மரத்தடி மாநாடு

அதிகாலையிலேயே 'ஏரோட்டி’ ஏகாம்பரத்தோடு தோட்டத்துக்குக் கிளம்பி விட்ட 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி... பம்ப்செட்டில் சுகமாக குளியலைப் போட்டுவிட்டு, கண்களை மூடி அமர்ந்து வானொலிக்கு காது கொடுத்துக் கொண்டிருந்தார்.

தண்ணீர் பாய்ச்சிவிட்டு வந்த ஏரோட்டி, கருமமே கண்ணாக தீவனப்புல்லை நடவுக்கேற்ற அளவுக்கு கரணைகளாக வெட்டிக் கொண்டிருக்க, சந்தடியில்லாமல் வந்து சேர்ந்தார் 'காய்கறி’ கண்ணம்மா. அவர் உசுப்பிய உசுப்பலில் நிமிர்ந்த வாத்தியார், ''நல்ல அசதி, கொஞ்சம் அசந்துட்டேன்'' என்றபடியே எழுந்து உட்கார்ந்தார்.

''ஆமாமா... இவரு விடிய விடிய கூட்டணிக் கட்சிகளோட பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு இருந்தாரு. தொகுதிப் பங்கீடு சுமூகமானதும் அப்படியே அசந்துட்டாரு'' என்று நக்கல் அடித்தபடியே பக்கத்தில் வந்து ஏரோட்டி அமர்ந்தார்.

''தேர்தல்லாம் வந்தாச்சு, சம்சாரிங்களுக்கு ஆகுற மாதிரி ஏதாவது புது சேதி இருக்குதாய்யா?'' என்று கேட்டு அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார் காய்கறி.

''ஏன் இல்லாம... தேர்தல் ஜோருல, பொள்ளாச்சிப் பக்கம் தேங்காய் கொப்பரைக்குக் கூடுதல் விலை கிடைக்க ஆரம்பிச்சிருக்கு தெரியும்ல!'' என்று வாத்தியார் அதிசய செய்தி வாசித்தார்.

''அட, இதென்ன கூத்து, ஓட்டுக்கு நூறு கொப்பரைனு பேசி வீட்டுக்கு வீடு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்களோ?'' என்று ஆச்சர்யக் கேள்வி எழுப்பினார், காய்கறி.

''இந்த முறை தேர்தல் கமிஷன் ரொம்ப கெடுபிடி காட்டுதாம். அதனால போலீஸ் அதிகாரிக ரோட்டுல ஒரு வண்டியையும் விடாம கிடுக்கிப்பிடி போட்டு சோதனை பண்றாங்க. எந்த சாமானையும் லாரியில கொண்டு போக முடியலையாம். வீடு காலி பண்ணிக் கொண்டு போனாக்கூட கேள்வி மேல கேள்வி கேக்குறாங்களாம். அதனால கொப்பரையை லாரியில எடுத்துக்கிட்டு வர்றதுக்கு விவசாயிங்க பயப்படறாங்களாம். காய வெச்ச கொப்பரைக்கு விவசாயிங்க எப்படி கணக்கு காட்டுவாங்க?. அதனால சந்தைக்கு வரத்து குறைஞ்சதால, வழக்கம்போல விலை கூடிடுச்சு. ஒரு கிலோ கொப்பரைக்கு 60 ரூபாய் வரை விலை கிடைச்சுருக்கு. அதேநேரத்துல வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்துல 58 ரூபாய்க்குதான் வித்துருக்கு'' என்றார் வாத்தியார்.

''பணம், வேட்டி-சேலைனு இல்லாத ஆளுங்களுக்குத்தானே கொடுக்கறாங்க. கொடுத்துட்டுப் போகட்டும். கொள்ளையடிச்ச காசுலதானே கொடுக்கறாங்க கொடுத்துட்டுப் போகட்டும். வாங்கறவன் வாங்கிக்கிட்டு மனசாட்சிப்படி ஓட்டுப் போட்டுட்டு போறான். எதுக்காக இத்தனை கெடுபிடி?'' என்று வக்காலத்து வாங்கியவராக வரிந்து கட்டினார் காய்கறி!

''ஏது, விட்டா... தேர்தல் அதிகாரிங்களையெல்லாம் உண்டு இல்லைனு ஆக்கிடுவ போலிருக்கே கண்ணம்மா. கவலையேபடாதே... அதிகாரிங்க கண்ணுல மண்ணைத் தூவிட்டு, இன்னொருப் பக்கம் கனஜோரா பணப் பட்டுவாடா நடந்துகிட்டுதான் இருக்கு. நம்பிக்கையோட காத்திரு'' என்று நடுவில் புகுந்து நக்கல் வெடி போட்ட ஏரோட்டி,

''எதெதுக்கு கெடுபிடி பண்றதுனு ஒரு விவஸ்தையே இல்லாமப் போச்சு. குளுகோஸ் பாட்டில்களைக் கூட வாங்கிட்டுப் போக முடியல. திண்டுக்கல் பக்கம் தலைவர்களோட சிலைகளையெல்லாம் துணியைப்போட்டு கட்டி வெச்சுருக்காங்க. இதுக்கு முன்னயெல்லாம் இந்தக் கூத்தைப் பார்த்ததே இல்ல. 'தேர்தல் பாதை'யை திரும்பியே பார்க்காத பெரியார் சிலையைக் கூட துணி போட்டு கட்டினதுதான் கேவலம்! இதனால என்ன சாதிக்கப் போறாங்கனு தெரியல'' என்று வேதனையை வெளிப்படுத்திய வாத்தியார்,

''இவங்களை நினைச்சா ரத்தக்கொதிப்புதான் எகிறுது’' என்றபடியே மஞ்சள் பற்றிய சேதியை ஆரம்பித்துப் பேச்சை திசை மாற்றினார்.

''சேலம் மாவட்டம், ஆத்தூர்ல வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் இருக்கு. சுத்து வட்டாரத்துல விளையுற மஞ்சள் நல்லதா தரமா இருக்கதால, வாராவாரம் சனிக்கிழமை இங்க நடக்குற மஞ்சள் ஏலத்துல நல்ல போட்டி இருக்கும். வெளிமாநிலத்துல இருந்தெல்லாம் வியாபாரிங்க அதிகமா வந்து ஏலத்துல கலந்துக்கிட்டு அதிக விலைக்கு ஏலம் எடுப்பாங்களாம். ஆனா, போன 19-ம் தேதி திடீர்னு ஏலத்தைத் தள்ளி வெச்சுட்டாங்களாம் அதிகாரிக. மஞ்சள் மூட்டைகளோட வந்திருந்த விவசாயிக காரணம் கேட்டதுக்கு, 'இன்னிக்கு பங்குனி உத்திரம் இல்லையோ... வியாபாரிங்க யாரும் வரல... அதனால ஏலம் ரத்து’னு சொல்லியிருக்கங்க.

ஏலத்துக்கு வெளிமாநிலத்துல இருந்தெல்லாம் வியாபாரிங்க வந்துருந்தாங்களாம். தமிழ்நாட்டு வியாபாரிகள்தான் வரலையாம். 'மஞ்சள் ஏலத்துக்கும் பங்குனி உத்திரத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? இதுல ஏதோ உள்குத்து இருக்குமோ’னு விவசாயிங்க பேசிக்கிறாங்களாம்'' என்றார் வாத்தியார்.

''ஏற்கெனவே எல்லாப் பொருளும் விலை இறங்கிட்டே வருது... இதுல இப்படிப் பண்ணினாங்கனா, சம்சாரிங்க என்னதான் செய்யுறது?'' என்று அங்கலாய்த்த காய்கறி,

''குண்டுமிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம், காலிஃபிளவர், தக்காளினு எல்லாக் காய்களும் விலை இறங்கிப் போச்சு. 100 ரூபாய்க்கு வித்துக்கிட்டுருந்த வெங்காயம்... அஞ்சு ரூபாயாகிப் போச்சு. 20 ரூபாய் வரைக்கும் வித்துக்கிட்டிருந்த காலிஃபிளவர் ரெண்டு ரூபாயாகிப் போச்சு. தக்காளி விக்கிற விலை, அறுவடைக் கூலிக்குகூட கட்டுபடியாகாதுங்கிறதால அப்படியே ஆடு, மாடுகளை மேய விட்டுக்கிட்டிருக்காங்க'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே எழுந்து சென்ற ஏரோட்டி, வெயிலால் சோர்ந்து நின்று கொண்டிருந்த மாடுகளை, நிழலான இடத்தில் மேய்வதற்காகக் கட்டிப் போட்டார்.

திரும்பி வந்த ஏரோட்டி, ''அதெல்லாம் சரிதான், அடிக்கிற வெயில்ல தண்ணியில்லாம தீவனமெல்லாம் காய்ஞ்சிக்கிட்டுருக்கு. ஏதோ இருக்குறதை மேயவிட்டு சமாளிச்சுக்கிட்டு இருக்கேன். ஈரோடு மாவட்டத்துல பசுந்தீவனத்துக்கு பயங்கர கிராக்கியாம். அதனால கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு ஏகப்பட்ட மாடுக விற்பனைக்கு வருதாம். மார்ச் 17-ம் தேதி கூடுன சந்தைக்கு 500 சிந்தி மாடுகளும், 250 எருமை மாடுகளும் விற்பனைக்கு வந்திருந்துதுனா பார்த்துக்கோங்க'' என்றார் வியப்பு விலகாதவராக!

''அதுக்குத்தான் திண்டுக்கல் மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிக 'குழிப்புல்’ தயாரிக்கிறதை விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுத்துட்டு இருக்காங்க. 4 அடி ஆழத்துக்கு குழி பறிச்சு, அதுல கரும்புத் தோகையைப் போட்டு, தோகை முழுசும் நனையுற அளவுக்கு கரும்புப்பாகு விட்டு, தேவையான அளவுக்கு சமையல் உப்பைச் சேத்து கிளறி விடணுமாம். பிறகு, குழியைக் காத்துப் புகாத அளவுக்கு பாலிதீன் பேப்பரை வெச்சு மூடி வெச்சுட்டா... ரெண்டு, மூணு மாசத்துல நல்லா நொதிச்சி சத்தான ஆகாரமா மாறி இருக்கும். கிடைக்கற கரும்புத்தோகை அளவுக்குக் குழி எடுத்துக்கலாமாம். தோகை கிடைக்கிறப்ப இந்த மாதிரி செஞ்சு வெச்சுட்டா... வெயில் காலத்துல பசுந்தீவனம் கிடைக்காத சமயத்துல இதைக் கொடுக்கலாம். ஆடு மாட்டுக்கு இது நல்ல சத்தைக் கொடுக்கும. புல் வகைகளையும்கூட இது மாதிரி பதப்படுத்திக்கலாமாம்'' என்றார் வாத்தியார்.

''உனக்கெல்லாம் பக்கத்துலேயே இருந்து இவ்வளவு கோளாறு சொல்லிக்கிட்டு இருக்கார், வாத்தியாரய்யா... அப்படி இருந்தும் திருந்த மாட்டாம ஏன்யா புலம்பிக்கிட்டே இருக்க?'' என்ற காய்கறி கூடையைத் தூக்கிக் கொண்டுக் கிளம்ப... முடிவுக்கு வந்தது, மாநாடு.

பி.டி. மக்காச்சோளத்துக்கு தடை!
பீகார் மாநிலத்தில், பரிசோதனை அடிப்படையில் பி.டி. ரக மக்காச்சோளம் சமீபத்தில் பயிரிடப்பட்டது. இதற்குப் பரவலாக எதிர்ப்பு கிளம்பவே, மாநில முதல்வர் நிதிஷ்குமார் இந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு சீற ஆரம்பித்துவிட்டார். இதையடுத்து, இந்தப் பரிசோதனைக்கு தடைபோட்டிருக்கும் மத்திய வனத்துறை இணையமைச்சர் ஜெயராம் ரமேஷ், ''இனி, மாநிலங்களின் அனுமதி இல்லாமல் பி.டி. ரக விதைகளை களப்பரிசோதனை செய்யக் கூடாது'' என்று அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டிருக்கிறார். இதையடுத்து, பீகார் மாநிலத்தில் நடந்த பி.டி. ரக மக்காச்சோள பரிசோதனை நிறுத்தப்பட்டிருக்கிறது.