வழிகாட்டி
ஆறுச்சாமி

இந்தப் பகுதியில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் பற்றி இனி பார்க்கலாம் என்று கடந்த இதழில் சொல்லியிருந்தேன். முன்னோட்டமாக துணைவேந்தர் முனைவர். முருகேசபூபதி இங்கே பேசுகிறார்...

''தமிழ்நாடு, வேளாண்மைப் பல்கலைக்கழகம், கல்வி கற்பித்தலையும், ஆராய்ச்சியையும் இரண்டு கண்களாகப் பார்த்து வருகிறது. விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதைக் கொண்டே எங்களுடைய ஆராய்ச்சி பயணிக்கும்.

ஆண்டுதோறும், மாநில அளவில் உள்ள வேளாண் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இங்கே நடத்தப்படுகிறது. அண்மையில் இப்படி நடைபெற்ற கூட்டத்தில் தஞ்சாவூர் பகுதியில் இருந்து வந்த வேளாண் அலுவலர்கள், ஒரு கருத்தை முன் வைத்தனர். 'பாப்பட்லா என்று சொல்லப்படும் பி.பி.டி. ரக நெல்லை தாளடி பருவத்தில் டெல்டா பகுதியில் அதிகம் பயிர் செய்கிறார்கள். வியாபார ரீதியாக இந்த ரகத்துக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. ஆனால், கொள்ளை நோய் தாக்குதல் அதிகம் இருக்கிறது. இப்பிரச்னைக்குத் தீர்வு சொல்லுங்கள்' என்றார்கள். உடனடியாக பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அதற்கான ஆய்வில் இறங்கியுள்ளார்கள்.

இப்படி நடைமுறைப் பிரச்னைகளுக்குத் தீர்வு அளிக்க தமிழ்நாடு முழுவதும் மண்டல ஆராய்ச்சி மையங்கள், வேளாண் அறிவியல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பயிர் விளைச்சலைப் பெருக்குவது மட்டுமல்ல, விளைவித்த பொருட்களை விற்பனை செய்யவும் வழிகாட்டி வருகிறோம். இதற்காக பல்கலைக்கழகத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தை ஆய்வு மையம் இயங்கி வருகிறது. எந்தப் பயிரை எப்போது விதைக்க வேண்டும். எந்த நேரத்தில் விற்பனை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தகவல் வெளியிடப்படுகின்றன.

ஆண்டுதோறும் ஆடி, மாதத்தில் 'உழவர் திருவிழா’ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் 41 துறைகளும் அப்போது கண்காட்சி அரங்கில் இடம் பெறும். ஒரே குடையின் கீழ் பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டையும் தெரிந்து கொள்ள முடியும். இந்தத் திருவிழா நடக்கும்போது புதிய பயிர் ரகங்களும், கருவிகளும் வெளியிடப்படும்.

விவசாயிகளுக்கு சேவை செய்யத்தான் இந்தப் பல்கலைக்கழகம் காத்திருக்கிறது. இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், விவசாயிகள் என்னைத் தொடர்பு கொள்ளவும். உடனடியாக அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.''

விவசாயிகளே... துணைவேந்தர் நம்பிக்கையூட்டுகிறார். எனவே, உங்கள் பிரச்னைகளுக்காக அவரை 0422-2431529 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்!

தொடர்ந்து சந்திப்போம்