கண்டுபிடிப்பு
காசி.வேம்பையன்

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்' என்று ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால், 'இன்றைய அவசர உலகத்தில் காற்று வீசும் வரை காத்திருந்து நெல் தூற்றுவதற்கெல்லாம் நேரமே இல்லையே!' என்று யோசித்த விழுப்புரம் மாவட்டம், பெரிய நொலம்பை கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், நெல் தூற்றும் இயந்திரம் ஒன்றையே வடிவமைத்துவிட்டார்.

சென்னையில் நடந்த கண்காட்சி ஒன்றில், தொழிற்சாலைகளில் காற்றை வெளியேற்றுவதற்காக பயன்படுத்தும் காற்றாடி ஒன்றைப் பார்த்த சந்திரசேகரனுக்கு, 'இதில் சின்னச்சின்ன மாற்றங்கள் செய்தால், நெல்லைத் தூற்ற முடியுமோ!’ என்றொரு பொறி கிளம்ப, உடனடியாகக் களத்தில் இறங்கி, அதை வடிவமைத்து முடித்தே விட்டார். இவர் தமிழக விவசாயிகள் விழிப்பு உணர்வு சங்க நிறுவனத் தலைவராகவும் இருக்கிறார்.

அதைப் பற்றி பேசிய சந்திரசேகரன், ''எங்கப்பா, மின்சாரத் துறையில வேலை செஞ்சதால சின்ன வயசுல இருந்தே மின் கருவிகள் மேல எனக்கு ஆர்வம் அதிகம். அப்பப்ப எதையாவது செய்துகிட்டே இருப்பேன். விவசாயம்தான் முழுநேரத் தொழில்ங்கறதால, அந்த மெக்கானிக் மூளையைப் பயன்படுத்தி, விவசாயத்துக்கு உபயோகமா இந்தக் கருவியை வடிவமைச்சிருக்கேன்.

பழைய கிரீஸ் பேரல், லாரியில் பயன்படுற ரேடியேட்டர் ஃபேன், ஒரு மோட்டார், கொஞ்சம் இரும்புப் பட்டைகள்... இவ்வளவுதான் அந்தக் கருவி. சாதாரணக் காற்றாடி மாதிரிதான். யார் வேணும்னாலும் தயாரிச்சுக்க முடியும். அரை ஹெச்.பி. மோட்டார் பயன்படுத்துறப்போ... மூணு மணி நேரத்துக்கு ஒரு யூனிட் மின்சாரம்தான் செலவாகும்'' என்றவர், அதை வடிவமைக்கும் முறைகளைக் கோடிட்டுக் காட்டிவிட்டு (பார்க்க, பெட்டிச் செய்தி), இயந்திரத்தை ஓடவிட்டு நெல்லை தூற்றியபடியே,

''இதைப் பயன்படுத்தி நெல், உளுந்துனு எல்லா வகை தானியத்தையும் தூற்றி சுத்தப்படுத்தலாம். 30 மூட்டை நெல்லை இந்தக் கருவியைப் பயன்படுத்தி தூற்றுறதுக்கு மூணு ஆள் இருந்தாலே போதும். ரெண்டு மணி நேரத்துல வேலையை முடிச்சுடலாம். கூலியா 600 ரூபாய்தான் கொடுக்க வேண்டியிருக்கும். இதையே வழக்கமான பாணியில தூற்றினா, அஞ்சி ஆள் தேவைப்படும். 1,350 ரூபாய் வரைக்கும் கொடுக்க வேண்டியிருக்கும்.

இந்தக் கருவியைத் தயாரிக்க, அதிகபட்சம் 3,000 ரூபாய் செலவாகுது. எங்க பகுதியில இருக்குற பல விவசாயிங்களுக்கு இந்தக் கருவியை நான் செஞ்சு கொடுத்துருக்கேன்'' என்றார் உற்சாகமாக.

இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி வரும் அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், ''பத்து ஏக்கர்ல நெல்லு விவசாயம்தான் பார்க்கிறேன். ஆள் பற்றாக்குறை இருக்கற இந்தக் காலத்துல... இந்த நெல் தூத்துற மெஷின் எனக்குக் கிடைச்ச வரம்னுதான் சொல்லணும். ஆறு வருஷமா இதைப் பயன்படுத்திதான் நெல்லை தூத்திக்கிட்டிருக்கேன். பிரச்னையில்லாம போயிக்கிட்டிருக்கு'' என்றார் மகிழ்ச்சியுடன்.

நெல் தூற்றும் மெஷினைத் தயாரிப்பது எப்படி?

பெரிய கீரிஸ் பேரல் ஒன்றை, ஒரு அடி, மூன்று அங்குல அகலம் இருக்கும் வகையில், வெட்டிக் கொள்ள வேண்டும். அதன் இரண்டு பக்கத்தையும் கைகளைக் கிழித்துவிடாதபடி உள்பக்கமாக மடித்துவிட வேண்டும். 'ஒன்றுக்கு அரைக்கால்’ மற்றும் 'ஒன்றுக்கு கால்’ இரும்புப் பட்டைகளை படத்தில் உள்ளதுபோல் தேவைக்கேற்ப இணைக்க வேண்டும். நடுவில் கிடைக்கும் சிறிய வளையத்தில் மோட்டாரை வைத்து, மூன்றரை அங்குல 'பெல்ட் புல்லி’யை மோட்டாருடன் பொருத்திவிட வேண்டும். அதில் லாரிக்கான ரேடியேட்டர் ஃபேனை இணைத்து, அது வலதுப் பக்கமாக சுற்றுவது போன்று மோட்டாரை இயங்க வைத்துவிட்டால்... தூற்றும் இயந்திரம் தயார்!

தொடர்புக்கு
சந்திரசேகரன்,
அலைபேசி: 93605-64370.