Published:Updated:

சென்னைவாசிகளை மிரட்டும் செம்பரம்பாக்கம் ஏரி!

Vikatan Correspondent
சென்னைவாசிகளை மிரட்டும் செம்பரம்பாக்கம் ஏரி!
சென்னைவாசிகளை மிரட்டும் செம்பரம்பாக்கம் ஏரி!

சென்னை மட்டும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை சற்றே ஓய்ந்து இருந்தாலும், வங்கக் கடலில் அவ்வப்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி சென்னை மக்களை அச்சுறுத்திக்கொண்டுதான் உள்ளன. இதனிடையே நகரம் முழுவதற்கும் நீர் ஆதாரமாக இருக்கும் அனைத்து ஏரிகளும் நிரம்பி உள்ளன.

சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவான 24 அடியில், 22 அடியை எட்டியுள்ளது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி ஏரியின் புதிய மடைகளில் உள்ள 19 மதகுகளில் 6-வது  மதகு முதல் 15 -வது மதகு வரையுள்ள 10 மதகுகள் திறந்து விடப்பட்டுள்ளன. கரையோரம் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னைவாசிகளை மிரட்டும் செம்பரம்பாக்கம் ஏரி!

இந்த செய்தியறிந்து தண்ணீர் திறக்கப்பட்டதைக் காண சுற்று வட்டார மக்கள் அங்கே திரண்டனர். அணை திறக்கப்பட்டுள்ளதால் தரை பாலத்தில் மக்கள் செல்ல முடியாமல், அணை மீதே அனுப்பபடுகின்றனர்.

"ஏரில இருக்குற அடைசல சுத்தம் பண்ணி இருந்தா இவ்வளோ தண்ணிய வெளியேத்திற்க்கவே வேணாம்" என ஊர் பெரியவர் ஒருவர் கூற. மற்றொரு புறம் "ஊருக்குள்ள 4 கீமீ தூரத்துக்கு தண்ணி வந்துடுச்சு, இதுக்கு முன்னாடி 2005 ல தான் இப்படி வந்துது" என இன்னொருவர் கூறினார்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க மறுபுரம் தங்கள் ஏரி நிரம்பிய ஆச்சரிய காட்சியை இளைஞர்கள் செல்பிக்கள் எடுத்தும், நண்பர்களோடு நீரில் குளித்தும் கொண்டாடினர். இதை பார்த்த காவல் அதிகாரி ஒருவர் "நாங்க எவ்வளோ தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் மக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்தா தான் அவங்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும" என சொல்லி நீரில் இறங்கிய இளைஞர்களை கரையேற்ற முற்ப்பட்டார். 
ஏரியை சுத்தம் செய்து தூர்வார வேண்டும் என்பதே ஊர் மக்களின் ஒருமித்தக் கருத்தாக நிலவுகிறது
அபிரக்ஷன்
படங்கள் : கிரண்குமார் (மாணாவப்பத்திரிக்கையாளர்)