வழிகாட்டி
ஆறுச்சாமி

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கான 'தாவர நோய் தடுப்பு மண்டல மையம்' சென்னையில் செயல்பட்டு வருகிறது. விளைபொருட்களை ஏற்றுமதி செய்யவோ... இறக்குமதி செய்யவோ... இந்த மையத்தின் அனுமதி அவசியம் என்பதை சில இதழ்களாகப் பார்த்து வருகிறோம். மேற்கொண்டு சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் மையத்தின் உதவி இயக்குநர் முனைவர். எஸ். ஞானசம்பந்தன்.

''நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மண்டல மையத்தில் நடந்த சம்பவம் இது. இந்திய நிறுவனம் ஒன்று, சீனாவிலிருந்து வெள்ளைப் பூண்டு இறக்குமதி செய்தது. அதை ஆய்வு செய்தபோது புதுவகையான பூஞ்சைக் கிருமி இருப்பதைக் கண்டறிந்தோம். உடனே, நாட்டில் உள்ள அனைத்து தாவர நோய் தடுப்பு மையங்களுக்கும் தகவல் அனுப்பி, சீனாவில் இருந்து வெள்ளைப்பூண்டு இறக்குமதி செய்ய தடை விதித்தோம். அந்தத் தடை இன்றளவும் நீடிக்கிறது.

இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும்போது, அந்த நாட்டின் விதிமுறைகளைப் பின்பற்றுவோம். அவர்கள் குறிப்பிட்டுள்ள பூச்சி, கிருமித்தொற்று, களைகள் உள்ளதா என்று ஆய்வு செய்வோம். அப்படி ஏதேனும் பாதிப்பு இருந்தால், அவற்றை போக்குவதற்கான நடவடிக்கைளை எங்கள் மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் செய்வார்கள். அந்த முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை என்றால், ஏற்றுமதி செய்ய அனுமதிக்க மாட்டோம்.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களிலும் பூச்சி, கிருமித் தொற்று இருந்தால், இதுபோன்ற நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படும். முயற்சி கை கொடுக்கவில்லையெனில், இறக்குமதியான பொருட்களை வெளியில் விநியோகிக்க அனுமதிக்க மாட்டோம். சம்பந்தபட்ட நபர்கள் அந்தப் பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், அவற்றை உடனடியாக நாங்களே அழித்து விடுவோம்.

விளைபொருட்களை எந்த வகையான பெட்டிகளில் அடைத்து அனுப்ப வேண்டும் என்பதற்கும் விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக, மரப்பெட்டிகள் மூலம் காய்கறிகள் பழங்கள் அனுப்பும் முறை இங்கே இருக்கிறது. ஆனால், மரக்கட்டைகளில் எளிதாக கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பதால், மரப்பெட்டிகளில் ஏற்றுமதி செய்வது நல்லதல்ல. அப்படிச்செய்தால் திருப்பி அனுப்பப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, மரப்பெட்டிகளைத் தவிர்ப்பது நல்லது'' என்றும் சொன்னார்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044-22331586.
படங்கள்:கே.கார்த்திகேயன்