Published:Updated:

சட்ட ஒழுங்குக்காக காவடி எடுத்த காவல்துறையினர்!

சட்ட ஒழுங்குக்காக காவடி எடுத்த காவல்துறையினர்!
சட்ட ஒழுங்குக்காக காவடி எடுத்த காவல்துறையினர்!

ன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு குமாரசாமி திருக்கோவிலில் நேற்று (வெள்ளி) காவடி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கேரள பக்தர்கள் மத்தியிலும் பிரசித்திப் பெற்ற இத்திருக்கோவிலில்,  ஒவ்வொரு கார்த்திகை மாதம் கடைசி வெள்ளியும் காவடி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். சுற்று வட்டாரங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் 41 நாட்கள் விரதமிருந்து காவடிகள் எடுத்தனர்.

சட்ட ஒழுங்குக்காக காவடி எடுத்த காவல்துறையினர்!

வேறெங்கும் இல்லாத சிறப்பு இங்கு என்னவென்றால், மக்கள் அனைவரும் அமைதியாக வாழவும் நாட்டில் சட்ட ஒழுங்கு சீராக இருக்கவும் போலீசாரும் காவடி எடுத்து ஊர்வலமாக சென்றதுதான். அவர்களும் கடந்த சில தினங்களாக விரதம் இருந்து, தக்கலை காவல் நிலையத்தில் காவடி கட்டி ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதே போல விவசாயம் நாட்டில் செழிக்கவும், மக்கள் மகிழ்ச்சியாய் வாழவும் தக்கலை பகுதியை சேர்ந்த பொதுப்பணித் துறை ஊழியர்களும் காவடி எடுத்தனர்.

சட்ட ஒழுங்குக்காக காவடி எடுத்த காவல்துறையினர்!

காவல் நிலையம் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலகம் முழுக்க மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கபட்டிருந்தன.  மன்னர்கள் ஆட்சி செய்த காலம் முதலே, மக்கள் நலனுக்காக இறைவனிடம் வேண்டி ஆண்டுதோறும் கார்த்திகை கடைசி வெள்ளியன்று காவடி எடுத்து, அருள்மிகு குமாரசாமி கோவிலில் சாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த வழக்கம் தொன்றுதொட்டு இன்றும் கடைப்பிடிக்கப்படுவது சிறப்பு.

சட்ட ஒழுங்குக்காக காவடி எடுத்த காவல்துறையினர்!

பறக்கும் காவடி, தொட்டில் காவடி, இருப்பு காவடி என பலவகையான காவடிகள் மேளதாளங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் பக்தி பரவசத்துடன் எடுத்து செல்லப்பட்டன. கிரேன் உதவியோடு 35 அடி உயரத்துக்கு உயர்த்தப்பட்ட இருப்பு காவடி, 12 அடி வேலில் அலகு குத்திக்கொண்டு வந்த ஐந்து பக்தர்கள் என எல்லா திசைகளிலும் பக்தர்கள் பரவசத்துடன் பங்குபெற்றனர். காவடி மூலம் கொண்டு வரப்பட்ட பொருட்கள் மூலம் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கோவிலை சுற்றி பல இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

- எஸ்.கே. பிரேம்குமார், கோ. இராகவிஜயா
(மாணவப் பத்திரிகையாளர்கள்)