Published:Updated:

திருமண விழாவில் 'பசுமை விகடன்'!

திருமண விழாவில் 'பசுமை விகடன்'!
திருமண விழாவில் 'பசுமை விகடன்'!

திருமண விழாவில் 'பசுமை விகடன்'!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

யற்கை விவசயிகளின் மந்திரச்சொல்லாக இருந்து வருகிறது பசுமை விகடன். இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், சூழலியலாளர்கள் முதலானோர் பசுமை விகடன் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர். இதில் சென்னையைச் சேர்ந்த வீட்டுத்தோட்ட ஆர்வலர் பம்மல் இந்திரகுமாரும் அடங்குவார். இவர் ஹோம் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவராகவும் உள்ளார். தன் மகனின் (தங்கவேல்/மாதங்கி தம்பதி) திருமண விழாவில் 1,000 பசுமை விகடன் இதழ்களை அன்பளிப்பாக அளித்துள்ளார்.

திருமண விழாவில் 'பசுமை விகடன்'!

இதுகுறித்து இந்திரகுமாரிடம் பேசினோம். "பசுமை விகடன்தான் என் இதயம். மக்களுக்கு காலத்தின் கட்டாயமும்கூட. அந்தளவுக்கு இதுல தகவல்கள் பொதிந்துள்ளன. கிராமங்கள்ல சென்று நாங்கள் விவசாயம் குறித்து வகுப்பு எடுக்கிறோம். வீட்டிலே காய்கறி தோட்டம், மாடித் தோட்டம் ஆகியவற்றின் அவசியத்தை உணர்த்தி வருகிறோம். இந்த தகவல்கள் எல்லாம் பசுமை விகடனில் விரவி இருக்கின்றன. இதனால் இந்த புத்தகம் எல்லோருடைய கைகளிலும் இருக்க வேண்டும். கிராமங்களில் பசுமை விகடனின் இயற்கை விவசாயம் பிரபலம். நகரங்களில் பொதுவாக தெரியவில்லை. அதனால் அவர்களிடமும் இந்த புத்தகம் சேரவேண்டும் என்ற நோக்கத்தில் வழங்கி இருக்கிறேன்.

திருமண விழாவில் 'பசுமை விகடன்'!

பொதுவாக விழாக்களில் இயற்கை ஆர்வலர்கள் மரக்கன்றுகள் கொடுப்பாங்க. மரக்கன்றுகள் உற்பத்தி செய்வது குழந்தையை பெற்றெடுப்பதற்கு சமம். ஆனால் அந்த குழந்தையை நிறைய பேர் காப்பாற்றுவதில்லை. எங்க பகுதி மக்கள்கிட்ட வருகிற மரக்கன்றுகள் எல்லாம் என்கிட்ட வந்துடும். ஏன்னா, அவர்கள் அதை வளர்க்கமாட்டார்கள். அதனாலதான் விழாக்கள்ல மரக்கன்றுகளுக்கு பதிலாக காய்கறி விதைகளை கொடுங்கன்னு பல இடங்கள்ல பேசிட்டு வர்றேன்.

எங்க வீட்டுலயும் திருமணத்தில் மரக்கன்றுகள் கொடுங்கன்னு சொன்னாங்க. நான் பசுமை விகடன் தரலாம்னு சொல்லிட்டேன். 'மீன் கொடுக்காதீங்க, மீன் பிடிக்க கற்றுக்கொடுங்க'ன்னு ஒரு பழமொழி உண்டு. அதைத்தான் நான் செய்தேன். இயற்கை விவசாயம் பத்தின விழிப்புணர்வு ஏற்பட, ஏதோ என்னால் ஆன எளிமையான முயற்சி'' என்றார்.

- துரை.நாகராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு