மகசூல் அலசல்
கரு.முத்து

சென்ற இதழ் தொடர்ச்சி

'கட்டு கலம் காணும், கதிர் உழக்கு நெல் காணும்’ என்ற நம் முன்னோர்களின் வாக்கு இன்றைக்கும் சில இடங்களில் பொய்க்காமல் இருந்தாலும், அந்த அளவை நம் பசுமைப் புரட்சிகளாலும்கூட பெரும்பான்மை இடங்களில் எட்டிப் பிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. அதில் சரிபாதி இலக்கை எட்டுகிறவர்கள்கூட, தெரிந்தோ... தெரியாமலோ இன்னும் நம் பாட்டன், பூட்டன் வழிமுறைகளைத்தான் கடைபிடித்து வருகிறார்கள். அந்த வழிமுறைகளே மண்ணின் வளம் கெடாமல் நட்ட நடவின் முழுப்பலனையும் அவர்களுக்குக் கிடைக்கச் செய்கிறது.

'கதிர், உழக்கு நெல் காணும்' என்றால்... ஒரு கதிரில் கிட்டத்தட்ட 600 நெல்மணிகளுக்குக் குறையாமல் இருக்கவேண்டும். ஆனால், 'இனியெல்லாம் இயற்கையே' என்ற தலைப்பில் கடந்த 2008-ம் ஆண்டு பசுமை விகடன் ஏற்பாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், பாலையூரில் நடைபெற்ற நம்மாழ்வாரின் இயற்கை விவசாயப் பயிற்சின்போதுகூட, இயற்கை முறையில் செய்த சாகுபடியில் 230 நெல்மணிகள்தான் இருந்தன.

இந்த நிலையில் உற்பத்திக் குறைவுக்கான காரணங்கள் என்னென்ன? என்பதை முதலில் வகைப்படுத்துவோம்.

1) காவிரியில் தண்ணீர் வரத்து குறைந்தது

2) பசுமைப் புரட்சி என்ற பெயரில் கண்ட கண்ட ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தியது.

3) ஆடு, மாடுகள் குறைந்து போனது.

4) கோடை உழவு செய்யாதது.

5) உரச்செடிகள் சாகுபடி செய்யாதது.

6) தொழிலாளர் பற்றாக்குறை

7) பருவத்துக்கும் இடத்துக்கும் ஏற்ற பாரம்பர்ய விதைகளை மறந்து போனதால் சிறந்த ரக விதையைத் தேர்வு செய்ய முடியாதது.

8 சுற்றுச்சூழல் மாறுபாடு காரணமாக பருவமழை தவறிப்போவது

ஆகிய இந்த எட்டும்தான் இன்றைய விளைச்சல் குறைவுக்கு காரணமாக விவசாயிகள் தங்கள் அனுபவத்தில் கண்டறிந்திருக்கிறார்கள். அவை ஒவ்வொன்றும் எப்படி நம் உற்பத்தியை பாதிக்கிறது என்பதை சற்று விரிவாக பார்ப்போம்.

காவிரியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் எப்படி நம் உற்பத்தி பாதிக்கும் என்று கேள்வி வரலாம். கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேரங்கி ஆகிய அணைகள் இல்லாத காலத்தில் காவிரியில் உற்பத்தியாகும் அத்தனைத் தண்ணீரும் நமக்குத்தான் ஓடிவரும். அதனால் எந்தப் பருவ காலத்திலும் அதற்கேற்ற ரகத்தைத் தேர்வு செய்து பயிர் செய்துகொண்டே இருந்தார்கள் முன்னோர்கள். அதனால் நிலம் சும்மா கிடக்காமல் மூன்று போகமும் உற்பத்தி நடந்து கொண்டேயிருந்தது. நிலமும் வீணாகவில்லை.

ஆனால், அங்கே அணைகள் உருவானபிறகு, தண்ணீர் குறைய குறைய முப்போகம் இரண்டு போகமானது; அந்த இரண்டு, இப்போது ஒரு போகம் என்றாகிப் போனது. அதனால் கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் நிலம் வெறுமனேதான் கிடக்க வேண்டியிருக்கிறது (பம்ப்செட் உள்ளவர்கள் முட்டி மோதி இரண்டு போகம், மூன்று போகம் விளைவிக்கிறார்கள். அது மிகமிகக் குறைந்த சதவிகிதமே).

இந்த ஏழு மாதத்தில் களரும், உப்பும், நிலத்தில் ஏற்பட்டு விடுகின்றன. தண்ணீர் வரும் நேரத்தில்கூட அதைப் போக்க முடிவதில்லை. நிலத்தடி நீரும் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் களரும், உப்புத் தன்மையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. விளைவு... விளைச்சல் குறைந்து கொண்டே போகிறது.

ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் எவ்வாறு மண்ணை நாசமாக்கின என்பதை நம்மாழ்வாரும், பாலேக்கரும் தொடர்ந்து எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அதில் உள்ள உப்பு மற்றும் நச்சுக்கள் மண்ணில் கலந்து அங்கிருந்த மண்புழுக்கள் மற்றும் நுண்ணுயிரிகளை முற்றிலுமாக அழித்துவிட்டன. அதனால் மண்ணை வளப்படுத்தும் வேலை அங்கே நடக்கவில்லை. ரசாயனத்தில் உள்ள உப்பு மட்டும் வயலில் தங்கி, நிலத்தின் வளத்தை நாசம் செய்து விட்டது.

ஆடு, மாடுகள் குறைந்துபோனது வெகு முக்கியமான காரணம். அவற்றின் சாணங்களை விட மண்ணுக்கு வளத்தைத் தரும் உரம் வேறு எதுவும் இப்புவியில் இல்லை என்றே சொல்கிறார்கள் அனுபவ விவசாயிகள். ஒரு விவசாயியின் வீட்டில் உழவுக்கு ஒரு ஜோடி மாடுகளும், பாலுக்கு ஒரு பசுமாடும் குறைந்தபட்சமாக இருக்கும். அவற்றின் சாணத்தை மிக ஆழமான பள்ளம் வெட்டி அவற்றில் நாள்தோறும் சேகரித்து வருவார்கள். அடுப்புச்சாம்பல், காய்கறிக் கழிவு என்று மற்றவற்றையும் அக்குழியிலேயே கொண்டு போய் போடுவார்கள். இவையெல்லாம் நன்கு மக்கி கருப்புத் தங்கமாக மாறும். அதை மாட்டு வண்டியில் ஏற்றி... சித்திரை மாதத்தில் வயலில் கொண்டு போய் போட்டால்... அதில் இருக்கும் லட்சக்கணக்கான நுண்ணுயிரிகளும், மண்புழுக்களும் மண்ணை வளமாக்கும்.

இன்னொருப் பக்கம் கிடை கட்டுவதன் மூலமும் நேரடியான வளத்தைப் பெற்றார்கள். ஊரில் உள்ள மாடுகளை ஒன்றாக சேர்த்து ஒருவர் மேய்ப்பார். அத்தனை மாடுகளையும் இரவில் விவசாயிகளின் வயலில் கட்டி விடுவார். குறைந்தபட்சம் நூறு மாடுகளும் அதிகபட்சமாக ஐநூறுக்கும் குறையாமல் இருக்கும் அந்த மாடுகள் வயலில் சாணம் போட்டு, மூத்திரம் பெய்யும். இவையும் மண்ணை வளப்படுத்திய முக்கிய காரணி. ஆட்டுக் கிடையும் இதேபோலத்தான். இந்தக் கிடை கட்டுவதற்கு விவசாயி கையிலிருந்து பணம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. அடுத்து வரும் போகத்தில் விளைந்த நெல்லில் ஒரு சிறிய அளவு கொடுத்தால் போதும்.

கோடை உழவை இப்போது பெரும்பாலோனோர் செய்யாததும் விளைச்சல் குறைவுக்குக் காரணமாகி விட்டது. 'சித்திரை மாதத்து உழவு பத்தரை மாத்து தங்கம்’ என்பார்கள் முன்னோர்கள். அந்த நாளில் கோடைமழை பெய்தவுடன் வயலை உழவு ஓட்டி புழுதியாக காயப் போட்டால்... முளைக்கும் களைகள் எல்லாம் காய்ந்துபோய், பிறகு களைகள் முளைக்காது என்பதும், மண் நன்றாக காய்ந்து காற்றில் உள்ள அணுக்களை தன்னில் ஏற்றிக் கொள்ளும் என்பதும் இதற்கான அடிப்படை. ஆனால், கோடை உழவு செய்யாமல் ஆற்றில் தண்ணீர் வந்தபிறகு தண்ணீர் பாய்ச்சி உழவு செய்வதை வாடிக்கையாக்கி விட்டோம். இதில் அடி மண் புரண்டு காய்வதற்கு வாய்ப்பே இல்லாமல் போய் மேலே உள்ள மண் மட்டுமே திரும்ப திரும்ப பயன்பட்டு வளமிழந்து போய்விட்டது.

சணப்பு, கொளுஞ்சி போன்ற உரச் செடிகள் சாகுபடி செய்யாதது அடுத்த காரணம். கோடைக் காலத்தில் வயல் சாகுபடி செய்யாமல் இருக்கும்போது, அதில் சணப்பு (டேஞ்சா) பயிரிடுவார்கள். அது தன்ணீர் வரும் காலத்துக்குள்ளாக ஆள் உயரத்துக்கு வளர்ந்துவிடும். தண்ணீர் விட்டு டிராக்டர் வைத்து, அவற்றை மடக்கி உழவு செய்தால்... மண்ணுக்கு அடியில் அதன் தழைகள் போய் அடுத்து வரும் பட்டத்துக்கு தேவையான முழு தழைச்சத்தையும் கொடுத்துவிடும். அதனால் வயலுக்குத் தேவையான சுழற்சியை வயலே பெற்றுக்கொண்டுவிடும். இது இப்போது கடைபிடிக்கப் படாததால் மண்ணின் வளம் குறைந்து போயிருக்கிறது.

'பருவத்தே பயிர் செய்’ என்பது பழமொழி. அதாவது ஒவ்வொன்றுக்கும் ஒரு காலகட்டம் இருக்கிறது. அந்தந்த காலகட்டத்தில் சரியாக விவசாய வேலைகளை செய்தால், இயற்கை சீற்றம் மற்றும் பூச்சி போன்ற காரணங்களால் பயிர்களில் அழிவு ஏற்படாமல் காப்பாற்ற முடியும். அத்தோடு அந்தப் பயிருக்கு தேவையான அனைத்தும் அந்தக் காலகட்டத்தில் இயற்கையிடமிருந்தே கிடைத்துவிடும் என்பது இதற்கான விளக்கம். இப்போது இரண்டு காரணங்களால் பருவத்தே பயிர் செய்ய முடியவில்லை. முதலாவது... தண்ணீர் பற்றாக்குறை. 'ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று நம் பாட்டன், பூட்டன் சொன்னதை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்றால்... ஜூன் மாதம் முதல் வாரத்தில் மேட்டூரில் தண்ணீர் திறக்க வேண்டும். அது தள்ளிப் போகும் இப்போதைய காலத்தில் எப்படி ஆடியில் விதை விதைக்க முடியும்? 'கடைவெள்ளிக்குக் கலப்பை கழுவி வைத்து விடவேண்டும்' என்பார்கள். அதற்கு விளக்கம், ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமைக்குள் உழவுப் பணிகளை முடித்துவிட்டு கலப்பையை கழுவி வைத்துவிட வேண்டும் என்பது. தற்போதைய நிலையில் ஆடியில் கலப்பையை வயலில் இறக்கவே முடியவில்லை.

பருவத்தே பயிர் செய்ய முடியாததற்கு இன்னொரு காரணம் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை. பத்து பேர் தேவைப்படும் இடத்தில் இரண்டுபேர்தான் விவசாயத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அதனால் முப்பதாம் நாள் நாற்றடிக்க வேண்டும் என்று நினைத்தால் ஐம்பதாம் நாள்தான் நாற்றடிக்க முடிகிறது. கதிர் முற்றி கடைபச்சை இருக்கும்போது அறுக்கலாம் என்று முடிவு செய்தால் பயிர் முற்றி சாய்ந்து தரையில் விழுந்து, இருபது சதவிகிதத்தும் மேல் நாசமான பிறகுதான் அறுவடை செய்ய முடிகிறது. ஆட்கள் அறுவடை செய்யும் போது அரிவாளில் பட்டு பத்து சதவிகிதம் சேதமாகிறது. இப்படி எல்லாமே பருவம் தவறி செய்யும்போது அது பலனைக் குறைக்கிறது.

பாரம்பர்ய விதைகள் குறைந்ததும், சரியான விதைகளைத் தேர்வு செய்ய முடியாததும் விளைச்சல் குறைவுக்கான காரணமாக விளங்குகிறது. எவ்வளவு வறட்சியிலும் தாக்குப் பிடித்து விளைந்துவிடும் ரகங்களும், கடுமையான மழையிலும், வெள்ளத்திலும் மூழ்கி விளைச்சல் பாதிக்காத மடுமுழுங்கி, குழியடிச்சான் போன்ற பாரம்பர்ய ரகங்களை மறந்து, ஆராய்ச்சி நிறுவனங்கள் தந்த மென்மையான ரகங்களை கண்ணை மூடிக்கொண்டு பயிரிட்டார்கள் விவசாயிகள். முதல் மூன்றாண்டுகள் வரை லாபம் தந்த இந்த ரகங்கள்தான் இப்போது அவர்களை கடனாளியாக்கி தலையில் துண்டைப் போடச் செய்திருக்கிறது. ஆனால், முன்னோடி இயற்கை விவசாயிகள் பலரும் இப்போது பாரம்பர்ய ரகத்துக்கு மாறி கடனில் இருந்து மீண்டு கொண்டிருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக பூதாகரமாக உருவெடுத்துக்கொண்டிருக்கும் பிரச்னை... சுற்றுச்சூழல் கேடுகள். இதுதான் என்று விளக்க முடியாதபடி நாலா திசைகளிலும் இருந்து இத்தகைய ஆபத்துகள் திரண்டு கொண்டே இருக்கின்றன... விவசாயத்தை ஒரேயடியாக முடக்கிப் போட... குறிப்பாக காவிரி பாய்ந்தோடி வரும் பாதை எங்கும் இருக்கும் தொழிற்சாலைகள், நகரக் கழிவுகள் அனைத்தும் அந்த நதியில்தான் கலக்கின்றன. இதன் காரணமாக ரசாயனத் தன்மை அந்த நீரில் அதிகரித்தே காணப்படுகிறது. அந்த நீரைப் பாய்ச்சும்போது, அவற்றின் தன்மை நிலத்தில் படிந்து, விளைச்சலைக் குறைக்கிறது.

இதுதவிர, பருவம் தப்பிப் பெய்யும் பெருமழை உள்ளிட்ட சூழல்கேடுகள் பலவும் பயிர்த் தொழிலுக்கே எதிரிகளாக எழுந்து நிற்கின்றன!

இப்படி அடுக்கடுக்காக காரணங்களை அடுக்கினாலும், அதெல்லாம் நாம் பழசை மறந்ததற்கான விளைவுதான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகவே தெரிகிறது. அவர்களை பின்பற்றி நம்முடைய பாரம்பர்ய விவசாய முறையை கடைபிடித்தால் செலவும் குறையும், உற்பத்தியும் அதிகரிக்கும். அவர்கள் அப்படி என்ன செய்தார்கள்? அவர்களை எப்படி பின்பற்றுவது என்பதையெல்லாம் பார்ப்போம்...

அடுத்த இதழில்
படம்:ஜா. ஜாக்சன்