விவசாயத்தில் வருமானம் குறையும்போது, அதை ஈடுசெய்வது உபத்தொழில்கள்தான். அதில் முக்கியமானது... தேனீ வளர்ப்பு. பயிர்களில் மகசூலை அதிகப்படுத்துவதுடன், வருமானத்தையும் கொடுப்பதால், தேனீ வளர்க்க விரும்பும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி ஆர்வமுள்ள விவசாயிகளுக்காக, தேனீ வளர்ப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சி, விருதுநகர் மாவட்டம், தளவாய்புரத்தில் உள்ள நேச்சுரல் தேனீப் பண்ணையில், பசுமை விகடனின் ஊடக ஆதரவுடன் ஏப்ரல் 17-ம் தேதி நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து 80 விவசாயிகள் பங்கேற்றனர்.

இனி, பயிற்சியில் பண்ணையின் உரிமையாளர் ஜெயக்குமார் பேசியதிலிருந்து.... ''இன்னிக்கு பலபேரு தேனீ வளர்ப்புல ஆர்வத்தோட இறங்கிட்டு, கொஞ்ச நாள்லயே மகசூல் கிடைக்கல, தேனீக்கள் ஓடிப்போச்சுனு புலம்புறாங்க. இதுக்குக் காரணம் முறையானப் பராமரிப்பும், சரியான புரிதலும் இல்லாததுதான். இந்தியத் தேனீயா இருந்தா... அதிகபட்சமா 25 பெட்டியும், இத்தாலியத் தேனீயா இருந்தா 10 பெட்டி வரைக்கும்தான் ஒரு இடத்துல வைக்கணும். பெட்டி வெச்ச இடத்திலிருந்து குறைஞ்சது கால் கிலோ மீட்டர் தள்ளித்தான் அடுத்தப் பெட்டியை வைக்கணும்.

அதேபோல பெட்டி வைக்கும்போது, நம்மத் தோட்டத்தை மட்டும் பார்க்கக்கூடாது. மூணு ஏக்கர் சுற்றுவட்டாரத்துல என்னென்ன பயிர்கள் இருக்கு, தேனீக்கு தேவையான உணவு கிடைக்குமானு தெரிஞ்சுகிட்டுதான் வைக்கணும்.

'ஒரு ஏக்கர்ல 80 பெட்டி வைக்கலாம், 100 பெட்டி வைக்கலாம்'னு பெட்டி விக்குறவங்க சொல்றதைக் கேட்டு, விவசாயிகளும் வாங்கி வெச்சுடுறாங்க. ஆனா, போதுமான உணவு கிடைக்காம தேனீக்கள் பெட்டியை விட்டு ஓடிடும். தேனீ ஏன் பெட்டியை விட்டு போயிடுதுனு இப்பப் புரியுதா?'' என்று புரிய வைத்தவர், தொடர்ந்தார்.

''ஒவ்வொரு வருஷமும் தேன் அடை, ராணித்தேனீ இதையெல்லாம் மாத்தணும். இதை ரொம்ப பேரு செய்ய மாட்டாங்க. பெட்டியில இருக்குற ராணித்தேனீயைக் கொன்னுட்டு, அந்தப் பெட்டியில, நல்ல மகசூல் கொடுக்குற வேற ஒரு பெட்டியில் இருந்து ஒரு நாள் வயசுள்ள குஞ்சை எடுத்து வைக்கணும். இப்படி வெச்சுட்டா போதும், அது வளர்ந்து ராணித்தேனீயா மாறிடும். முறையானப் பயிற்சி எடுத்துக்கிட்ட பிறகுதான் இதையெல்லாம் சரியா செய்ய முடியும்.

தேனீ வளர்ப்புல முக்கியமான விஷயம்... இடமாற்றம். பெட்டிகளை ஒரே இடத்துல வருஷம் முழுவதும் வெச்சிருந்தா... தேன் கிடைக்காது. தேனீக்களுக்கு உணவு உள்ள இடமா பார்த்து இடமாற்றம் செஞ்சிக்கிட்டே இருக்கணும். தரைப் பகுதியில ஜனவரி முதல் மார்ச் வரையிலும், வனப்பகுதிகள்ல மார்ச் முதல் ஏப்ரல் வரையும் தேன் அதிகமா கிடைக்கும். மறுபடியும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தரைப்பகுதியில தேன் கிடைக்கும். செப்டம்பர் முதல் நவம்பர் வரை மழைக்காலமாக இருக்கும். டிசம்பர் மாசம் பெட்டிகள்ல பராமரிப்பு வேலைகளை செய்யணும். அதனால, செப்டம்பர் தொடங்கி டிசம்பர் வரைக்குமான நாலு மாசத்துக்கும் தேனீக்களுக்கு உணவு கிடைக்காது. அந்த நேரத்துல நாமதான் அதுக்கு உணவு கொடுக்கணும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் முருங்கை, சூரியகாந்தி, எள், நாவல், புளி ஆகிய பயிர்கள்ல அதிக தேன் கிடைக்குது. தேனீ வளர்ப்புல இறங்கறவங்க, ஆரம்பத்துல 5 முதல் 10 பெட்டிக்குள்ள வாங்கி வளர்த்தா போதும். அனுபவம் கிடைச்ச பிறகு எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கலாம். அதை விட்டுட்டு எடுத்தவுடனே

50 பெட்டி, 100 பெட்டினு போனா, நிச்சயம் மகசூல் எடுக்க முடியாது. எடுத்தவுடனே பெரியப் பெட்டிகள்ல இருக்கற, விலை அதிகமான இத்தாலி தேனீயையும் வளக்கக்கூடாது. சின்னப் பெட்டியில இருக்குற இந்தியத் தேனீயை வளர்த்து, அனுபவம் வந்த பிறகு பெரியப் பெட்டியை வெச்சு வளர்க்கலாம். ஆகக்கூடி... முறையா செஞ்சா... தேனீ வளர்ப்பு வருமானம் கொட்டும் தொழிலா இருக்கும்'' என்று தெளிவாகக் கருத்துக்களை எடுத்து வைத்தார்.

பயிற்சிக்கு வந்திருந்த அத்தனை பேருமே... மனநிறைவோடு புறப்பட்டனர்.

பயிற்சிக்கு வந்தவர்களின் கருத்துக்கள்...

நிமல்ராம் காந்தி (காரைக்கால்): ''நான் ஒரு மருத்துவர். கலந்துக்குற முதல் பயிற்சி இதுதான். என்னோட தென்னந்தோப்புல தேனீ வளக்கலாம்னு நினைச்சு பயிற்சிக்கு வந்தேன். பயிற்சி சிறப்பா இருந்தது.''

ரவி (கூடலூர்): ''தேனீ வளர்ப்புல எனக்கு இருந்த பல சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைச்சது. பயனுள்ளப் பயிற்சி.''

படங்கள்:என்.ஜி. மணிகண்டன்
தொடர்புக்கு
ஜெயக்குமார் அலைபேசி: 94433-02674