Published:Updated:

மண்புழு மன்னாரு !

மண்புழு மன்னாரு !

மண்புழு மன்னாரு !

மண்புழு மன்னாரு !

Published:Updated:
##~##

'பத்து கிணறுகள் ஒரு குளத்துக்கு சமம்
பத்து குளங்கள் ஒரு ஏரிக்கு சமம்
பத்து ஏரிகள் ஒரு மகனுக்கு சமம்
பத்து மகன்கள் ஒரு மரத்துக்கு சமம்...’

-இதை விட ரத்தினச் சுருக்கமா மரத்தோட அருமையப் பத்தி யாரும் சொல்ல முடியாதுங்க. இப்படிச் சொல்லி வெச்சவரு பேரு சுரபாலர். கி.பி. 10-ம் நூற்றாண்டுல வாழ்ந்தவர்னு சொல்றாங்க. மரங்களோட மகத்துவத்தை எடுத்துச் சொல்ற மாதிரி, காலத்துக்கும் அழியாத பொக்கிஷமான 'விருஷ ஆயுர்வேதம்’ங்கிற புத்தகத்துலதான் இதை எழுதியிருக்கார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழந்தைங்களுக்குத் தன்னம்பிக்கை கொடுக்கற துக்கு, ''அதப்படி, இதப் பாரு...''னு நிறைய விஷயத்தைச் சொல்வோம். அதெல்லாத்தையும்விட, எளிமையான வழி ஒண்ணு இருக்கு. குழந்தைங்க கையால, ஒரு மரத்தை நடச் சொல்லி, அதைப் பராமரிக்கச் சொல்லுங்க. அந்த மரம் வளர வளர குழந்தைகளோட தன்னம்பிக்கையும் தன்னால வளரும். இதை வெளிநாட்டு விஞ்ஞானிங்க நிரூபிச்சிருக்காங்க! வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கறதுங்கிறது நம்மளோட பாரம்பரியம். மரம் வளர்த்தா, நிழல் கொடுக்கும், பழம் கொடுக்கும்னுதான் நினைச்சுக்கிட்டு இருக்கோம். ஆனா, மரம் வளர்க்கறது மூலமா ஒரு நல்ல மனுஷனை உருவாக்க முடியும். அதனாலதான், மரங்களோடவே நம்ம முன்னோருங்க வாழ்ந்தாங்க!

மண்புழு மன்னாரு !

கேரளா பக்கம், கொடம்புளிக் குழம்பு ரொம்ப பிரபலம். அற்புதமான மருத்துவ குணம் கொண்ட, கொடம்புளிய உணவுல சேர்த்துக்கிட்டா... கெட்ட கொழுப்பு எதுவும் உடம்புல சேராது. எப்பவும், சுறுசுறுப்பா இருக்கலாம். ஆயுர்வேதத்துல, கொடம்புளிக்கு தனி மரியாதை இருக்கு. தமிழ்நாட்டுலயும், கொடம்புளி ஜோரா வளரும்ங்கிறது இனிப்பான விஷயம்!

டவுன்ல இருக்கிறவங்க வீட்டுல வாசனைக்காக 'ரூம் ஃபிரெஷ்னர்’ அடிப்பாங்க. கண்ட கண்ட ரசாயனத்தை குழந்தை, குட்டிங்க இருக்குற இடத்துல அடிச்சுட வேண்டியது... அப்புறம் அலர்ஜி அது, இதுனு டாக்டர்கிட்ட போய் பணத்தை அழ வேண்டியது. வீட்டுல 'கமகம’னு வாசனை அடிக்க, சுலபமான வழி இருக்கு. வீட்டுக்கு முன்னயோ, பின்னயோ செண்பக மரத்தை வளருங்க. அதோட

மண்புழு மன்னாரு !

வாசம் வீட்டுக்குள்ள இருக்கறவங்களுக்கு உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

கல்யாணம், காட்சி விசேஷம்னா பிரியாணி விருந்து போடறது கட்டாயமாயிடுச்சி. நம்மூர் பிரியாணியில கிராம்பு, ஏலம், பட்டை, சோம்பு, கசகசானு 13 வகையான மசாலாக்களைச் சேர்த்து செய்வாங்க. இதுக்கு பதிலா, 'ஆல் ஸ்பைஸ்’ங்கிற ஒரே ஒரு இலையைத் தூள் பண்ணி போட்டாலும், மசாலாவுக்கு இணையான பலன் கிடைச்சுடும்னு சொல்றாங்க. பெரும்பாலான உணவகங்கள்ல இதைத்தான் பயன்படுத்துறாங்களாம். மணம் சும்மா தூக்கலா இருக்கும். இதை தமிழ்ல்ல 'சர்வசுகந்தி'னு சொல்லுவாங்க. இந்த ஆல் ஸ்பைஸ் மரம், நிழல் விரும்பி மரம். தென்னந்தோப்பு, பாக்குத் தோப்புல ஊடுபயிரா சாகுபடி செய்யலாம். தமிழ்நாட்டுல பொள்ளாச்சி, பட்டுக்கோட்டை... பகுதிகள்ல இந்த மரத்தை சிலர் சாகுபடி செஞ்சுருக்காங்க.

இயற்கையை விரும்பறவங்க, படோடோபமான சோபாவை விரும்ப மாட்டாங்க. பிரம்பு நாற்காலி, மூங்கில் பெட்டி... மாதிரியான இயற்கைப் பொருள்களை வாங்கி, வீட்டை அழகுபடுத்துவாங்க. இப்போ அந்த வரிசையில, உண்ணிச் செடியும் (Lantana) சேர்ந்துடுச்சி. உலகம் முழுக்கவே, இதை, 'கொடிய களைச்செடி’னு ஓரமா ஒதுக்கி வெச்சுருந்தாங்க. ஆனா, பிரம்புக்கு பதிலா... இந்தச் செடியில, கலைநயம் மிக்க, விதம்விதமான நாற்காலி, ஊஞ்சல்னு செய்ய முடியும்கிறதுதான் உண்மை. கர்நாடக மாநிலம் பெங்களூருல இருக்குற 'அசோகா டிரெஸ்ட் ஃபார் ரிசர்ச் இன் எக்காலஜி அண்டு தி என்விரான்மெண்ட்’ங்கிற அமைப்பு, இப்படிப்பட்ட பொருட்கள் செய்றதுக்கான பயிற்சியைக் கொடுக்குது. இந்த விஷயம் தெரிஞ்ச பிறகு, உண்ணிச் செடிக்கு ராஜ மரியாதைதான் போங்க!

முகவரி:

ASHOKA TRUST FOR RESEARCH IN ECOLOGY AND ENVIRONMENT, Royal Enclave, Sriramapura, Jaggur post, Bangaluru- 560064. Phone : 080-23635555.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism