Published:Updated:

'பாரம்பரிய விதைகளை மறந்ததுதான் நாம் செய்த பெரிய தவறு!'

'பாரம்பரிய விதைகளை மறந்ததுதான் நாம் செய்த பெரிய தவறு!'
'பாரம்பரிய விதைகளை மறந்ததுதான் நாம் செய்த பெரிய தவறு!'

சென்னை, பெசண்ட் நகரில் மாடித்தோட்ட குழுவினரின் கூட்டம் இன்று (28.11.2005) நடைபெற்றது. மாடித்தோட்டத்தினை பற்றி தெரிந்து கொள்வதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

'பாரம்பரிய விதைகளை மறந்ததுதான் நாம் செய்த பெரிய தவறு!'

மாடித்தோட்ட கருத்தரங்க கூட்டத்தில் பேசிய எக்ஸ்னோராவின் நிறுவனர் நிர்மல்குமார், ''நாம் இன்று பாரம்பரிய விதைகளை மறந்து விட்டோம். அதனால்தான் இளமைக்காலத்திலேயே நோய்களால் அவதிப்படுகிறோம். இன்றளவில் மாடித்தோட்டத்தினை மக்கள் பெருமளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு பெருமளவு இடம் தேவையில்லை, குறைவான இடத்திலேயே அதிக பலன் தரக்கூடிய காய்கறிகளையும், செடிகளையும் நடலாம். இதற்கு வீட்டு உபயோக கழிவுகளை உரமாக போடலாம். தண்ணீர் தேவைக்கு பாத்திரம் கழுவிய தண்ணீரை கூட பயன்படுத்தலாம். இதில் விதை வாங்கும்போது ஒருமுறை செய்யும் செலவு பலமுறை வருமானம் தரும் பொக்கிஷமாக மாறும்' என்று பேசினார்.

'பாரம்பரிய விதைகளை மறந்ததுதான் நாம் செய்த பெரிய தவறு!'

அக்கூட்டத்தினை ஒருங்கிணைத்த செய்த ரகு நம்மிடம் கூறுகையில், ''இன்றைய வாழ்க்கையில் நாம் இயற்கையை தேடி பயணப்பட்டு கொண்டிருக்கிறோம். பாரம்பரிய விதைகளையும், உணவு பழக்கங்களையும் மறந்ததுதான் நாம் செய்த மிகப்பெரும் தவறு. மீண்டும் மரபு வழி விதைகளையும், இயற்கை விதைகளையும் அவரவர் வீடுகளீலேயே உற்பத்தி செய்து கொள்ளும் விதமாகத்தான் இந்த கூட்டத்தினை ஏற்பாடு செய்தோம்'' என்றார்.

'பாரம்பரிய விதைகளை மறந்ததுதான் நாம் செய்த பெரிய தவறு!'

மாடித்தோட்ட குழுவின் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளில் பாரம்பரிய விதைகள், மூலிகை செடிகள், இயற்கை உரங்கள், குறைந்த செலவில் காய்கறி நாற்றுக்களை உற்பத்தி செய்தல், அழகு செடிகள் மாடித்தோட்ட கருவிகள் என பல பொருட்களின் அரங்குகள் விழாவினை மேலும் சிறப்பித்திருந்தது.

-துரை நாகராஜன்


படங்கள்: மீ.நிவேதன்