Published:Updated:

இந்த மரங்களை வெட்ட, எந்த அனுமதியும் தேவை இல்லை!

காசி. வேம்பையன்

இந்த மரங்களை வெட்ட, எந்த அனுமதியும் தேவை இல்லை!

காசி. வேம்பையன்

Published:Updated:

அரசு அனுமதி

##~##

தண்ணீர் பற்றாக்குறை, வேலையாட்கள் பற்றாக்குறை, விலையின்மை... என, பல காரணங்களால் மரம் வளர்ப்புக்கு மாறி, கடும் வறட்சியிலும் கஷ்டப்பட்டு மரங்களை வளர்க்கிறார்கள் விவசாயிகள் பலரும். 'மரம் வளர்ப்புக்கு வனத்துறை பல விதங்களில் உதவுகிறது... மரம் வெட்டுவதற்கு முந்தைய காலங்களில் இருந்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன...' என்றெல்லாம் அரசாங்கம் பிரசாரம் செய்தாலும், 'விற்பனையின்போது, வி.ஏ.ஓ. சான்று, வனத்துறை அனுமதி... என அலைய நேரிடுமோ?’ என்கிற அச்சம், அவர்களை தொடர்ந்து ஆட்டிப் படைத்தபடியேதான் இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இங்கே விவசாயிகளின் அச்சங்களைப் போக்கும் வகையில், விவரங்களை எடுத்துச் சொல்கிறார், கோயம்புத்தூர் மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கத்தின் பிரசாரப் பிரிவு தலைவர் நாராயணசாமி.

''சில விதிமுறைகள் விவசாயிகளுக்கு எதிராக இருந்தன. 'எந்த மரத்தை வெட்டுவதற்கு அரசு அனுமதி பெற வேண்டும்?, எதற்கு அனுமதி தேவையில்லை?’ என்பதில் குழப்பம் நீடித்தது. இதனால் மூங்கில், சவுக்கு போன்ற மரங்களை வெட்டும் போதுகூட விவசாயிகள் சிரமத்துக்கு ஆளானார்கள். இந்நிலையில், 2007-ம் ஆண்டிலிருந்து, தனியார் நிலங்களில் சமூகக் காடுகள் வளர்க்கும் திட்டத்தின் மூலம் அதிகப்படியான மரங்கள் நடவு செய்யத் துவங்கியதும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று... முதல் கட்டமாக, 2007-2008-ம் ஆண்டு வனத்துறை மானியக் கோரிக்கையில், தமிழக அரசு, இந்தியாவிலேயே முன்னோடியாக, 'தமிழ்நாடு தடி மர போக்குவரத்துச் சட்டம் 1968-ம் ஆண்டு’ விதிகளில் இருந்து 36 தடி மர வகைளுக்கு விலக்களித்து அரசாணை வெளியிட்டது.

இந்த மரங்களை வெட்ட, எந்த அனுமதியும் தேவை இல்லை!

அதன்படி, 'வெல்வேள், பெருமரம், வாகை, முந்திரி, வெள்ளைக்கடம்பு (கோல அயிலா), பலா, வேம்பு, மூங்கில், இலவமரம் (முல்லிலவு, இலவு, மலை இலவு, புலா), பனை (கரிம்பனை), சபங்கு (படுங்க), பொன் ஆவாரை (சீமை ஆவாரை, சின்னக் கொன்னை, மஞ்சள் கொன்னை உட்பட), சவுக்கு, இலவம்பஞ்சு (இது மற்றொரு வகை), சிசூ (சிஸ்சாம்), கல்யாண முருங்கை (மூர்க்கு), தைலமரம் (கற்பூரமரம் தவிர), குமிழ் (குமிழா உமிதேக்கு, குமழன், குமடி), ரப்பர், நீர்ப் பருத்தி (ஆற்றுப் பூவரசு), நாட்டுச் சவண்டல் (சூபாபுல்), இலுப்பை, மாமரம், மலைவேம்பு (துலுக்க வேம்பு), மலைவேம்பு (மாச வேம்பு), மலைவேம்பு (சந்தன வேம்பு, கரன்சுழி), மஞ்சனத்தி (நுணா, சௌவாபட்டை), கொடுக்காப்புளி (கோணப்புளி, மழவாகை, ஐயாமலை, கல்பாக்கு, மலைவாகை என இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள்) புங்கம், தூங்குமூஞ்சி (மழை மரம்), மகோகனி, மகோகனி (மற்றொரு சிற்றின ரகத்தைச் சேர்ந்தது), நாவல், புளி, சுவர்ணப்பட்டி, பூவரசு (சிலந்தி) ஆகிய 36 வகை மரங்களை வெட்ட அனுமதி கொடுத்தார்கள். அதைத் தொடர்ந்து, 'சில்வர் ஓக்’ மரத்துக்கு தனி அரசாணை வெளியிடப்பட்டது. ஆக, இதுவரை மொத்தம் 37 தடி மரவகைகளுக்கு, விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தேக்கு, செஞ்சந்தனம் போன்ற அரிய வகையான மரங்களை தனியார் நிலங்களில் வளர்க்கும்போது, காற்று, மழையில் சாய்ந்தால் வெட்டுவதற்குத் தடையில்லை. ஆனால், அவற்றை நிலத்தை விட்டு எடுத்து செல்ல அனுமதி வாங்க வேண்டும். இதுபோன்ற அரிய வகை மரங்களை நடவு செய்ததும் விவசாயிகள் உடனடியாக, கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று சிட்டா அடங்கலில், மரங்கள் நடவு செய்த விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் மரங்களை வெட்டும்போது பிரச்னை இருக்காது.

இந்த மரங்களை வெட்ட, எந்த அனுமதியும் தேவை இல்லை!

மரங்கள் நன்றாக முதிர்ந்ததும், வெட்டும் போது கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து சிட்டா வாங்கி, மாவட்ட வனத்துறை அலுவலரிடம் கொடுத்தால், அவர்கள் நம்முடைய நிலத்தில் இருக்கும் மரங்களை வனச்சரகர் மூலமாக ஆய்வு செய்து வெட்டுவதற்கு அனுமதி வழங்குவார்கள். வெட்டிய பிறகு, வனத்துறை அதிகாரிகளை அணுகினால்... அவர்கள் ஒரு குறியீடு கொடுப்பார்கள். அந்தக் குறியீட்டைப் பொறித்து, மரத்தை விற்பனைக்காக இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம்'' என்று சொன்னார் நாராயணசாமி.

ஏலம் மூலம் விற்பனை!

இந்த மரங்களை வெட்ட, எந்த அனுமதியும் தேவை இல்லை!

சந்தன மரங்கள் பற்றிப் பேசிய திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், ''விவசாயிகள், முதிர்ந்த சந்தன மரங்கள் இருக்கும் நிலத்தின் சிட்டா-அடங்கல் ஆகியவற்றை வனத்துறையில் கொடுத்தால், வனத்துறை அதிகாரிகள் நிலத்தில் நேரடியாக ஆய்வு செய்து, மரங்களுக்கு எண்களைக் கொடுப்பார்கள். அதன் பிறகு வனத்துறை அலுவலர் நேரடியாக, ஆட்களை வைத்து வெட்டி, விவசாயிகள் முன்னிலையில் எடை போட்டு, திருப்பத்தூர், சேலம், சத்தியமங்கலம் ஆகிய ஊர்களில் எது அருகாமையில் இருக்கிறதோ... அந்தக் கிடங்குக்கு அனுப்பி வைப்பார்கள்.

இங்கு வைத்துதான், சந்தன மரங்கள் ஏலம் மூலமாக விற்பனை செய்யப் படும். விற்பனை செய்யப்பட்ட தொகையில் இருந்து வெட்டுக்கூலி, போக்குவரத்துச் செலவு, அரசுக்கான வரிகள் உள்ளிட்ட செலவினங்களுக்காக 20% தொகையைப் பிடித்துக்கொண்டு, மீதி பணத்தை விவசாயிகளுக்கு வழங்கிவிடுவோம்'' என்று சொன்னார்!

தொடர்புக்கு, நாராயணசாமி,
செல்போன்: 99432-84746.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism