அனைவருக்கும் பசுமை வணக்கம்!

'இயற்கை வேளாண்மைக்குத் தனிப் பிரிவு அமைப்போம்.

மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தை இந்தியாவில் அனுமதிக்க இயலாது என்று அறிவிப்போம்.

சூரியசக்தி மின்சாரத்தைப் பயன்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிப்போம்.

நூறுநாள் வேலை திட்டத்தை (மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்), செம்மைப்படுத்தி வேளாண் உற்பத்திப் பணிகளுக்கும் விரிவுபடுத்துவோம்.

இலவச மின்சாரத்தை, தோட்டக்கலைப் பயிர்களுக்கும் விரிவுபடுத்துவோம்.

நெல், கரும்பு, தானியங்கள் போன்றவற்றுக்கு உற்பத்திச் செலவின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்ய முயற்சி எடுப்போம்.

-இதெல்லாம், '2011-ம் ஆண்டுக்கான சட்டமன்ற பொதுத்தேர்தலின் கதாநாயகி' என்ற பட்டப் பெயரோடு தி.மு.க. வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் வேளாண்மை தொடர்பாக இடம்பெற்றிருக்கும் சில விஷயங்கள். வேளாண்மை சார்ந்த இன்னும் பல சலுகை அறிவிப்புகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

பெரும்பாலானவை வரவேற்கத்தக்க அம்சங்களே!

ஆனால், இவற்றில் பலவும் கடந்த ஐந்தாண்டு காலமாக ஆட்சிக் கட்டிலில் இருந்தபோதே தி.மு.க நிறைவேற்றியிருக்கக் கூடியவை என்பதுதான் உண்மை.

குறிப்பாக, இயற்கை வேளாண்மை, மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் போன்ற விஷயங்கள் மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை எனும் வகையில் வருபவை. யோசித்த நொடியே செயல்படுத்தியிருக்க வேண்டியவை. ஆனால், அதை மறந்துவிட்டு, இப்போது 'கதாநாயகி'யாக களமிறக்கியிருக்கிறார்கள்!

போனது போகட்டும். அடுத்தத் தடவை ஆட்சி கிடைத்தால்... மறக்காமல் நிறைவேற்ற மனதில் உறுதி ஏற்கட்டும்!

வேறு கட்சி ஆட்சியைப் பிடித்தாலும், 'இதெல்லாம் தி.மு.க. சொன்ன விஷயங்களாயிற்றே... நாம் நிறைவேற்றவே கூடாது' என்று ஒதுக்கித் தள்ளிவிடாமல், மக்களின் உயிராதாரப் பிரச்னை என்பதாக எடுத்துக் கொண்டு உடனடியாக நிறைவேற்ற முன்வரட்டும்!

நேசத்துடன்,
ஆசிரியர்.