங்கில் சாகுபடி.

வேறு ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து வருமானம் ஈட்டிக் கொண்டிருப்பவர்கள், தொழில்துறையில் வருமானம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் என வெவ்வேறு காரணங்களால் நேரடியாக விவசாயத்தில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றப் பயிர்... மூங்கில்.

'பார்ட் டைம் ஜாப்’ என்பார்களே அதுபோல, 'பார்ட் டைம்' விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் ஒரு பயிர்தான் இந்த மூங்கில்.

ஒரு தடவை நடவு செய்துவிட்டால்... இரண்டு, மூன்று தலைமுறைக்கும் தொடர்ந்து வருமானம் தரும் நிரந்தரமான சொத்து இந்த மூங்கில். அதனால்தான் இதை 'பச்சைத் தங்கம்' எனக் கொண்டாடுகிறார்கள். இதில், முள் மூங்கில், முள் இல்லா மூங்கில் என இரண்டு வகை இருக்கிறது. முள் இல்லா மூங்கில்தான் வணிகரீதியிலான சாகுபடிக்கு ஏற்றது. பாம்புகள் அண்டாது, முள் இல்லா மூங்கில் பயிரிடப்பட்டிருக்கும் தோப்பில், சிறு குழந்தைக்கூட பயமில்லாமல் நடமாடலாம்.

சரி, வணிகரீதியாக மூங்கிலை எப்படி சாகுபடி செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போமா...!

15 அடிக்கு 15 அடி இடைவெளி!

செம்மண், இருமண்பாடு உள்ள நிலங்களில் சிறப்பாக வளரும். மற்ற வகை மண்ணாக இருந்தாலும், கவலைப்படத் தேவையில்லை. குழியெடுத்து, அதில் செம்மண், தொழுவுரம் இதையெல்லாம் இட்டு நடவு செய்தால்... நன்றாக வளரும். நன்றாக உழவு செய்த நிலத்தில் 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் இரண்டு அடி நீளம், அகல, ஆழத்தில் குழிகளையெடுத்து நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்தால், ஏக்கருக்கு 200 கன்றுகள் வரை தேவைப்படும்.

ஒவ்வொரு குழியிலும் மண்புழு உரம்-ஒரு கிலோ, வேர்வளர்ச்சி உட்பூசணம்-30 கிராம் (வேம்), மட்கிய தொழுவுரம்-ஒரு கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா- தலா 15 கிராம் ஆகியவற்றை போட்டு, 6 முதல் 12 மாத வயதுடையக் கன்றுகளை நடவேண்டும். குழிகளை மேல் மண்ணைக் கொண்டு நிரப்பி, மழைநீர் தேங்கி நிற்க வசதியாக பாத்தி எடுக்க வேண்டும். கன்றுகளுக்கு இடையிலும் வாய்க்கால் எடுத்து, மழைநீரைச் சேகரிக்கலாம். மழையில்லாத காலத்திலும், கோடைக் காலத்திலும் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர்பாய்ச்சுவது நல்லது. சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தால், அதிக மகசூல் கிடைக்கும். ஆரம்பத்தில் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நன்றாக வளர்ந்து மரமானதும்... அவ்வப்போது தண்ணீர் கொடுத்தால் போதும்.

இளம் கழிகளை வெட்டக்கூடாது!

தண்ணீர் வசதி இருப்பவர்கள்... ஊடுபயிராக தட்டைப் பயறு, உளுந்து, கீரை, பூச்செடிகள், வாழை என நடவு செய்யலாம். நடவு செய்த ஓராண்டுக்குப் பிறகு, கன்றுகளைச் சுற்றி மண் அணைத்தால், புதியக் குருத்துகள் உருவாகும். நன்றாக வளராதக் கழிகளை இரண்டாவது ஆண்டில் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மூங்கில் தோட்டத்தில் ஏராளமான சருகுகள் கிடைக்கும். இது நிலத்தில் இயற்கை மூடாக்காக அமைந்து, ஈரப்பதத்தைப் பாதுகாப்பதால், ஏராளமான நுண்ணுயிர்கள் பெருகி நிலம் வளமாகும்.

நடவு செய்த ஐந்து ஆண்டுக்குப் பிறகு முதல் அறுவடையை ஆரம்பிக்கலாம். மூங்கிலை அறுவடை செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். மூன்று ஆண்டுக்கு மேல் வயது கொண்ட கழிகளை மட்டுமே அறுவடை செய்ய வேண்டும். இளம் வயதுள்ள கழிகளுக்கு அருகில்தான் குருத்துகள் வெளிவரும். முற்றியக் கழிக்கு அருகே குருத்து வராது. எனவே இளம் கழிகளை வெட்டக் கூடாது.

அடையாளம் அவசியம்!

புதிதாக ஒவ்வொரு ஆண்டும் குருத்து வெளிவந்து, அது இளம் மூங்கிலாகும்போது அதன் கணுக்களில் வெள்ளை உறை போல தாள் ஒட்டிக் கொண்டு இருக்கும். அந்த உறை கீழே விழுந்ததும், கழிகளில் ஏதாவது ஒரு அடையாளம் இடவேண்டும். அடுத்தடுத்து ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வரும் இளம் மூங்கில்களிலும் இப்படி அடையாளம் இடவேண்டும். ஒரேமாதிரியான அடையாளமாக இல்லாமல், ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு விதமான அடையாளமாக இடுவது முக்கியம்.

நடவு செய்த ஐந்து ஆண்டுக்குப் பிறகு முதல் அறுவடை... பிறகு, தொடர்ந்து மூன்று ஆண்டு இடைவெளியில் அடுத்தடுத்த அறுவடைகளைச் செய்யலாம். ஒரு குத்து மூங்கில்களில் இருக்கும் மொத்தக் கழிகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வெட்டி எடுக்க வேண்டும். முதிர்ந்தக் கழிகள் குத்துக்கு உள்ளேயும், இளம் கழிகள் குத்துக்கு வெளியேயும் இருக்கும். அதனால் குதிரை லாடம்வடிவில் கழிகளை வெட்டி எடுக்க வேண்டும். அதாவது, ஆங்கில 'யு' (ஹி) எழுத்து போல வெட்ட வேண்டும். அப்போதுதான் குத்துக்குள் நுழைந்து வெட்டுவதற்கு வசதியாக இருக்கும். மூங்கில்களின் வயதைப் பொறுத்து மகசூல் கிடைக்கும். ஒவ்வொரு மூங்கில் குத்தில் இருந்தும் குறைந்தபட்சம் 10 முதல் 15 முதிர்ந்த மூங்கில்களை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கரில் இருக்கும் 200 குத்துகளில் இருந்து சராசரியாக 2,000 கழிகள் கிடைக்கும். ஒரு கழி, குறைந்தபட்சம் 50 ரூபாய் என விற்பனை செய்தாலும், ஒரு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.

ஏக்கருக்கு ஒரு லட்சம்!

மூங்கிலை ஒரு ஏக்கரில் பயிர் செய்திருக்கும் சிவகங்கை அருகேயுள்ள மதகுப்பட்டி நாமலூரைச் சேர்ந்த ரகுநாதன் என்ன சொல்கிறார் என்று கேட்போமா...!

''பத்து ஏக்கர்ல விவசாயம் செய்துகிட்டிருக்கறவங்க... ஒரு ஏக்கர்லயாவது மூங்கிலை நடறது நல்லது. என் மண்ணு கொஞ்சம் களியான மண்ணு, அதனால, 2 அடி நீள, அகல, ஆழத்துல குழியெடுத்து, குப்பை எரு, செம்மண் ரெண்டையும் கலந்து குழியை நிரப்பி நடச் சொன்னாங்க. அவங்க சொன்ன மாதிரி 4 குழி மட்டும் எடுத்து மூங்கிலை நட்டுப் பார்த்தேன். அருமையா வளர்ந்து வரவே நம்பிக்கை வந்துடுச்சு. உடனே ஒரு ஏக்கர் நிலத்துலயும் நடவு செஞ்சுட்டேன். 25 அடி இடைவெளி விட்டு நடவு செஞ்சதால, மொத்தம் 70 கன்னுங்களைத்தான் நட முடிஞ்சுது.

பதினைஞ்சு நாளுக்கு ஒரு தடவை பாசனம் செய்றேன். நடவு செஞ்சி 4 வருஷம் ஆச்சு. அருமையா வளந்திருக்கு. இடைவெளி அதிகமா கொடுத்ததால ஒவ்வொரு குத்துலயும் 90 கழிக வரைக்கும் இருக்கு. அதுல 40 கழிக முத்தி இருக்கும். இன்னும் ரெண்டு மாசத்துல அறுவடை செய்யப் போறேன், ஒரு குத்துல இருந்து சராசரியா 2 ஆயிரத்துக்கு வித்தாலும், 70 குத்துல இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் வருமானம் கிடைக்கும். இதுவரைக்கும் செலவு 15 ஆயிரம் ஆகியிருக்கு. எப்படியும் ஒரு ஏக்கர்ல இருந்து ஒரு லட்ச ரூபாய்க்கு குறையாம லாபம் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்.''

என்ன... ரகுநாதன் சொல்வதைக் கேட்டதுமே உங்களுக்கும் நம்பிக்கை பிறக்கிறதல்லவா! நான்கூட குறைந்தபட்ச கணக்கைத்தான் போட்டுச் சொன்னேன். அவர் சொல்வதோ... அனுபவக் கணக்கு. அதிலும், 70 குத்து மூங்கில்களில் இருந்தே, கூடுதல் லாபத்தை எடுக்க முடியும் என்கிறார். ஒரு ஏக்கரில் 200 குத்துகள் என்பதைவிட, 70 குத்துகள் பராமரிக்கவும் எளிதுதாகத்தான் இருக்கும். வனத்துறையின் பரிந்துரை 200 கன்றுகள்தான். என்றாலும், விவசாயிகள் தங்களுக்கு தோதுபடும் வகையில் நடவை மேற்கொள்ளலாம்.

தற்போது, மூங்கிலுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உள்ளூர் மர வியாபாரிகள், பந்தல்காரர்கள், காகித ஆலை என்று தேடி வந்து வாங்கிச் செல்கிறார்கள். 'காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்'வதுதானே சரியான முடிவாக இருக்கும்.

படங்கள்:எஸ்.சாய்தர்மராஜ்
தொடர்புக்கு, ரகுநாதன்,
அலைபேசி: 94865-61773.

பலன் தரும் பால்கூவா!

முள்ளில்லா மூங்கிலில் பாம்பூசா பால்கூவா, வல்காரிஸ், டூல்டா, நியூட்டன்ஸ் ஆகிய ரகக் கன்றுகள் வனவிரிவாக்கத்துறை மூலம் வழங்கப்படுகிறது. இதில் சிறப்பாகவும், வேகமாகவும் வளரக்கூடியது பால்கூவா ரகமாகும். பக்கக் கிளைகள் இல்லாமல், 60 அடி உயரம் வரை வளரும். இது, தமிழ்நாட்டில் சாகுபடி செய்ய ஏற்ற ரகம். வல்காரிஸ் ரகம்... களர் நிலங்கள், உப்புநீர் பகுதிகள், வறட்சிப் பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்றது. டூல்டா மற்றும் நியூட்டன்ஸ் ரகங்கள்... தென் மாநிலங்களில் எதிர்பார்க்கும் மகசூலைத் தருவதில்லை.

வீட்டுக்கு ஒரு ஆக்சிஜன் ஆலை!

ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 800 கிராம் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. மூங்கில் குத்து ஒன்று தினமும் 850 கிராம் ஆக்சிஜனை உற்பத்திச் செய்கிறது. அதனால்தான் கார்பன் வர்த்தகத்தில் (கார்பன் டிரேடிங்) முக்கிய இடத்தில் இருக்கிறது மூங்கில். எனவே, ஆளுக்கொரு மூங்கில் அல்லது, குறைந்தபட்சம் வீட்டுக்கொரு மூங்கிலாவது வளர்க்கலாம் அல்லவா!