Published:Updated:

சிறுதானிய சமையல் !

எஸ். ராஜகுமாரி படங்கள்: எம். உசேன்

சிறுதானிய சமையல் !

எஸ். ராஜகுமாரி படங்கள்: எம். உசேன்

Published:Updated:

சமையல்

##~##

ஒரு காலத்தில் சிறுதானியங்கள் மட்டுமே இங்கே பெரும் உணவாக இருந்தன. இன்றைக்கோ... சிற்றுண்டியாகக்கூட சிறுதானியங்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அரிசி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறுதானிய சமையல் !

சாப்பிடுவதுதான் கௌரவம் என்கிற நினைப்பில், ஏழைகள்கூட சிறுதானியங்களை மறக்க ஆரம்பித்ததுதான்... இன்றைக்கு ஏழை, பணக்காரர் என்று அனைவருக்குமே பலவித நோய்களுக்கு முக்கிய காரணியாக மாறிவிட்டிருக்கிறது. இத்தகையச் சூழலில், சிறுதானியங்களை, நவீன சூழலுக்கு ஏற்ப நாவுக்கு ருசியாக சமைத்துச் சாப்பிடுவதற்கு வழிகாட்ட வருகிறது... இந்த சமையல் பகுதி!

இந்த இதழில் பரிமாறுபவர்... சென்னை வாசகி எஸ். ராஜகுமாரி.

கம்பு ஸ்வீட் பால்ஸ்

தேவையான பொருட்கள்:

கம்பு - ஒரு கப்

தூளாக்கிய வெல்லம் - ஒரு கப்

தேங்காய் துருவல் - கால் கப்

செய்முறை:

சிறுதானிய சமையல் !

கம்பை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிவக்க வறுத்து நைஸாக அரைக்கவும் (பவுடராக). துருவிய அச்சு வெல்லம், துருவிய தேங்காய் ஆகியவற்றை மாவுடன் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு கெட்டியான உருண்டைகளாகப் பிடிக்கவும். கம்பை மொத்தமாக மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால், தேவையான போது செய்து சாப்பிடலாம். கம்பு ஸ்வீட் பால்ஸை காலை உணவாகவும் சாப்பிடலாம். தேநீர் இடைவேளையிலும் சாப்பிடலாம். பெரியோர்கள், சிறியோர்கள், பல் இல்லாதவர்கள் ஆகிய எல்லோரும் இந்த சத்தான பால்ஸை சுவைக்கலாம்.

 ராகி வெஜ் ஆம்லெட்

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 2 கப்

பொடியாக நறுக்கிய கோஸ், கேரட், பீன்ஸ் எல்லாமாக சேர்ந்து - ஒரு கப்

ஊறவைத்த பச்சைப் பட்டாணி - 5 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 50 மி.லி.

பச்சைமிளகாய் - 2

மல்லித்தழை

செய்முறை:

சிறுதானிய சமையல் !

4 கப் நீரை கொதிக்கவிட்டு உப்பு சேர்த்து காய்கறி, பட்டாணி, பச்சைமிளகாய் போட்டு பாதி வெந்ததும், கேழ்வரகு மாவையும் சேர்த்து கிளறவும். எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு இறக்கவும். தேவையான சைஸில் உருண்டைகளாக உருட்டி ஆம்லெட்டாகத் தட்டி ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு ஓரங்களில் எண்ணெய் ஊற்றி எடுக்கவும். கொத்துமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும். இந்த ராகி வெஜ் ஆம்லெட் ஆறிய பின்பும் கூட சுவைக்க ஏற்றது. இதற்கு சைட் டிஷ் எதுவுமே தேவையில்லை. ஆனியன் ராய்த்தா, தக்காளி சட்னி தொட்டு சாப்பிட்டால், மேலும் சுவையாக இருக்கும். இது சர்க்கரை நோயாளிகளுக்கும், ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கும் கூட மிகவும் ஏற்றது.      

கம்பு,கேழ்வரகு, சமையல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஐகுந்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம் கேழ் வரகு, கம்பு குறித்து தன்னுடைய அனுபவத் திலிருந்து தெரிவிக்கும் தகவல்கள்.

'கம்பு, ஆரியம் (கேழ்வரகு) இதெல்லாம் மேட்டுப் பகுதியில விளையற பயிர்கள். கம்பு, ஆரியத்தை அரைச்சு களி, கஞ்சியாக்கி சாப்பிடுவோம். காட்டுவேலை, கழனிவேலை செய்யறதுக்கு உடலுக்குத் தேவையான வலுவைக் கொடுக்குது. களியா சாப்பிடும்போது நீண்ட நேரம் வேலை செய்யும்போது பசியைத் தாங்குற சக்தியையும் கொடுக்குது. ராத்திரியில காய்ச்சி வைக்கிற கேழ்வரகு கஞ்சிய காலையிலே தயிரிலோ, மோரிலோ கரைச்சுக் குடிச்சுட்டு போனா, பகல் 12 மணி வரைக்கும் பசி தெரியாது.

சிறுதானிய சமையல் !

உடல்நலமின்றி இருக்கும் போது கஞ்சிதான் நோயைத் தாங்குற சக்தியை உடலுக்குக் கொடுக்குது. ஆறிப் போன மாவை சலித்து, கசகசாவை நசுக்கிப் போட்டு, தேங்காய் பாலோடு கலந்து சாப்பிட்டா, அப்படியரு சுவையா இருக்கும்' என்றார்.

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். இன்னைக்கு நிறைய பேருக்கு சுகர் இருக்கு. சர்க்கரை நோயாளிங்க ஆரியத்துல செய்ற களியையோ, கஞ்சியையோ இரண்டுவேளை உணவாக எடுத்துக்கிட்டு, தினமும் அரை மணிநேரம் உடற்பயிற்சி செஞ்சுட்டு இருக்கிறவங்களுக்கு சுகர் (சர்க்கரை நோய்) கூட சுமையா இருக்காது. எனக்கு இந்தமுறைதான் இப்போ கை குடுக்குது' என்றவர், அடுத்து, கம்பைப் பற்றியும் பேசினார். 'கம்ப ஒன்னுங்கொத்துல இடிச்சு, கஞ்சி காய்ச்சிக் குடிக்கலாம். மாவாக அரைச்சு களியாகவும் செஞ்சும் சாப்பிடலாம். மழைக் காலத்துல சாப்பிட்டா உடல் உஷ்ணத்த சீரா வெச்சுக்கும். ஆரியத்த விட கம்பு ருசியாக இருக்கும். உடலுக்கு இதுவும் வலு கொடுக்கக் கூடியது. இதுல செய்யற ரொட்டி, பூரி சுவையாக இருக்கும். இஞ்சி, தனியா, மிளகு, சீரகத்த இடிச்சு போட்டு, அதோடு கொத்துமல்லி, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, நெய் தடவி செய்யற ரொட்டி இன்னும் கூடுதல் சுவையைக் கொண்டது. நோய் எதிர்ப்புத் தன்மையையும் கொண்டது. கம்புல செய்யுற பூரிக்கு பிரண்டை, புதினா, கொத்துமல்லி துவையல்,  அவ்ளோ பிரமாதமாக இருக்கும். கம்பு, ஆரியம் ரெண்டுலேயும் செய்ற உணவு பதார்த்தங்களுக்கு செரிமானப் பிரச்னை இருக்கறதில்ல' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism