பிரச்சனை
காசி.வேம்பையன்

''வழக்கமா... விளைஞ்சதுக்கு விலை கிடைக்காமத்தான் நட்டப்படுவோம். இப்போ, விதைச்ச விதை விளையாமப் போனதால நட்டப்பட்டுப் போயிருக்கோம்'' என்று புலம்புகிறார்கள், திண்டிவனம் பகுதி விவசாயிகள்.

விளைச்சல் பாதிக்கப்பட்டு தனக்கு ஏற்பட்ட சோகத்தை வார்த்தைகளில் வடித்தார், செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை. ''எங்க பகுதியில முருக்கேரி, கந்தாடு, நடுக்குப்பம்னு சுத்துப்பட்டு கிராமங்கள்ல வருஷா வருஷம் தர்பூசணி போடுவோம். இந்த வருஷம் ஒண்ணரை ஏக்கர்ல 'தான்யா’ கம்பெனியின் 'மஹாராஜா’ ரக தர்பூசணி விதையை விதைச்சிருந்தேன். நல்லாதான் முளைச்சு வந்துச்சு. நாப்பது நாள் கழிச்சு பிஞ்சு வைக்கும்போதுதான் அவ்வளவும் மோகினிக்காயா (சீரான வடிவமாக இல்லாமல் கூம்பு வடிவம் மற்றும் நெளிந்து காணப்படுவது) மாற ஆரம்பிச்சுடுச்சி. அதனால, யாரும் பழத்தை வாங்க மாட்டேங்குறாங்க. மொத்தத்துக்கே ஒண்ணு, ரெண்டு காய்தான் ஒழுங்கா வந்திருக்கு. நல்லா விளைஞ்சிருந்தா ஏக்கருக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வித்திருக்கும். உரம், பூச்சிக்கொல்லி, விதை, நடவுனு பல ஆயிரம் ரூபாயைக் கொட்டியிருக்கேன். மொத்தமும் போச்சு'' என்றார் சோகமாக.

கொள்ளுமேடு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், ''மூணு ஏக்கர்ல அந்த ரகத்தைத்தான் விதைச்சிருந்தேன். நகை, நட்டு எல்லாத்தையும் அடகுவெச்சு, கடனை வாங்கித்தான் உரம், பூச்சிமருந்துனு பல ஆயிரத்தை தண்ணியா செலவு செஞ்சுருக்கேன். விதைச்ச ஒரு மாசத்துலேயே பிஞ்சு மாத்திரை அளவுக்குதான் இருந்துச்சு. அப்பவே எனக்கு விதைகளை விற்பனை செஞ்ச கடைக்காரங்க மூலமா கம்பெனிக்காரங்களை அழைச்சுட்டு வந்து காட்டினேன்.

கலெக்டர், வேளாண்மை விதைத்துறை அதிகாரி எல்லார்கிட்டயும் மனுவும் கொடுத்திருக்கேன். இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. நல்லகாய் வளரும்போது ஒரே மாதிரி இருக்கும். ஆனா, மோகினிக்காய் வளரும்போது பலூன் மாதிரியும், கூம்பு வடிவமா இருக்கும். அதுவுமில்லாம இந்தப் பழத்தைச் சாப்பிட்டா நாக்குல அரிப்பு எடுக்குது. மொத்த வியாபாரிங்க யாரும் வாங்க மாட்டேங்குறாங்க. ஓரளவுக்கு வடிவமா இருக்குற காயை தள்ளுவண்டியில விக்கிறவங்கதான் வாங்கிட்டுப் போறாங்க. அதுவும் அடிமாட்டு விலைக்குத்தான் போகுது. எனக்கெல்லாம் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மேல நட்டம்தான்'' என்றார் சோகமாக.

முருக்கேரியில் இருக்கும் 'அன்னை அக்ரோ சென்டர்’ நிறுவனம்தான் இந்த விதையை விற்பனை செய்திருக்கிறது. அதன் உரிமையாளர் ராஜராஜனிடம் கேட்டபோது, ''முருக்கேரி, கந்தாடு, கொள்ளுமேடு, சிறுவாடினு சுத்து வட்டார விவசாயிகளுக்கு மொத்தமா 200 கிலோ விதைகளை விற்பனை

செஞ்சுருக்கேன். ஏறத்தாழ 600 ஏக்கர்ல சாகுபடி பண்ணியிருக்காங்க. அதுல 150 ஏக்கர்ல இந்த பாதிப்பு. ரெண்டு லாட்ல வந்த விதைகள்லதான் இந்தப் பிரச்னை. விதைக் கம்பெனிக்கும், வேளாண் விதைச் சான்றளிப்புத் துறைக்கும் இதைத் தெரியப்படுத்திருக்கேன்'' என்று தன் பணிகளைத் தட்டாமல் செய்த விஷயத்தைச் சொன்னார்.

'தான்யா’ நிறுவன விற்பனை மேலாளர் மணிவேலிடம் கேட்டபோது, ''பாதிக்கப்பட்ட நிலங்களைப் பார்வையிட்டு, கம்பெனிக்கு தகவல் சொல்லியிருக்கோம். கம்பெனிதான் இனி முடிவு பண்ணணும்'' என்றார்.

தமிழக அரசின், விழுப்புரம் பகுதி விதைச் சான்றளிப்புத் துறை துணை இயக்குநர் சுப்ரமணியத்திடம் இதைப்பற்றிக் கேட்டபோது, ''எங்களுக்கும் புகார் வந்துச்சு. மறுநாளே பாதிக்கப்பட்ட நிலங்களைப் பார்வையிட்டிருக்கோம். ஒட்டுரக விதையில் இனத்தூய்மை இல்லாததால பிரச்னை வந்திருக்கு. வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கும் சோதனை செய்றதுக்காக விதைகளை அனுப்பியிருக்கோம். சம்பந்தப்பட்ட கம்பெனியில் இருந்து விவசாயிகளுக்கு இழப்பீடு வாங்கிக் கொடுக்குறதுக்கான நடவடிக்கைகளை எடுத்துக்கிட்டுருக்கோம். நிச்சயமா நியாயமான நடவடிக்கை இருக்கும்'' என்று நம்பிக்கையூட்டும் வகையில் சொன்னார்.

விவசாயிகளுக்கு துரோகம் செய்யாமல், நடவடிக்கை நடந்து முடிந்தால் சரி!