பளிச்... பளிச்...

115 நாள் வயது.
அடியுரமாக வேப்பிலை.
நோய், பூச்சித் தாக்குதல் இருக்காது.

ரசாயன உரங்களை அள்ளிக் கொட்டியும், பூச்சிக்கொல்லிகளை லிட்டர் லிட்டராக தெளித்தும்தான் நெல்லில் அதிக விளைச்சலை எடுக்க முடியும்’ என்பது பலரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால், 'அது அவநம்பிக்கை' என்று சொல்லி, அதை அடியோடு தகர்க்கும் வகையில், 'இயற்கை விவசாயத்திலும் ரசாயனத்துக்கு இணையான மகசூலை எடுக்க முடியும்’ என்று நிரூபித்து வருகிறார், திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி.

உடம்பைப் பதம் பார்த்த பூச்சிக்கொல்லி!

ஒரு மாலைப் பொழுதில் தோட்டத்தில் நெல் தூற்றிக் கொண்டிருந்த ராமசாமியை சந்தித்தோம்.

''விவசாயம் எங்க குடும்பத் தொழில். அதனால, சின்ன வயசுல இருந்தே எனக்கும் விவசாயம் தெரியும். நான் என் சம்பாத்தியத்துல 1966ம் வருஷம் 6 ஏக்கரா நிலம் வாங்கினேன். அந்த மண்ணுல பயிர் எதுவும் சரியா வராதுனு எல்லாரும் சொன்னதால, ஏரியில இருந்து மண்ணை அள்ளிட்டு வந்து கொட்டி, சரி பண்ணினேன். விவசாய ஆபீசருங்க சொன்னபடி, ஐ.ஆர்.-8 நெல், சீ.ஹெச்-கம்பு ரகங்களை அதுல சாகுபடி பண்ணிட்டிருந்தேன்.

அந்த சமயத்துல பூச்சிக்கொல்லிகளைத்தான் பயன்படுத்தினேன். அது என் உடம்புக்கும் ஒப்புக்காம போயி, முழுக்க கொப்புளம் கொப்புளமா வர ஆரம்பிச்சிடுச்சி. 'இனிமே நீங்க பூச்சிக்கொல்லியைத் தொடவே கூடாது’னு டாக்டர் சொல்லிட்டார். அதுல இருந்துதான் கொஞ்சம் கொஞ்சமா இயற்கை விவசாயத்துக்கு மாற ஆரம்பிச்சேன். 2000ம் வருஷத்துக்கப்பறம் முழு இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன்.

இப்போ மூணு ஏக்கர்ல பழ மரங்களை வெச்சி விட்டுருக்கேன். ஒரு ஏக்கர்ல சொந்தத் தேவைக்காக காய்கறிகள் போடுறேன். மீதியிருக்கற ரெண்டு ஏக்கர்ல, தண்ணி வசதியைப் பொருத்து ஒட்டுக்கிச்சலி ரக நெல், நிலக்கடலை ரெண்டையும் மாத்தி மாத்தி வெள்ளாமை பண்றேன்.

போன போகத்துல 80 சென்ட் நிலத்துல ஒற்றை நாற்று முறையில் ஒட்டுக்கிச்சலி ரக நெல் போட்டிருந்தேன். நல்ல மகசூல்'’ என்று உற்சாகமாகப் பேசிய ராமசாமி, 80 சென்ட் நிலத்தில் தான் பயன்படுத்தும் சாகுபடித் தொழில்நுட்பங்களை எடுத்து வைத்தார். அதை, பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

80 சென்ட் வயலுக்கு, 2 சென்ட் நாற்றங்கால்!

'ஒட்டுக்கிச்சலி ரக நெல் 115 நாள் வயது கொண்டது. ஆடி, ஆவணி, தை, மாசி ஆகிய மாதங்களில் நடவு செய்யலாம். உவர், களர்மண் தவிர, மற்ற மண்கண்டங்களில் நன்கு வளரும். 80 சென்ட் நிலத்தில் நடவு செய்ய, 2 சென்ட் நிலத்தில் நாற்றுப் பாவ வேண்டும். நாற்றங்கால் அமைக்கத் தேர்வு செய்த நிலத்தில் 250 கிலோ வேப்பிலையைக் கொட்டி, ரோட்டாவேட்டர் மூலம் உழவு செய்ய வேண்டும். 5 நாட்கள் அப்படியே விட்டு, மீண்டும் இரண்டு உழவு செய்து நிலத்தை சமப்படுத்த வேண்டும். பிறகு, 10 கிலோ மண்புழு உரம், 200 கிராம் பாஸ்போ-பாக்டீரியா, 200 கிராம் அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து தூவ வேண்டும்.

15 நாளில் நாற்று தயார்!

5 கிலோ ஒட்டுக்கிச்சலி ரக விதைநெல்லுடன் 100 கிராம் சூடோமோனஸை கலந்து ஒரு நாள் வெயிலிலும், ஒருநாள் இருட்டிலும் வைத்து, மூன்றாம் நாள் நாற்றங்காலில் அரையடி உயரத்துக்கு தண்ணீர் நிறுத்தி விதைகளைத் தூவ வேண்டும். 18 மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து, ஒரு நாள் அப்படியே விட வேண்டும். மீண்டும் தண்ணீர் கட்டி இரண்டு மணி நேரம் நிறுத்தி, பிறகு வடித்துவிட வேண்டும். விதைத்த 3-ம் நாளில் முளைவிடும். 5ம் நாளில் இருந்து பாய்ச்சலும் காய்ச்சலுமாக தண்ணீர்விட வேண்டும். 15ம் நாளுக்கு மேல் நடவுக்குத் தயாராகி விடும். இந்தப் பதினைந்து நாள் இடைவெளியில், வயலைத் தயார் செய்துவிட வேண்டும்.

அடியுரமாக வேப்பிலை!

2 டன் வேப்பிலையை நிலத்தில் பரப்பி, ஓர் உழவு செய்து தண்ணீர் கட்டி, 10 நாட்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். இந்த இடைவெளியில் வேப்பிலை நன்கு அழுகி விடும். பிறகு, 50 கிலோ வேப்பம்பிண்ணாக்கு, 200 கிலோ மண்புழு உரம், 2 கிலோ பாஸ்போ-பாக்டீரியா, 2 கிலோ அசோஸ்பைரில்லம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து நிலத்தில் தூவி, இரண்டு உழவு செய்து பரம்படிக்க வேண்டும். நடவுக்கு முன்னர் நாற்றங்காலின் ஒரு ஓரத்தில் சிறு பள்ளம் எடுத்து, அதில் தண்ணீர்விட்டு, அரை கிலோ சூடோமோனாஸை கரைத்து வைத்துக் கொண்டு, நாற்றின் வேர்ப்பகுதியை இக்கரைசலில் முக்கி எடுத்து ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை, நாற்றுக்கு நாற்று முக்கால் அடி இடைவெளி இருக்க வேண்டும்.

1 தூருக்கு 30 சிம்பு... 1 சிம்புக்கு 250 மணிகள்!

வயலில் காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீரைப் பராமரிக்க வேண்டும். நடவு செய்த 15ம் நாள் கோனோவீடர் மூலம் களையை அழுத்தி, 50 லிட்டர் தண்ணீரில் ஒன்றரை லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து வயல் முழுதும் தெளிக்க வேண்டும். 30-ம் நாள் ஒரு முறை கோனோவீடர் மூலம் களையை அழுத்தி விடவேண்டும். இதனால் பயிரின் பக்க வேர்கள் அறுபட்டு, அதிகத் தூர்கள் பிடிக்கும். இந்த ரக நெல்லை சாகுபடி செய்யும்போது பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இருப்பதில்லை. அதனால், வேறு எந்த இடுபொருட்களும் கொடுக்கத் தேவையில்லை. 65 முதல் 70-ம் நாளுக்குள் கதிர் பிடிக்க ஆரம்பிக்கும். 90-ம் நாளுக்கு மேல் கதிர் முற்ற ஆரம்பித்து, 115ம் நாளில் அறுவடைக்குத் தயாராகி விடும். ஒரு தூருக்கு 25 முதல் 30 சிம்புகளும், ஒரு சிம்புக்கு 200 முதல் 250 நெல்மணிகளும் இருக்கும்.’

நிறைவாகப் பேசிய ராமசாமி, ''75 கிலோ மூட்டையில 15 மூட்டை நெல் கிடைச்சிருக்கு. இதுவே ரசாயன விவசாயத்துல விளைஞ்சிருந்தா... மூட்டைக்கு 65 கிலோதான் இருக்கும். அந்த அளவுக்கு இயற்கையில விளைஞ்ச நெல்லுல அடர்த்தி கூடுதலா இருக்கு. அதேமாதிரி 100 கிலோ நெல்லுக்கு 70 கிலோ அரிசி கிடைக்குது. சாதாரணமா 60 கிலோதான் கிடைக்கும். நான் அரிசியாக்கித்தான் விற்பனை செய்றேன். 15 மூட்டையை அரைக்கிறப்போ 780 கிலோ வரைக்கும் அரிசி கிடைக்கும். கிலோ 40 ரூபாய்னு விற்பனை செய்யுறேன்.

80 சென்ட்ல சாகுபடி செய்யுறப்போ எல்லாச் செலவும் போக 20 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்குது'' என்றார் ஏக சந்தோஷத்துடன்!

தொடர்புக்கு
ராமசாமி, அலைபேசி: 97871-64010.