Published:Updated:

'கடைசி மரமும் வெட்டுண்டு'! (வீடியோ)

'கடைசி மரமும் வெட்டுண்டு'! (வீடியோ)
'கடைசி மரமும் வெட்டுண்டு'! (வீடியோ)

'கடைசி மரமும் வெட்டுண்டு'! (வீடியோ)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மரம் வளர்ப்போம்... மழை பெறுவோம்... இப்படி இன்னும் அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தால் போரடிக்கிறதா?

மனதை வருடும் இசை... எளிமையான வரிகள்... இதோடு பிரபலங்கள் வந்து பாடினால் காது கொடுத்து கேட்பீர்கள்தானே? இதை அப்படியே வீடியோவாக 'கடைசி மரமும் வெட்டுண்டு' என்ற தலைப்பில் யூ-டியூபில் பதிவேற்றி லைக்ஸ் வாங்கி கொண்டிருக்கிறார் ஈரோட்டை சேர்ந்த தினேஷ் குமார்.

'கடைசி மரமும் வெட்டுண்டு'! (வீடியோ)

“நான் சுற்றுசூழல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவன். எனவே நமது இயற்கை சார்ந்த விஷயங்களில் மிகவும் ஈடுபாடு அதிகம். சுற்றுசூழல் ஆலோசகராக பணியாற்றி வருகிறேன். அப்படிப்பட்ட இயற்கை நம் கண் முன்னாலேயே கெடுவது என்பது வருத்தமான விஷயம் அல்லவா? அதை தடுக்க ஒரே வழி விழிப்புணர்வுதான். அதற்காக இன்னும் எப்போதும் போல, மரம் வெட்டாதீர்கள் என்று சொன்னால் யாருமே கவனிக்க மாட்டார்களே...? ஆனால், இது போன்ற விஷயங்கள்தானே அடுத்த இளம் தலைமுறையிடம் கொண்டு சேர்க்க வேண்டியவை? எனவேதான் புதிய வழிகளில் ஏதேனும் செய்ய வேண்டும் என யோசித்தோம். அப்போதுதான் அதையே பிரபலங்கள் மூலம் ஒரு வீடியோவாக எடுத்தால் என்ன என தோன்றியது. உடனே எனது நண்பர் கார்த்திக் ஹர்ஷா மூலம் ஒரு நல்ல டியூன் பிடித்தோம். பின்னர் ரொம்ப சிக்கலாக இல்லாமல் எல்லாரும் முணுமுணுக்கும் படி எளிமையான வரிகளை அமைத்து பாட்டை முடித்தோம். உலகின் கடைசி மரமும் வெட்டப்பட்டால் இந்த பூமி என்ன செய்யும்? மனிதன் எங்கே போவான்? என்ற எச்சரிக்கையாகவும் இருக்க 'கடைசி மரமும் வெட்டுண்டு' என்ற தலைப்பை பிடித்தோம்.

அடுத்து பிரபலங்கள் எல்லோரையும் இதில் இணைக்க ஏற்பாடு செய்தோம். ஆனால், சரியான திட்டமிடல், தொடர்புகள்  இல்லாததால் வெள்ளித்திரை பிரபலங்களை இதில் இணைப்பது கடினமாக இருந்தது. பின்னர் அப்படியே சின்னத்திரை பிரபலங்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் என பங்கேற்க வைத்தோம். ஒரு நடிகரை நாங்கள் இதில் பாட வைத்ததால் அவர் மூலம் இன்னொரு பிரபலம் எங்களுக்கு அறிமுகமானார். இப்படியே 27 நடிகர்களை நாங்கள் இதில் நடிக்க வைத்தோம். அவர்கள் எல்லாரிடமும் நான் கொடுத்த உறுதி மொழி நிச்சயம் இது வணிக நோக்கத்திற்காக செய்வது அல்ல என்பதுதான். இது பற்றி விளக்கியவுடன் அவர்களே எங்களுக்கு தோள் கொடுத்தனர்.

இப்படி ஒளிப்பதிவை முடித்து விட்டு இதனை பிரசாத் லேப்பில் வைத்து ரீ-ரெக்கார்டிங் எல்லாம் முடித்து விட்டு இதனை இந்த வருட சுற்றுசூழல் தினமான ஜூன் 5ல் வெளியிட முடிவு செய்தோம். இறையன்பு அவர்களிடம் இந்த பாடலை போட்டு காட்டினோம். உடனே அவருக்கு பிடித்து விட்டது. நிகழ்ச்சிக்கு வர சம்மதித்தார். இதற்காக இறையன்பு ஐ.ஏ.எஸ்., உயர் நீதிமன்ற நீதிபதி ராமநாதன், எக்ஸ்னோரா நிர்மல் ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சியை நடத்தி வெளியிட்டோம். வந்திருந்த விருந்தினர்கள் எல்லோருமே ஊக்கம் அளித்தனர். நாங்கள் இது அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அதேபோல வீடியோ பார்த்த நிறைய பேர்,  "நாங்கள் இனி எங்கள் பகுதிகளில் 100 மரம் நடுகிறோம், இனி எங்கள் பகுதிகளில் மரங்களை வெட்டமாட்டோம்...!" என்றெல்லாம் அழைத்து பேசுகின்றனர். அதையெல்லாம் கேட்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோல நிறைய நல்ல விமர்சனங்களோடு, அதை பகிரவும் செய்கின்றனர். அதோடு நிறைய பள்ளிகளில் சுற்றுச்சூழல் தொடர்பான கூட்டங்களுக்கு பேச அழைக்கின்றனர். இதெல்லாம் எனக்கு தெரிந்து நடப்பவை. எனக்கு தெரியாமலே நிறைய பேர் பாராட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

'கடைசி மரமும் வெட்டுண்டு'! (வீடியோ)

இனி வரும் காலங்களில் வேலை நாட்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் நிறைய பள்ளிக்கூடங்களுக்கு சென்று சுற்றுசூழல் விழிப்புணர்வுக்காக இதை திரையிட இருக்கிறோம். அடுத்த தலைமுறையினரை வழிநடத்தும் பொறுப்பும் நம் கையில்தான் இருக்கிறது” என்கிறார் தினேஷ்.

மழை வேண்டுமானால் மரம் வேண்டும்தானே?

-ஞா.சுதாகர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு