ஆர்.குமரேசன்

பளிச்... பளிச்...

அதிக தண்ணீர் தேவையில்லை.
வேலையாட்கள் பிரச்னையில்லை.
ஆண்டுக்கு

1,50,000.

வீடுகளில் வளர்க்கப்படும் செடிகளில் முக்கியமானது செம்பருத்தி. இதன் பூவை பூஜைக்காக பலர் உபயோகப்படுத்துகின்றனர். ஆனால், அது அதிக மருத்துவ குணம் வாய்ந்தச் செடி என்பது பலருக்கும் தெரியாத விஷயம். சித்த மருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவத்தில் இதய நோய்க்கான மருந்து தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக இருப்பது செம்பருத்தி. அதனால் மருந்து உற்பத்தித் துறையில் இதற்கு மிகப்பெரிய தேவை இருக்கிறது. இதைச் சரியாக புரிந்துகொண்ட சிலர் செம்பருத்தியைத் தனிப்பயிராக சாகுபடி செய்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்... விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மாதாங்கோவில்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி.

''எனக்கு மொத்தம் ரெண்டரை ஏக்கர் நிலமிருக்கு. மிளகாய், பருத்தி, கம்புனு இந்தப் பகுதியே செழிப்பா விளைஞ்ச பூமிதான். ஆனா, காலப்போக்குல சரியா மழை பெய்யாம வறட்சி பூமியா மாறிப்போச்சு. தண்ணி தட்டுப்பாடு, வேலையாள் பிரச்னைனு ஒவ்வொண்ணையும் சமாளிக்க முடியாம... சோளம், கம்புனு மானாவாரி வெள்ளாமை மட்டுமே பண்ண வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிட்டோம். அதுவும்கூட, இருக்கற தண்ணிய வெச்சு, கொஞ்சம்பேர் மட்டும் வெள்ளாமை செஞ்சிகிட்டு இருக்கோம். வர்ற வருமானம் வாய்க்கும், வயித்துக்குமே காணாமத்தான் இருக்கு.

இந்த நிலையில, அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்பதான்... 'செம்பருத்தி நடுங்க, செலவில்லாம வருமானம் பாக்கலாம்'னு அதை ஏற்கெனவே எங்க பகுதியில பயிர் செஞ்சிருந்த கருப்பையா சொன்னார். கூடவே, அது தொடர்பான ஆலோசனைகளையும் தந்தார்.

ஆட்டுக்கு அகத்தி!

மொத்த இடத்துலயும் சாகுபடி செய்யாம, 40 சென்ட்ல மட்டும் போன வைகாசியில செம்பருத்தியை நட்டு, ஊடுபயிரா கறிவேப்பிலையையும், வாய்க்கால்ல அகத்தியையும் நட்டேன். அந்த நேரத்துல கருப்பையாவோட தோட்டத்துல செம்பருத்தி அறுவடை செஞ்சுகிட்டு இருந்தாங்க. நேர்ல போய் பார்த்ததும் நம்பிக்கை வந்துச்சு. உடனடியா ஒரு ஏக்கர் 10 சென்ட்லயும் செம்பருத்தியை நட்டேன். இப்ப ஒண்ணரை ஏக்கர்ல செம்பருத்தியும், கறிவேப்பிலையும் இருக்கு. மீதி ஒரு ஏக்கர் நிலத்துல மழை பெஞ்சா கம்பு, சோளம்... விதைப்போம். களையெடுக்கறது, பராமரிப்புப் பண்றதுனு எந்த வேலைக்கும் ஆள் வெக்காம, எங்க வீட்டு ஆளுங்களே செஞ்சுடறோம். மொதல்ல 40 சென்ட்ல நட்ட செம்பருத்தியும், கறிவேப்பிலையும் இப்ப மகசூலுக்கு வரத் தொடங்கிடுச்சி. அகத்தியும் நல்லா வளந்திருக்கு. இப்ப 5 ஆடுகள வாங்கியிருக்கேன். அகத்திக் கீரையைக் கொடுத்தே, அதுகள வளர்த்துடுவேன்'' என்றவர், செம்பருத்தி சாகுபடி பற்றி சொன்ன தகவல்களைப் பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

ஏக்கருக்கு 1,200 செடிகள்!

'வணிகரீதியாக சாகுபடி செய்ய ஐந்து இதழ் கொண்ட சிவப்பு நிற செம்பருத்தி மட்டுமே ஏற்றது. செம்மண், கரிசல் மண் நிலங்களில் நன்றாக வளரும். மழைக் காலத்துக்கு முன்பு (ஜூலை, ஆகஸ்ட்) நடவு செய்ய வேண்டும். ஒரு முறை நடவு செய்தால், குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கும். ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்தை இறைத்து நிலத்தை நன்றாக உழுது, மண்ணைப் புழுதியாக்கிக் கொள்ளவேண்டும். 15 அடி நீளம், 4 அடி அகலத்தில் பாத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பாத்திகளில் செடிக்கு செடி 6 அடி, வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளியில், அரையடி ஆழத்தில் குழியெடுத்து, செம்பருத்திச் செடிகளை நடவேண்டும். ஏக்கருக்கு 1,200 செடிகள் வரை தேவைப்படும். இதற்கான செடிகள் நாற்றுப் பண்ணைகளில் கிடைக்கும்.

10 நாட்களுக்கு ஒரு தண்ணீர்!

இரண்டு செம்பருத்தி வரிசைக்கு இடையில் மற்றும் செம்பருத்திச் செடிகளுக்கு இடையில் என கறிவேப்பிலையை நடவு செய்யலாம். செம்பருத்தி வரிசை மற்றும் செம்பருத்திச் செடிகளுக்கு நடுவில் 3 அடி இடைவெளியில், கறிவேப்பிலைச் செடியை நடவேண்டும். தண்ணீர் பாயும் வாய்க்கால் கரைகளின் இருபுறமும் இரண்டு அடி இடைவெளியில் அகத்தி விதையை ஊன்றவேண்டும். எட்டு முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

ஆரம்பத்தில் உழவு செய்யும்போது, தெளிக்கும் தொழுவுரமே போதுமானது. அதிக அளவு உரங்களைக் கொடுக்கக்கூடாது. ஊட்டம் அதிகமானால் செடிகள் கொழுத்துப் போய் இலைகளில் மொறமொறப்புத் தன்மை அதிகமாகி, பூக்கள் அதிகம் பூக்காமல் போகக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும். முதல் எட்டு மாதம் வரை, மாதம் ஒரு களை எடுக்க வேண்டும். பிறகு செடிகள் அடர்த்தியாகி நிழல் கட்டிக் கொள்ளும். பத்தாவது மாதம் முதல் தினமும் பூக்களை அறுவடை செய்யலாம்.

பத்து மாதத்துக்குப் பிறகு, ஆண்டுக்கு ஒரு தடவை கவாத்து, 10 நாட்களுக்கு ஒரு பாசனம் மட்டும் செய்தால் போதும். வேறு எந்தப் பராமரிப்பும், செலவும் தேவைப்படாது. நோய் எதுவும் தாக்குவதில்லை. எப்போதாவது மாவுப்பூச்சித் தாக்குதல் இருக்கும். வேப்பெண்ணைய் கரைசல் அல்லது மாவுப்பூச்சிகளைப் பிடித்து தின்னும் பொறிவண்டுகள் மூலமாக இதையும் கட்டுப்படுத்தி விடலாம்.

ஒரு கிலோ இலை 25 ரூபாய்... பூ 160 ரூபாய்!

நன்கு வெயில் ஏறிய பிறகுதான் செம்பருத்தி இதழ் மலரும். அப்போதுதான் அறுவடை செய்ய வேண்டும். பூக்களைக் காம்புகளுடன் அறுவடை செய்து, இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். பிறகு, எடை போட்டு விற்பனைக்கு அனுப்பலாம். ஒரு ஏக்கரில் இருந்து தினமும் 5 கிலோ வரை காய்ந்தப் பூக்கள் கிடைக்கும். ஆண்டுக்கு சராசரியாக 1,000 கிலோ கிடைக்கும். ஒரு கிலோ 160 ரூபாய் என்று விலை வைத்து நமது இடத்துக்கே வந்து வியாபாரிகள் வாங்கிக் கொள்கிறார்கள். இதன் மூலம் ஓராண்டில் 1 லட்சத்தி 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்துக்கு முன்பு தரையில் இருந்து ஒரு அடிக்கு மேலே உள்ள செடிகளை வெட்டி எடுத்து விடவேண்டும். வெட்டியக் குச்சிகளை இரண்டு நாட்களுக்கு வயலில் போட்டு வைத்தால், இலைகள் உதிர்ந்து விடும். காய்ந்த இலைகளை எடை போட்டு விற்பனை செய்யலாம். ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு 500 கிலோ காய்ந்த இலைகள் கிடைக்கும். இவற்றையும் ஒரு கிலோ ரூ.25 ரூபாய் வீதம் வியாபாரிகள் வாங்கிக் கொள்கிறார்கள். இதன் மூலம் 12,500 ரூபாய் கிடைக்கும்!

ஆண்டுக்கு 5 டன்!

கறிவேப்பிலையைப் பொறுத்தவரை தனியாக எந்தப் பராமரிப்பும் செய்யத் தேவையில்லை. செம்பருத்திக்குக் கொடுக்கும் தண்ணீர், களையெடுப்பு ஆகியவையே போதும். பத்தாவது மாதத்தில் இருந்து சுழற்சி முறையில் தினமும் கறிவேப்பிலையை அறுவடை செய்யலாம். நடவு செய்ததில் இருந்து குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கும். ஒரு ஏக்கரில் இருந்து வாரம் ஒருமுறை குறைந்தபட்சம் 100 கிலோ கறிவேப்பிலையை அறுவடை செய்யலாம். ஒரு கிலோ குறைந்தபட்சம் 10 ரூபாய் வீதம் விற்பனையாகிறது. ஆண்டுக்கு 5 டன் கறிவேப்பிலை குறைந்தபட்சம் கிடைக்கும். இதன் மூலம் 50 ஆயிரம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். வாய்க்காலில் இருக்கும் அகத்திக் கீரைகளை ஆடு, மாடுகளுக்கு தீவனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.’

அதிக பராமரிப்பு தேவையில்லை!

இந்தப் பகுதியில் செம்பருத்தி சாகுபடியை விவசாயிகளிடம் அறிமுகம் செய்து வரும் கருப்பையா, ''அடிப்படையில் நான் வேளாண் பட்டதாரி. வேலையாட்கள் தட்டுப்பாடு, விலையின்மை ஆகிய காரணங்களால் விவசாயத்தில் பெரிதாக வருமானம் கிடைப்பதில்லை. அதேநேரத்தில் சந்தையில் அதிக தேவையுள்ள மூலிகைப் பொருட்கள் போதுமான அளவில் உற்பத்தியாவதில்லை. அதனால்தான் செம்பருத்தி, மருதாணி உள்ளிட்ட மூலிகைகளைப் பயிர் செய்யத் தொடங்கினேன். விற்பனையில் வில்லங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக மூலிகைகளை வாங்கும் மொத்த வியாபாரிகளிடம் விற்பனைக்கான உறுதிமொழியை வாங்கிக் கொண்டுதான் சாகுபடியைத் தொடங்கினேன்.

என்னை பார்த்து மற்ற விவசாயிகளும் செய்யத் தொடங்கினார்கள். தற்போது அவர்களுடைய உற்பத்திப் பொருட்களையும் நானே வாங்கி, மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறேன். செம்பருத்தியைப் பொறுத்தவரைக்கும் அதிக பராமரிப்புத் தேவையில்லை. ஒரு ஏக்கரில் சாகுபடி செய்தால், வேலையாட்களை எதிர்பார்க்காமல் ஒரு குடும்பம் தனது அடிப்படைப் பொருளாதாரத் தேவைகளை தாராளமாகப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்'' என்று நம்பிக்கை ஊட்டினார்.

படங்கள் :என்.ஜி. மணிகண்டன்

தொடர்புக்கு

கிருஷ்ணசாமி அலைபேசி: 99436-90246
கருப்பையா, அலைபேசி: 98423-95441