Published:Updated:

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:

இலவசப் பயிற்சிகள்

 பசுமைக் குழு

நன்னீர் மீன் வளர்ப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் அக்டோபர் 3-ம் தேதி காளான் வளர்ப்பு, 4-ம் தேதி பழத்தோட்ட மேலாண்மை, 8 மற்றும் 9-ம் தேதி தீவிர முறையில் வெள்ளாடு வளர்ப்பு, 10-ம் தேதி மதிப்பூட்டப்பட்ட பால்பொருட்கள் தயாரிப்பு, 17 மற்றும் 18-ம் தேதியில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடித் தொழில்நுட்பங்கள், 18-ம் தேதி அசோலா உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் நுண்ணுயிர் உரங்களின் பயன்பாடுகள், 29-ம் தேதி நன்னீர் மீன் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைப்பெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,
பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம்,  
(எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அருகில்) காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்-603203
தொலைபேசி: 044-27452371

தண்டோரா

இனப்பெருக்க மேலாண்மை!

திண்டுக்கல், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செப்டம்பர் 26-ம் தேதி கால்நடைகளில் இனப்பெருக்க மேலாண்மை பற்றிய பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு,

இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்-624004

தொலைபேசி: 0451-2460141

நாட்டுக் கோழி கலந்துரையாடல்!

தண்டோரா

சேலம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அக்டோபர் 1-ம் தேதி, நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் இடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
கால்நடை மருத்துவமனை வளாகம், பிரட்ஸ் ரோடு, சேலம்-636001
தொலைபேசி: 0427-2410408

கெண்டை மீன் வளர்ப்பு!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் 25-ம் தேதி ஆடு வளர்ப்பு, 26-ம் தேதி தேங்காயில் மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு, 27-ம் தேதி ஜிலேபி கெண்டை மீன் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் மையம், குன்றக்குடி, சிவகங்கை-630206
தொலைபேசி: 04577-264288.

இயற்கைக் கருத்தரங்கு\உணவுத் திருவிழா!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, கண்ணதாசன் மண்டபத்தில், (புதிய பேருந்து நிலையம் அருகில்) அக்டோபர் 6-ம் தேதி இயற்கை விவசாயம், சிறுதானியம், மரம் வளர்ப்பு குறித்த கருத்தரங்கு மற்றும் உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் கலந்து கொள்கிறார். முன்னோடி விவசாயிகள், வல்லுநர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்க உள்ளனர். மதிய உணவு, காலை, மாலை தேநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். முன்பதிவு முக்கியம்.

ஏற்பாடு: செந்தமிழர் பேரவை, காரைக்குடி.
தொடர்புக்கு, ஒருங்கிணைப்பாளர், செல்போன்: 75980-23751.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism