Published:Updated:

ஒற்றை நாற்றில், ஒப்பற்ற விளைச்சல்... இதோ ஓர் பயிற்சிப் பட்டறை !

மா.அ. மோகன்பிரபாகரன் படங்கள்: க. ரமேஷ்

ஒற்றை நாற்றில், ஒப்பற்ற விளைச்சல்... இதோ ஓர் பயிற்சிப் பட்டறை !

மா.அ. மோகன்பிரபாகரன் படங்கள்: க. ரமேஷ்

Published:Updated:

பயிற்சி

##~##

குறைவான விதைகளைப் பயன்படுத்தி, அதிக விளைச்சலை அள்ளும் சூத்திரம்... 'ஒற்றை நாற்று நெல் நடவு'. இந்த விஷயத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதற்காக, பசுமை விகடன் தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்தே ஏகப்பட்ட கட்டுரைகள், பயிற்சிகள்... என்று முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறோம். அந்த வகையில், பசுமை விகடன்- ஈரோடு, உழவன் உற்பத்தி நிறுவனம் இணைந்து, செப்டம்பர் 18 அன்று, ஈரோடு சி.டி. ரோட்டரி மஹாலில், பயிற்சிப் பட்டறைக்கு ஏற்பாடு செய்திருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம் பேசும்போது, ''குறைந்து வரும் நீராதாரங்களைக் கருத்தில் கொண்டு, ஒற்றை நாற்று நடவு போன்ற முறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் பாசன நீரின் உபயோகத்தை கணிசமாகக் குறைக்க முடியும். கூடவே, இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தினால், இடுபொருள் செலவுகளையும் பெருமளவு குறைக்க முடியும். விளைச்சலை பலமடங்கு உயர்த்த முடியும்.

பாரம்பரிய நெல் நடவு முறையில் ஒரு ஏக்கர் நடவுக்கு, ஒரு மூட்டை நெல் தேவைப்படும். ஆனால், ஒற்றை நாற்று முறையில் 2  முதல் மூன்று கிலோ விதைகளே போதுமானது'' என்பது உட்பட பல தகவல்களைப் பகிர்ந்தார்.

ஒற்றை நாற்றில், ஒப்பற்ற விளைச்சல்... இதோ ஓர் பயிற்சிப் பட்டறை !

ஒற்றை நெல் நடவு முறையில் பத்து ஆண்டுகளாக அதிக விளைச்சல் கண்டு வரும் நாகப்பட்டினம் மாவட்டம், ஆலங்குடி, பெருமாள், ''இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டாலே போதும். அதாவது, காய்ச்சலும் பாய்ச்சலுமாகத்தான் பாசனம் செய்ய வேண்டும். இடைவெளி அதிகம் இருப்பதால், அடிக்கடி களையெடுக்க வேண்டியிருக்கும். ஆனால், விளைச்சலை கணக்கிடும்போது, இந்த களையெடுக்கும் செலவு ஒரு பொருட்டே இல்லை'' என்றார்.

ஒற்றை நாற்று நடவில் அனுபவம் பெற்றிருக்கும் கரூர் மாவட்டம், நசியனூர், மோகனசுந்தரம் மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் 'மைராடா' கே.வி.கே. தொழில்நுட்ப அலுவலர் பச்சையப்பன் ஆகியோரும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்தனர்.

கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகளின் சார்பில் பேசிய மதுரையைச் சேர்ந்த கல்பனா, ''தமிழக விவசாயிகள் அனைவரும் இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், பசுமைவிகடனின் இத்தகைய முயற்சிகளுக்கு நன்றி செலுத்த வேண்டும்'' என்று சொல்லி நிறைவு செய்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism