அனைவருக்கும் பசுமை வணக்கம்...!

'பசுமைப் புரட்சியால் உணவு உற்பத்தி பெருகியது என்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், அதன் எதிர்விளைவாக கணக்கிலடங்கா நோய்கள் பெருகி, இந்திய மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை!'

கடந்த சில பல ஆண்டுகளாகவே இப்படியரு வாதம் தீவிரமாக முன் வைக்கப்பட்டு வருகிறது. இதிலிருக்கும் உண்மையை, உலக அளவிலான விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பசுமைப்புரட்சியின் தந்தை எனப்படும் 'வேளாண் விஞ்ஞானி' எம்.எஸ். சுவாமிநாதன் கூட... 'இனி இயற்கையோடு இணைந்த விவசாயமே வாழ வைக்கும்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இத்தனைக்குப் பிறகும்கூட, ரசாயன விவசாய மோகத்திலிருந்து இந்திய அரசோ... அதிகாரிகளோ வெளிவருவதற்குத் தயாராக இல்லை என்பதுதான் வேதனையளிப்பதாக இருக்கிறது.

இதற்கு நடுவே... பல்லுயிர்ப் பெருக்கம் குறித்து சென்னை, மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசியிருக்கும் தமிழகத்தின் தலைமைச் செயலர் மாலதி ஐ.ஏ.எஸ்., ''உயிரியல் தொழில்நுட்பம் குறித்த அறிவு நம்மிடையே பழங்காலம் முதலே தொன்றுதொட்டு இருந்து வருகிறது. தயிர், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களை நம்மவர்கள் கண்டறிந்து பயன்படுத்தியதே இதற்குச் சான்றாகும்.

பசுமைப் புரட்சி மூலம் நெல், காய்கனிகள் உள்ளிட்ட பலவகையான உணவுகள் நமக்கு கிடைத்தன. ஆனால், அவற்றில் ரசாயனச் சேர்க்கை அதிகரித்ததால், அதை உண்பவர்களுக்கு புற்றுநோய் போன்றவை ஏற்படுகின்றன. எனவே, ரசாயனத்தைப் பயன்படுத்தாமல், நன்மை செய்யும் நுண்ணுயிரிகளைப் பயன்படுத்துவோம்'' என்கிற ரீதியில் பேசியிருப்பது ஆறுதல் அளிக்கிறது.

தன்னார்வ அமைப்புகள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள்... போன்றவை இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன. அரசு இயந்திரமும் கைகொடுத்தால்... அதன் வேகம் இன்னும் அதிகரிக்கும்.

ரசாயனங்களுக்காக மேடையில் கவலைப்பட்டிருக்கும் தலைமைச் செயலாளர், இந்த விஷயத்தை முதல்வரின் கவனத்துக்கு உரிய வகையில் கொண்டு சென்று, இயற்கைப் புரட்சிக்கு வழிவகுக்கலாமே!

நேசத்துடன்,
பா.சீனிவாசன்,
ஆசிரியர்.