முறையீடு

பன்னாட்டு கம்பெனிகளோட பங்காளி, மன்மோகன்சிங்கோட மனசாட்சி, மாண்புமிகு மத்திய உள்(குத்து)துறை அமைச்சர் ப.சி-க்கு வணக்கம் சொல்லிக்கறான் கோவணாண்டி.

'தொழில் வளர்ச்சி ஏற்படுறப்ப... சுற்றுச்சூழல் மாசுபடத்தான் செய்யும். அதைப் பத்தியெல்லாம் கவலைப்படக்கூடாது. காரு, வண்டி புகையால கூடத்தான் சூழல் மாசுபடுது. அதுக்காக யாரும் வண்டி ஓட்டாமலா இருக்காங்க?’னு சும்மா பொட்டுல அடிச்சாப்புல புதிய தத்துவத்தை எடுத்துவிட்டு புல்லரிக்க வெச்சிட்டீங்களே... அதைப் பத்தி பேசத்தான் இந்தக் கடுதாசி!

'நாங்கள்லாம் சுனாமியிலயே ஸ்விம்மிங்க போடுறவய்ங்க'ன்ற கதையா... சூப்பராத்தான் இருக்கு உங்க ஸ்டேட்மென்ட்டு. ஆனா, ஏற்கெனவே இப்படி 'ஸ்விம்மிங்' போட்டுக்கிட்டிருந்த ஜப்பான்... இன்னிக்கு சுனாமியால செத்து சுண்ணாம்பா போய்க் கிடக்கறது தெரிஞ்சும், இப்படியெல்லாம் தெனாவெட்டா பேசிக்கிட்டு திரியறதுதான் நல்லாயில்ல... ஆமாம், சொல்லிப்புட்டேன்.

நேத்து வரைக்கும் அந்த வாமண தேசத்தோட வளர்ச்சியைப் பார்த்து வாய் பொளந்துதான் பார்த்துக்கிட்டிருந்திச்சி இந்த உலகம். ஆனா, அது அத்தனையையும் தூள் தூளா நொறுக்கிப் போட்டுடுச்சி சமீபத்துல பொங்கிப் புறப்பட்ட சுனாமி. 'ஐயா காப்பாத்துங்க... அம்மா காப்பாத்துங்க..'னு உலக நாடுகள்கிட்டேயேல்லாம் கையேந்தற நிலைமைக்கு வந்துடுச்சு ஜப்பான். 'எங்களுக்கு அணுஉலை வேணாம்... உயிர்தான் முக்கியம்'னு அந்த நாட்டு மக்களே வீதியில இறங்கி போராட ஆரம்பிச்சுட்டாங்களாம்.

'நாட்டோட வளர்ச்சி... நாட்டோட வளர்ச்சி'னு சுதந்திரம் வாங்கின 60 வருஷமா சொல்லிக்கிட்டேதான் இருக்கறீங்க. அப்படி என்னதான் வளர்ந்திருக்குனு பார்த்தா... லஞ்சம், ஊழல்தான் வளர்ந்திருக்கு... வாரிசு அரசியல் வளர்ந்திருக்கு... நாட்டோட இயற்கை வளத்தை மொத்தமா சுரண்டி... டாடா, பிர்லா, அம்பானி, வேதாந்தானு நாலைஞ்சு குடும்பங்கள் வளர்ந்திருக்கு! இதையெல்லாம் 'நாட்டோட வளர்ச்சி'னு மக்கள நம்பவெச்சே... நாட்டை நாசம் பண்ணிக்கிட்டிருக்கீங்களே... எப்பத்தான் நிறுத்தப் போறீங்க? ஒட்டுமொத்தமா இங்கயும் சுனாமி சடுகுடு ஆடின பிறகா?

பழங்குடி மக்கள் நிம்மதியா காட்டுக்குள்ள வாழ்ந்துகிட்டிருக்கறது பொறுக்காம... ஒரிசாவுல இருக்கற மலைகளையெல்லாம், பன்னாட்டு கம்பெனிகளுக்கும், உள்நாட்டு கம்பெனிகளுக்கும் பட்டா போட்டுக் கொடுக்கறதுக்காக அநியாயத்துக்கு நீங்க வக்காலத்து வாங்கறீங்களே... அது ஏன்?

அதிசயத்துலயும் அதிசயமா, இந்தத் தடவை சுற்றுச்சூழல் துறைக்கு 'பரவாயில்லை'னு சொல்றது மாதிரியான ஒரு மந்திரியா கிடைச்சிருக்கார் ஜெய்ராம் ரமேஷ். மனுஷன், பி.டி. கத்திரிக்காய், கிரிக்கெட்டுக்காக சுரபுன்னைக் காடுகள அழிக்கற விஷயம்னு சிலதுல பாராட்டும்படியாவே நடவடிக்கை எடுத்துக்கிட்டிருக்கார். அந்த வகையில, ஒரிசாவோட காடுகளையும் காப்பத்தறதுக்காக முயற்சி எடுக்கறார். ஆனா, அவருக்கு எதிரா வரிஞ்சு கட்டறீங்களே?

வாழறதுக்கு வழியில்லாம போயிடுமோங்கற பயத்துல, வில்லோடயும் அம்போடயும் எதிர்த்து நிக்கறான் அங்க இருக்கற பழங்குடி. அவனை தீவிரவாதினு சொல்லி, நம்ம ராணுவத்தையும், போலீஸையும் விட்டு சுட்டுத்தள்ளறீங்க. ஆனா, பாகிஸ்தான் எல்லையில வாலாட்டிக்கிட்டிருக்கற தீவிரவாதிங்களுக்கு... வாழையிலையில சோறுபோட்டு, சமாதானம் பேசிக்கிட்டிருக்கீங்க!

கேட்டா... 'நாடு வளரணும்னா... காட்டை அழிச்சுதான் ஆகணும்'னு தத்துவம் பேசறீங்க:

தெரியாமத்தான் கேட்கிறேன், வீட்டு அடுப்புலயும் புகைதான் வருது, அணு உலை வெடிச்சாலும் புகைதான் வருது. அதுனால ரெண்டும் ஒண்ணாயிடுங்களா?

சாதாரண மனுஷங்கள விடுங்க, உங்கள மாதிரி சாதனையாளர்கள் (!), ஆக்ஸ்போர்ட்ல படிச்ச அறிவாளிகக்கூட இதை புரிஞ்சிக்காம பேசறதுதான் கவலையா இருக்கு.

'வளர்ச்சி, வளர்ச்சி'னு வாய் கிழிய கத்துறீங்களே... அப்படி எதைத்தான் வளர்ச்சினு சொல்றீங்கனு இந்த மரமண்டைக்குப் புரியலீங்க? ஒவ்வொரு வருஷமும் பட்ஜெட் படிக்குறப்ப '7 சதவிகித வளர்ச்சி, 9 சதவிகித வளர்ச்சி'னு வாசிக்கிறீங்க, ஆனா, 'லட்சக்கணக்கான பேருக்கு தெனமும் மூணுவேளை சோறு கிடைக்குறதே குதிரைக் கொம்பா இருக்கு’னு இன்னொருப் பக்கம் அறிக்கை விடறாரு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன். அப்புறம் எதுக்கு இந்த மண்ணாங்கட்டி வளர்ச்சி?

உங்க கட்சி கஜானாவோட வளர்ச்சியையும், மந்திரிமாருங்களோட வளர்ச்சியையும், நாட்டோட வளர்ச்சினு சொல்லி, ஜனங்களை எதுக்காக அப்பப்ப சொறிஞ்சு விட்டுக்கிட்டே இருக்கறீங்க? வளர்ச்சிங்குற பேர்ல இயற்கை வளத்தை அழிச்சதைத் தவிர வேற என்னத்த சாதிச்சு இருக்கீங்க?

இருக்கற வனங்களை அழிச்சு... நிலக்கரி, காப்பர், இரும்புத் தாது, பாக்சைட், சுண்ணாம்புனு ஒவ்வொண்ணுக்கும் சுரங்கம் வெட்டி, சுரண்டிக்கிட்டே போறீங்க. தொழில் வளருதோ இல்லியோ தொல்லைக வளருது. பூமி சூடாகி, சுற்றுச்சூழல் கெடுது. வறட்சி, வெள்ளம், புயல், சுனாமினு இயற்கை அப்பப்ப சீறிகிட்டு இருக்கு. அதை நிரந்தரமா சீற வெச்சிடாதீங்க.

உலகத்துலயே அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகளோட கட்டப்பட்டது ஐப்பான் அணு உலைனு பெருமையா பேசிக்கிட்டிருந்தாங்க. இப்ப வந்த சுனாமிக்கு தாக்குப்பிடிக்க முடியாம பத்திக்கிட்டு எரியுது அந்த அணு உலை. ஜப்பானுக்கே இந்த கதினா... இந்தியாவோட நிலைமையை யோசிச்சுப் பாருங்க. அடையாளம் காட்டுறதுக்குக்கூட ஒரு பய இருக்கமாட்டான்.

2004-ல சுனாமி வந்தப்ப, பிச்சாவரம், முத்துப்பேட்டை கடற்கரைகளை, அங்க இருக்கற அலையாத்தி காடுகதான் காப்பாத்துச்சுங்கறது ஊரு உலகத்துக்கே தெரிஞ்ச சங்கதி. ஆக, இயற்கை, தேவையான எல்லா ஏற்பாடுகளையும் தானே செஞ்சி வெச்சிருக்கு. நீங்க புடுங்கறதெல்லாமே தேவையில்லாத ஆணிதான். மனுசங்க மூச்சு விடுறதுக்கு காத்தை சுத்திகரிச்சு கொடுக்குற மரங்களும் ஒரு தொழிற்சாலைதான்கிறதை மறந்துட்டு, காடுகளை கம்பெனிக்காரங்களுக்கு கொடுத்து, ஒரேயடியா காலி பண்ணிடாதீங்க.

அதுசரி, செய்ற வேலையை விட்டுட்டு சினையாட்டுக்கு சொறிஞ்சுவிட்ட கதையா, உள்நாட்டைக் காப்பாத்தறதுக்கான வேலைகளை பார்க்கற மந்திரி வேலையை விட்டுட்டு... நிதித்துறை, சுற்றுச்சூழல் துறைனு மத்தவங்க வேலைகள்ல எதுக்காக நீங்க மூக்கை நுழைக்கறீங்க.

உங்களைச் சொல்லி குத்தமில்லீங்க. கொள்கையில கூட்டு இருக்கோ இல்லீயோ, கொள்ளையில கூட்டு, ஆட்சியில கூட்டுனு அழிச்சாட்டியம் பண்றீங்க. தேர்தல் நேரத்துல கவர்ச்சி கதாநாயகிகள... அதானுங்க தேர்தல் அறிக்கை! அதைக் களத்துல இறக்கி விடுறீங்க. காய்ஞ்சி போயிருக்க எங்காளுகளும் 'பலே வெள்ளையத்தேவா’னு உங்களுக்கே ஓட்டை போட்டுட்டு, வழக்கம் போல ஒட்டாண்டியாகிடுறாங்க.

சரி, பாழா போன அந்த அரசியல விட்டுத்தள்ளுவோம். 'தொழில் வளர்ச்சி'யில வானத்தைப் பார்த்து வளந்துகிட்டு இருந்த ஜப்பானோட பரிதாப நிலைமையைப் பார்த்த பிறகாவது... திருந்தப் பாருங்க. இல்லைனா... மண்ணு இருக்கும், மலை இருக்கும், கடல் இருக்கும், ஆனா, மனுஷன் இருக்க மாட்டான்!

இப்படிக்கு,
கோவணாண்டி