Published:Updated:

ஒப்புக்காக ஒரு சட்டம் ?

ஒப்புக்காக ஒரு சட்டம் ?

ஒப்புக்காக ஒரு சட்டம் ?

ஒப்புக்காக ஒரு சட்டம் ?

Published:Updated:
##~##

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

'தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் மேலாண்மை) சட்டம்-2003’ என்கிற சட்டத்தை, கடந்த சில தினங்களுக்கு முன் விலக்கிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'விவசாயத் தேவைக்காக நிலத்தடி நீரைப் பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பொதுமக்களுக்கு, லாரிகளில் நிலத்தடி நீர் எடுத்துச் செல்வதிலும் சிக்கல். எனவே, இச்சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கிறது' என்று கூறியிருக்கிறது தமிழக அரசு.

இத்தனைக்கும் கடந்த முறை அ.தி.மு.க. ஆட்சியிலிருந்தபோது, கொண்டு வரப்பட்ட சட்டம்தான் இது. உண்மையில், இப்படியரு சட்டம் இருந்ததே... பலருக்கும் இப்போதுதான் தெரிகிறது. ஆம், இதுநாள் வரையில் இந்தச் சட்டம் காரணமாக பெரிதாக யாரும் பாதிப்போ... பலனோ... அடைந்தார்களா என்று தெரியவில்லை. கொள்ளைலாபம் ஈட்டிவரும் தனியார் தண்ணீர் கம்பெனிகள் வேண்டுமென்றால், பாதிப்பு அடைந்திருக்கலாம், கூடுதல் கமிஷன் கொடுத்த வகையில்! மற்றபடி நிலத்தடி நீர், 2003-ம் ஆண்டில் இருந்ததைவிட, இந்த பத்தாண்டுகளில் மேலும் அதலபாதளத்துக்குத்தான் போயிருக்கிறது!  

ராட்சத மோட்டார்களை வைத்து, நிலத்தடி நீரை உறிஞ்சும் தனியார் தண்ணீர் கம்பெனிகள் புற்றீசல்களாக பெருகிக் கொண்டிருக்கின்றன; ஆலைகளுக்காக தினம்தோறும் லட்சோப லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சுவது தொடர்கதையாகவே இருக்கிறது.

'நிலைமை இப்படியே நீடித்தால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் பாலைவனமாவதைத் தடுக்க முடியாது' என்று ஆண்டுக்கணக்காக நீரியல் நிபுணர்கள் எச்சரித்துக் கொண்டே உள்ளனர். நீர்வளம் செறிந்த டெல்டா மாவட்டங்களிலேயே நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிக் கொண்டிருப்பதுதான் இதற்கு சாட்சி!

ஒப்புக்காக சட்டங்களைப் போட்டு வைத்தால், இதையெல்லாம் தடுத்துவிட முடியாது. உளப்பூர்வமாக ஒரு புரிதல் இருந்தால்தான் சாத்தியம். புரிந்து கொள்வார்களா ஆட்சியாளர்கள்?!  

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism