அனைவருக்கும் பசுமை வணக்கம்..!

'உணவுப் பாதுகாப்பு மசோதா' என்ற ஒன்று, ஏப்ரல் 25-ம் தேதியன்று மத்திய அமைச்சரவைக் குழுவால் இறுதி வடிவம் பெறுகிறது. 'அனைத்து மக்களுக்கும் உணவு என்பதுதான்' இதன் முக்கிய நோக்கம்.

மேம்போக்காக பார்த்தால்... 'நல்ல விஷயம்' என்று பாராட்டித் தள்ளத்தான் தோன்றும். ஆனால், உண்மை என்னவென்று பார்த்தால் கோபம்தான் பொங்கிப் பெருகும்!

அனைவருக்கும் உணவிட வேண்டுமெனில், விவசாயத்திலிருக்கும் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதற்குத்தானே முக்கியத்துவம் தரப்பட வேண்டும்? ஆனால்... சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழிற்சாலைகள், நான்கு வழிச் சாலைகள், விமான நிலையங்கள் என்று விவசாய நிலங்களையெல்லாம் தாறுமாறாக ஆக்கிரமிப்பதற்குத்தானே முக்கியத்துவம் தரப்படுகிறது.

இந்நிலையில், 'உணவுப் பாதுகாப்பு மசோதா' என்ற ஒன்றை நிறைவேற்றுவதைப் பார்க்கும்போது... 'நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு, அடி மரத்தை வெட்டிக் கொண்டிருந்தவன்' கதைதான் நினைவுக்கு வருகிறது!

'அணு உலைகளைக் கட்டமைப்பது, செயற்கைகோள்களை விட்டுக் கொண்டே இருப்பது போன்றவற்றையெல்லாம்விட நாட்டின் வளர்ச்சிக்கு உணவு உற்பத்தி மிக முக்கியமானது. குறையும் நிலப்பரப்பு, குறைவான நீர்வளம், மாறி வரும் பருவநிலை... போன்றவற்றுக்கு நடுவேதான், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சோறு போட்டாக வேண்டும் என்பதை உணர்ந்து, 'உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க அரசு முயற்சிக்க வேண்டும்'

-இப்படி அவ்வப்போது சமூக ஆர்வலர்கள் பலரும் எச்சரிக்கை மணி அடிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், இதெல்லாம் ஆள்வோரின் காதுகளுக்குத்தான் எட்டுவதே இல்லை. ஒருவேளை, எதிர்காலத்தில் பசித்த வயிறுகள் வீதிக்கு வந்து, எழுப்பப் போகும் எரிமலை உறுமல் அவர்களின் காதுகளை எட்டுமோ என்னவோ!

நேசத்துடன்,
ஆசிரியர்.