முறையீடு
கோவணாண்டி

ட்சிக் கட்டிலில் அமரத் துடிக்கும் வருங்கால ச.ம.உ-க்களே (சட்டமன்ற உறுப்பினர்)... உங்க எல்லோருக்கும் வணக்கத்துடன் முன்கூட்டியே வாழ்த்தைச் சொல்லிக்கறான் ஒங்க பாசக்கார கோவணாண்டி.

எங்களுக்கெல்லாம் அள்ளிக் கொடுக்கச் சொல்லி, உங்ககிட்ட உங்க தலைமைக் கொடுத்ததை, நீங்க கிள்ளிக் கொடுத்துட்டு... மீதியை மறைச்சு வெச்சுட்டீங்க. எங்க வாய்க்கு மண்ணைப் போட்ட தேர்தல் கமிஷனை நாங்கள்லாம் ஓயாம திட்டித் தீர்த்துக்கிட்டிருக்கோம். நீங்களோ... டாஸ்மாக் பார்லயும், ஸ்டார் ஓட்டல் இருட்டுலயும் டேரா போட்டு, ஒரேயடியா 'ஓ’ போட்டு தேர்தல் கமிஷனைப் பாராட்டிப் பேசிக்கிட்டிருக்கறீங்க.

சரி, அதை இனிமே பேசி பிரயோஜனமில்ல. நீங்களும் இனிமே முடிச்சை அவுத்துக்கிட்டு, கொண்டு வந்து கொட்டப் போறதில்ல... இறுக்கிக் கட்டினது கட்டினதுதான்! அதனால, அதை விட்டுத் தள்ளுவோம். இப்ப நான் ஒங்ககிட்ட முன் வைக்கறது... வேற ஒரு சங்கதியைத்தான்!

அதாவது... கப்பல் கவுந்து போன பிறகு, கடைசி முயற்சியா... கடல்ல மிதக்கற கட்டையப் பிடிச்சு கரையேறுன மாதிரி, கொள்கைக் கப்பல் கவுந்து போயி, அரசியல் கடல்ல கரையேற முடியாம கதறுன ஒங்கக் கட்சிக எல்லாம், சினிமா கவர்ச்சிங்கற கட்டையைப் புடிச்சுக்கிட்டுத்தான் கரையேற முயற்சி செஞ்சிருக்காங்க!

யாரு உசுரோட ஒதுங்கினா... யாரு கட்டையோட காணாம போனாங்கங்கிறதெல்லாம் மே 13-ம் தேதி தெரிஞ்சு போயிடும். முடிவு தெரியற வரைக்கும் மு.க-வையும் முறைச்சுக்கக் கூடாது... அறிவிப்பு வர்ற வரைக்கும் அம்மாவையும் அர்ச்சனை செய்யக் கூடாதுங்கறதால ஒட்டுமொத்த ச.ம.உ-க்களான உங்கக்கிட்ட ஒரு உதவியைக் கேக்குறேன். நீங்கள்லாம்... 'சொன்னதையும் செய்வீங்க, சொல்லாததையும் செய்வீங்க'ங்கிற நம்பிக்கையிலதான் கேக்குறேன்.

'சொல்லப்போனா, இப்ப நான் கேட்கறது... எங்கப் பிரச்னையைப் பத்தி இல்லீங்க. நீங்க இலவசமா கொடுக்கப் போறதா அறிவிச்சிருக்கீங்களே... 20 கிலோ அரிசி...

35 கிலோ அரிசி..! அதையெல்லாம் தட்டுப்பாடு இல்லாம நாங்க உற்பத்தி பண்ணிக் கொடுக்கறதுக்காக, உங்க பக்கமிருந்து என்னென்ன உதவிகளையெல்லாம் நீங்க எங்களுக்கு செஞ்சு தரணும்கிறத பத்தித்தான்!

அதாவது, சுதந்திர இந்தியாவுல... தட்டுனா, தங்கம் கிடைக்கும்; வெட்டுனா, வெள்ளி கிடைக்கும்; இடிச்சா, இரும்பு கிடைக்கும்; அடிச்சா, அலுமினியம் கிடைக்கும்; ஆனா, நடிச்சா... நாடே கிடைக்கும்னு தெளிவா தெரிஞ்சு வெச்சுகிட்டு, நடிகருங்க பின்னாடி வேட்பாளரான நீங்க ஓட்டு கேட்டுப் போனீங்களே... அதே ஐடியாவை விவசாயத்துலயும் புகுத்தினா, நாங்களும் நாலு காசு பாத்துக்குவோம்ல?

இப்ப வயக்காட்டு வேலைகளுக்கு வயசான கிழடு கெட்டைகதான் வருது. வாலிபப் பசங்க எட்டிக்கூட பாக்குறதில்லை. அதனால் உங்க பாணியில சினிமா கவர்ச்சிக் கன்னிகள (!) விவசாயத்துல இறக்கி, விளைச்சலைக் கூட்டுங்க... அம்புட்டுதேன்.

நெல் உற்பத்தியைப் பெருக்குறதுக்காக 'ராஜராஜன்-1000’ நடவு முறையைப் பத்தி கரடியா கத்துது கெவரு'மண்டு’. ஆனாலும் முழுசா புரிஞ்சுக்க முடியாம முழிக்கறாங்க முக்கால்வாசிபேர். அதனால, 'நமீதா நெல்-1000’னு பேரை மாத்தி வெச்சு, நமீதாவை வெச்சே நாத்து நடுற முறையைச் சொல்லிக் கொடுத்துப் பாருங்க... பிறகு, வாலிப வயசுல இருக்குற மச்சான்கள்லாம் வயல்லதானே கிடப்பாங்க!

ஆடு வளர்ப்பைப் பத்தி அசினை வெச்சி சொல்லிக் கொடுங்க... 'ஆடு கண்ணு... ச்சும்மா வளரு கண்ணு'னு அம்மணி ஒரு டயலாக்கை எடுத்துவிட்டா, ஆளாளுக்கு ஆடுகள மேய்க்க ஆரம்பிச்சுட மாட்டாங்க!

கரும்பை நட்டுப்புட்டு, வெட்டுறதுக்கு ஆளில்லாம அவனவன் நொந்து நொம்பளமாகியிருக்கான். அதனால, 'நயன்தாரா நயம் கரும்பு'னு ஒண்ணைக் கிளப்பிவிட்டு, காட்டுப் பக்கம் நயன்தாராவையும் ஒரு ரவுண்ட் வர வெச்சி வெட்டிக் காண்பிச்சா... 500 ஏக்கரா இருந்தாலும், 5 நிமிஷத்துல வெட்டித்தள்ளிட மாட்டானுங்களா நம்ம இளந்தாரிக!

'இரண்டாம் பசுமைப் புரட்சி வேணும்'னு அய்யா அப்துல் கலாம் சொல்றதை யாரும் சட்டை பண்ற மாதிரி தெரியல. ஆனா, அதையே, நம்ம சினேகா சொன்னா... நாக்குல நட்டுவாக்காலி கொத்தினாக்கூட சிரிச்சுக்கிட்டே கேப்பாங்களே... நடுத்தர வயசு நம்மாளுங்க!

திரிஷாவை வெச்சு தினை; சூரியாவை வெச்சு சூரியகாந்தி; அனுஷ்காவை வெச்சு அவரைக்காய்; தமன்னாவை வெச்சு தக்காளினு ஒவ்வொரு பயிருக்கும், சினிமா கவர்ச்சி கன்னிகளையும், காளைகளையும் பயன்படுத்தினா... விளைச்சல் வீங்கிடும். நீங்களும் இலவசங்கள இடைஞ்சல் இல்லாம கொடுக்க முடியுமே!

'ஆகா... கத்திரி வெயில்ல கபாலம் சூடாகி, கழண்டுபோயி அசின், பிசின்னு அலையறானே இந்தக் கோவணாண்டி'னுதானே முணுமுணுக்கறீங்க. ஒங்கமேல சத்தியமா அப்படி இல்லீங்க, நான் தெளிவாத்தான் பேசுறேன்.

அய்யா சாமீகளா, தள்ளாத வயசுல, தள்ளுவண்டியில ஊர்வலம் வர்ற கலைஞரே... பெரியார், அண்ணா, சம்பத் மாதிரியான ஜாம்பவான்கள் கடைபிடிச்ச திராவிடக் கொள்கைகளை, பரப்புறதுக்கு... கவர்ச்சிக் கடல் குஷ்புவைத்தான் களத்துல இறக்கிவிட்டிருக்கார்.

அந்தப் பக்கம் இந்தப் பக்கம் இஷ்டத்துக்கு ஓடியாட முடியாம, உக்கார்ந்த இடத்துல இருந்தே வண்டிக்கு மேல தலையை நீட்டி, நாட்டைச் சுத்தி வந்த ஜெயலலிதா, 'கவர்ச்சிப் புயல்' விந்தியாவைத்தான் காடுமேடெல்லாம் அலைஞ்சு எம்.ஜி.ஆரோட கொள்கைகள கூவ விட்டிருக்காங்க.

அப்படியிருக்கறப்ப... வறட்சியால... வறுமையால வாடிக்கிட்டு 'காடு, காடு விட்டா வீடு'னு விட்டேத்தியா கிடக்குற கோவணாண்டிக, வெளைச்சலைப் பெருக்க வேஷதாரிகளைக் கூப்பிட்டா தப்பா?

கண்ட கருத்துகளையும் கரைச்சு குடிச்ச கம்யூனிஸ்ட்டுகளே, 'கருப்பு எம்.ஜி.ஆர்' பின்னாடியும், சிங்கமுத்துபின்னாடியும் சின்னப்பிள்ளையாட்டம் கையைக் கட்டிக்கிட்டு போறப்ப... எழுதப் படிக்க தெரியாத நாங்க யாரு பின்ன போனா என்ன?

'வாழும் வள்ளுவர், செம்மொழிக் கொண்டான், முத்தமிழ் வித்தகர், பகுத்தறிவுப் பாசறை, இலவசங்களின் இமயம்'னு பட்டங்களின் பல்கலைக்கழகமா இருக்குற கலைஞர்... போற இடத்துல கூடின கூட்டத்தைவிட காமெடி பீஸு வடிவேலுக்குதானே கூடுதல் கூட்டம் கூடுச்சு. அதனால... இந்த கவர்ச்சிக் கன்னிகள், கவர்ச்சிக் கடல்கள், கவர்ச்சி எரிமலை, கவர்ச்சிக் காட்டாமணக்கு, நகைச்சுவைப் புயல்கள் எல்லாத்தையும் வயக்காட்டுப் பக்கம் ஓட்டிவிட்டீங்கனா... உற்பத்தியும் பெருகும்... இளசுகளையும் காட்டுலயே கட்டிப் போட முடியும்.

அப்புறம் இன்னுமொரு யோசனை... பன்னாட்டுக் கம்பெனிங்க, பணக்காரங்கள்ல்லாம் சேர்ந்துகிட்டு, விளையாட்டு வீரர்கள விலைக்கு வாங்கி, டொண்டி... டொண்டி... கிண்டி... கிண்டினு கிரிக்கெட் சூதாட்டத்தை நடத்தி, வியாபாரத்த பெருக்கற மாதிரி நாமளும் நடிக, நடிகைகளை விலைக்கு வாங்கி, நாத்து நடுற போட்டி, களையெடுக்குற போட்டி, அறுவடை போட்டினு அமர்க்களப்படுத்தினா, உணவு உற்பத்தி தன்னால தன்னிறைவு அடைஞ்சிடும்ல. இன்னொருப் பக்கம் ஏலம் எடுத்தவங்க பாக்கெட்டும் நிறைஞ்சுடும்ல!

அதனால நீஙக எல்லாரும் சேந்து முடிவு பண்ணி கவர்ச்சிக் கடலுல எங்களையும் குளிக்க வையுங்க. போற வழிக்கு புண்ணியமாவது கிடைக்கும். வாழ்க ஜனநாயகம்!