Published:Updated:

அன்று இயற்கை அழகு படைத்த ஏரி இன்று கூவம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அன்று இயற்கை அழகு படைத்த ஏரி இன்று கூவம்!
அன்று இயற்கை அழகு படைத்த ஏரி இன்று கூவம்!

அன்று இயற்கை அழகு படைத்த ஏரி இன்று கூவம்!

ந்தோரை வாழ வைத்த தமிழகத்தின் தலைநகரான சென்னையின் வரலாறு பழமையானது. தென்னிந்தியாவின் வாசலான சென்னை ஆரம்ப காலத்தில் மதராஸ் பட்டணம், மதராஸ் என்று அழைக்கப்பட்டுள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டு தான் அதிகாரப்பூர்வமாக சென்னை என்று மாற்றப்பட்டுள்ளது.
 

அன்று இயற்கை அழகு படைத்த ஏரி இன்று கூவம்!

ஆந்திர மாநிலம், நெல்லூர் அருகே உள்ள ஆர்மகாம் என்ற சிற்றூரில் தான் ஆங்கிலேயர்கள் வணிகத்தை தொடங்கினார்கள். அந்த இடத்தில் அவர்களுக்கு பல்வேறு கெடுபிடிகள் ஏற்பட்டதால் சென்னையை நோக்கி நகர்ந்தனர். அப்போது, மன்னர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் சென்னை ஓர் சிறிய கிராமமாக இருந்துள்ளது. ஆர்மகாம் பகுதி பிரதிநிதியாக சர் பிரான்ஸிஸ் டே இருந்தார். அவர், வணிகத்துக்காக சென்னையில் இடம் தேடி வந்த போது இங்குள்ள கடற்கரையின் மணல் மேட்டுப்பகுதியும், அடையாறு, கூவம், புலிக்காடு ஏரிப்பகுதி ஆகியவற்றின் இயற்கை அழகு அவரை வெகுவாக கவர்ந்தது.

அந்த சமயத்தில் புலிக்காடு ஏரிப்பகுதியை டச்சுக்காரர்களும், மயிலாப்பூர், செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதியை போர்ச்சுகீசியர்களும், உள்நிலப்பகுதியான பூந்தமல்லி, திருவல்லிக்கேணி போன்றவற்றை விஜயநகர நாயக்கர்களுக்குக் கீழே கப்பம் கட்டிவந்த சந்திரகிரி சிற்றரசர்களும் ஆட்சி செய்து வந்தனர். போர்ச்சுக்கல்காரர்களுடன் பிரான்ஸிஸ் டே சமாதானம் செய்து நட்புறவு கொண்டார். சந்திரகிரி சிற்றரசருக்கு பணம் கொடுத்து அந்நிலத்தை (இப்போதைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை) முறைப்படி வாங்கிக்கொண்டார். அங்கே ஆங்கிலேயர் சிறு கோட்டை ஒன்றைக் கட்டி தங்கள் வணிகமுகாமை கடந்த 1639ஆம் ஆண்டில் நிறுவினர். ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக அந்த இடத்தை தேர்வு செய்துள்ளனர். அந்த இடத்தில் 1644ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. இந்தப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன. ஆனால் இன்றைய சென்னை விரிவடைந்து காணப்படுகிறது.
 

அன்று இயற்கை அழகு படைத்த ஏரி இன்று கூவம்!

தென்னிந்தியாவில் நில அளவையாளராகப் பணியாற்றிய ஆங்கில அதிகாரி  கிளின் பார்லோ, எழுதிய சென்னையின் கதை என்ற நூல் சென்னையின் வரலாறை கதையாக சொல்கிறது. இதுபோன்று சென்னையின் வரலாறு தகவல்கள் இடம் பெற்றுள்ள பல நூல்கள் உள்ளன. அதில் உள்ள  சில முக்கியத்தகவல்கள் இது.

யுதர்கள் வணிக செய்த பகுதி பவளக்கார தெருவாக இருந்துள்ளது. அவர்களின் கல்லறைகள் இன்னமும் தங்க சாலை பகுதியில் உள்ளன. வடசென்னையில் காலடிபேட்டை என்ற பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் இன்னமும் நெசவாளர்கள் குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிக்கு காலடிபேட்டை என்ற பெயர் வந்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. கவர்னர் கால் என்பவர் நெசவாளர்களை அங்கு குடியமர்த்தி நெசவு தொழிலை செய்ய சொல்லி இருக்கிறார். அவரது நினைவாகவே அந்தப் பகுதிக்கு காலடிபேட்டை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னை கறுப்பர், வெள்ளையர் நகரமாக இருந்துள்ளது. அந்த சமயத்தில் ஏற்பட்ட போரில் ஆங்கிலேயேர்கள் கறுப்பர்களின் நகர் பகுதியை காப்பாற்ற கைவிரித்து விட்டார்கள். இதனால் கறுப்பர்கள் தங்களின் கோட்டையை காப்பாற்றவே வரி விதித்துள்ளார்கள். இது தான் வால்டாக்ஸ் சாலை என்ற பெயர் வந்துள்ளது. இதுபோன்று சென்னையில் உள்ள ஒவ்வொரு இடங்களின் பெயர் குறித்த விளக்கம் உள்ளன. சென்னையில் வசிப்பவர்கள் மட்டுமல்ல தமிழக மக்களுக்கு இந்த நூல்கள் ஒரு வரப்பிரசாதம்.

அன்று இயற்கை அழகு படைத்த ஏரி இன்று கூவம்!

1688ஆம் ஆண்டில் சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாக இதை பயன்படுத்தினார். பின்னர் இது பிரிட்டிஷ் அரசின் இந்திய காலனி பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது.

1746ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன.

1835ல் சென்னை மருத்துவப்பள்ளி தொடங்கப்பட்டது. 1871ல் சென்னையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. 1876ல் சென்னை துறைமுகத்தின் கட்டுமானப்பணிகள் தொடங்கின. 1888ல் இந்தியாவின் முதல் கிரிக்கெட் கிளப்பான மதராஸ் கிரிக்கெட் கிளப் தொடங்கப்பட்டது. 1900ல் மூர்மார்க்கெட் திறக்கப்பட்டது. 1913ல் சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடம் திறக்கப்பட்டது. 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது இந்தியாவின் 4வது மெட்ரோபாலிடன் நகராக விளங்குகிறது. இவ்வாறு சென்னையின் வரலாறை சொல்லிக் கொண்டே போகலாம்.

அன்றைய சென்னைக்கும், இன்றைய சென்னைக்கும் வித்தியாசங்கள் பல உள்ளன. தென் இந்திய கட்டட வேலைப்பாடு, இசை, நடனம், நாடகம் மற்றும் இதர கலைகளின் ஊற்றாகவும் காட்சி அளிக்கிறது. மிகப்பெரிய வர்த்தக, தொழில்துறை நகரமாகவும் சென்னை விளங்குகிறது. இந்தியாவின் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை, இந்திய வாகன உற்பத்தி தலைநகராக விளங்கும் சென்னையில்தான் உள்ளன. சென்னையில் உள்ள 12 கிலோ மீட்டர் நீள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாக திகழ்கிறது. புதுமையும் பழமையும் கலந்த நகராக இது இருக்கிறது. 200 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள இந்த நகரம் மேலும் விரிவடைந்து வருகிறது.

சென்னை பஸ் நிலையமான கோயம்பேடு பஸ் நிலையம் ஆசியாவிலேயே பெரிய பஸ் நிலையமாக கருதப்படுகிறது. கோயம்பேடு ஜவகர்லால் நேரு சாலையில் இது அமைந்துள்ளது. சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் என இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன. ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்கான டாங்குகள் தயாரிக்கப்படுகின்றன.

இன்று சாக்கடை ஆறாக ஓடும் கூவம் நதி முதலில் திருவல்லிக்கேணி ஆறு என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த ஆற்றைப் பற்றி தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நகரில் புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி உட்பட பல ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் மூலம் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தென்னிந்தியாவிலும், வங்காளத்திலும் வெள்ளையர் ஆட்சியை நிறுவிய ராபர்ட் கிளைவ்வின் திருமணம் மதராசபட்டினத்தில் தான் நடந்தது. சென்னை அந்த காலத்திலேயே முக்கிய நகரமாகத் திகழ்ந்துள்ளது என்று தகவல்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
 

அன்று இயற்கை அழகு படைத்த ஏரி இன்று கூவம்!

சென்னைக்கு இரண்டாயிரம் வயது என்று அதற்கானச் சான்றுகளை அடுக்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். சாந்தோம் பகுதியில் போர்ச்சுகீசியர்கள் 1520ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வந்தனர் என்பதும், ஏசுநாதரின் சீடர்களில் ஒருவரான புனித தோமையார் வந்த இடம் என்பதும் வரலாற்று உண்மை. மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்துக்கு கி.பி. 3ஆம் நூற்றாண்டில் வந்த திருஞானசம்பந்தர் "கார்தரு சோலை கபாலீச்சுரம் அமர்ந்தான்' என்று பாடியுள்ளார். திருமங்கையாழ்வாரோ திருவல்லிக்கேணிக்கு வந்து, பெருமாளை "நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்' என்று பாடியிருக்கிறார்.

திருவொற்றியூரில் பட்டினத்தடிகள் வாழ்ந்ததும், அவருக்கு சமாதி இருப்பதும், கோவளத்தில் முகமது நபிகளாரின் சஹாபாக்களில் ஒருவர் தங்கியிருந்தார் என்பதும் அவரது தர்கா இருப்பதும் வரலாற்றுக் குறிப்புகள். அறிஞர்கள் டாக்டர் மா.இராசமாணிக்கனாரின் பல்லவர் வரலாறு, ரா.பி. சேதுப்பிள்ளையின் ஊரும் பேரும் ஆகிய நூல்களையும், புதுச்சேரி ஆனந்தரங்கம் பிள்ளையின் நாள் குறிப்புகளையும் படித்தால் சென்னையின் வயது புரிந்துவிடும். திருவான்மியூர், திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சாந்தோம், கோவளம் ஆகியவை அனைத்துமே சில ஆயிரம் ஆண்டுகள் பழைமை கொண்டவைதான்.

அன்று இயற்கை அழகு படைத்த ஏரி இன்று கூவம்!

தண்ணீர்ப் பற்றாக்குறை தீர வெள்ளைக்காரரான எல்லிஸ், ஏழுகிணற்றை தோண்டியுள்ளார். அந்தப்பகுதி இன்று ஏழுகிணறு என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. மகாகவி பாரதி இல்லம், சேக்கிழார் பெருமான் வாழ்ந்த குன்றத்தூர், பூந்தண்மலி எனப்படும் பூந்தமல்லி போன்ற பல வரலாற்று சிறப்புக்கள் உள்ளன. சென்னை நகரத்தின் நிறுவன நாள் ஆகஸ்டு 22, 1639 என கருதப்படுகிறது. இந்த நாளை நகர மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் 'சென்னை டே'. இதற்கு வித்திட்டவர்கள் நகர வரலாற்று அறிஞர் எஸ்.முத்தையா, பத்திரிகையாளர்கள் சசி நாயர் மற்றும் வின்சென்ட் டி சோஸா. பின்னர் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சுசிலா ரவீந்திரநாத், ஆர்.ரேவதி, வி.ஸ்ரீராம் ஆகியோரும் இணைந்து நகரத்தின் பல்வேறு பகுதி மக்களை ஊக்குவிக்க, சென்னை தினக் கொண்டாட்டம் சென்னை வாரமாக விரிவடைந்துள்ளது.

அன்றைய, இன்றைய சென்னை புகைப்படங்களை நாம் பார்க்கும் போது அவைகளில் சில பாரம்பரிய கட்டடங்கள் நமக்கு வரலாற்று பாடங்களை கற்றுக் கொடுப்பதாக காணப்படுகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், நேப்பியர் பாலம், மரங்களுடன் காணப்படும் அண்ணாசாலை, ஸ்பென்சர் பிளாசா, மாநிலக்கல்லூரி, ரிப்பன் பில்டிங், பாரீஸ் கார்னர், கபாலீஸ்வரர் கோயில், சென்னை உயர் நீதிமன்றம், மூர்மார்க்கெட், மன்றோ சிலை, கன்னிமாரா நூலகம், ராயபுரம் ரயில்வே ஸ்டேசன் ஆகியவை நமக்கு வரலாற்றுச் சான்றாகவே காணப்படுகின்றன. சென்னையில் வானூயர கட்டடங்கள் ஆயிரம் வந்தாலும் எல்.ஐ.சி தான் அன்றைக்கு உயரமான கட்டடம். இத்தகைய பெருமையும், வரலாற்றையும் கொண்ட சென்னையின் பாரம்பரியத்தை காப்பாற்றுவது ஒவ்வொருவரின் கடமை.

-எஸ்.மகேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு