Published:Updated:

இயற்கை விவசாயம், பாரம்பரிய உணவுகளின் மகத்துவங்களை பரப்பி வரும் இளைஞர்கள்!

இயற்கை விவசாயம், பாரம்பரிய உணவுகளின் மகத்துவங்களை பரப்பி வரும் இளைஞர்கள்!
இயற்கை விவசாயம், பாரம்பரிய உணவுகளின் மகத்துவங்களை பரப்பி வரும் இளைஞர்கள்!

இயற்கை விவசாயம், பாரம்பரிய உணவுகளின் மகத்துவங்களை பரப்பி வரும் இளைஞர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பெரம்பலூர்: பெரம்பலூரில் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் சந்திக்கும் கருத்தரங்கு மற்றும் இயற்கை வேளாண்மை பயிற்சிகளை இயற்கை ஆர்வம் கொண்ட இளைஞர்கள் நடத்தியுள்ளனர்.

இயற்கை ஆர்வம் கொண்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து 'நமது இயற்கை வேளாண்மைக்கான இளைஞர் குழு'வை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இவர்கள் நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு இயற்கை வேளாண்மை கருத்தரங்கம் மற்றும் தொழில்நூட்ப விளக்க பயிற்சிகளையும் அளித்தனர்.

இயற்கை விவசாயம், பாரம்பரிய உணவுகளின் மகத்துவங்களை பரப்பி வரும் இளைஞர்கள்!

பெரம்பலூர் மாவட்டம், உப்போடையில் அமைந்துள்ள செந்தமிழ் இயற்கைப் பண்ணையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பெரம்பலூர் பகுதியை சார்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.

இயற்கை வேளாண்மை பற்றி பேசியவர்கள், ''இன்று நம் சாப்பிடும் உணவுகள் அனைத்திலும் ரசாயனம் புகுந்துள்ளது. முன்பெல்லாம் சராசரி வயது 90. ஆனால், தற்போது 60-ல் உள்ளது. இதற்கு காரணம் மண்ணிற்கு ஒவ்வாத ரசாயனங்களை போட்டு மகசூலை இரட்டிப்பாக்கினர். இதனால், அதோடு சேர்ந்து நோயும் இரட்டிப்பானது. நம் முன்னோர்கள் சிறுதானியம் சாப்பிட்டனர். நாம் பரோட்டா போன்ற பாஸ்ட் புட் ரகங்களை சாப்பிடுகிறோம். இந்த பரோட்டா மாவில் வெள்ளைப்படுத்த பென்சாயில் பெராக்சைடு என்கிற நச்சுப் பொருளை உபயோகிக்கின்றனர். இதை சாப்பிட்டால் எலியின் சிறுநீரகம் செயலிழக்குமாம். எலிக்கே அப்படி என்றால் மனிதனுக்கு என்ன சொல்ல. எனவே பாரம்பரிய விவசாயத்தை முன்னேடுத்துச் செல்ல வேண்டும். சிறுதானிய உணவை பின்பற்ற வேண்டும்'' என்றனர்.

இயற்கை விவசாயம், பாரம்பரிய உணவுகளின் மகத்துவங்களை பரப்பி வரும் இளைஞர்கள்!

அடுத்து நடைபெற்ற பயிற்சி களத்தில் இயற்கை வேளாண்மை இயக்கத்தின் முன்னோடி இயற்கை உழவர்கள் ஆறுமுகம், இளையராஜா, மணி மற்றும் விழுப்புரம் விதை பாண்டியன் ஆகியோர் இயற்கை வேளாண் இடுபொருட்களான பஞ்சகவ்யா கரைசல், அமுதக்கரைசல், மண்புழு உரம், அசோலா, இயற்கை பூச்சிவிரட்டி மீன் அமிலம், வேம்புக்கரைசல் தயாரிப்பதுக் குறித்து  விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்கள்.
  
இறுதியில் மண்ணின் பெருமையை எடுத்துரைக்கும் இயற்கை உணவுகளான குதிரைவாலி தயிர் சாதம், வரகு சாம்பார் சாதம், திணை பாயாசம், முளைக்கட்டிய கம்பு, துளசி சுவைநீர் ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் சிறுதானிய உணவுகளை பற்றியும் ஒவ்வொரு உணவிலுள்ள மகத்துவத்தை பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.

இயற்கை விவசாயம், பாரம்பரிய உணவுகளின் மகத்துவங்களை பரப்பி வரும் இளைஞர்கள்!

இதையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நெற்குணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 'பள்ளி தோறும் பயிர்த் தொழில் பழகுவோம்' என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வது எப்படி? அதனால் ஏற்படும் நன்மைகள், உயிர் உரங்களின் நன்மைகள், ரசாயன உரங்களினால் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்து விளக்கப்பட்டது. இதன் பிறகு வட்டப்பாத்தி அமைத்து கீரை சாகுபடி செய்ய செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில், பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

இயற்கை விவசாயம், பாரம்பரிய உணவுகளின் மகத்துவங்களை பரப்பி வரும் இளைஞர்கள்!

நீடித்த நிலைத்த இயற்கை வேளாண்மையை, செயற்கை வேளாண்மை பாழாக்கி விட்டது. நாம் அனைவரும் விஷம் கலந்த உணவை உண்டுக்கொண்டிருக்கிறோம். இயற்கை வேளாண்மையை பின்பற்றுவதன் மூலம் நாம் இதிலிருந்து விடுபடலாம். 'இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்' என்கிறோம். முதுகுக்கு பின்னால் இருப்பதால் தான் என்னவோ பலர் கண்களுக்கு தென்படுவதே இல்லை. எனவே, இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் இயற்கை  வேளாண்மையை ஊக்குவிப்போம்! நஞ்சில்லா உணவை தருவோம்! மக்களின் ஆரோக்கிய வாழ்வில் தான் இந்தியாவின் எதிர்காலம்  உள்ளது. எனவே, இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பது நம் அனைவரின்  கடமை.

இயற்கை மீது ஆர்வம் கொண்டு, இயற்கை விவசாயத்தை, பாரம்பரிய உணவுகளின் மகத்துவங்களை எளிய மக்களுக்கும் பரப்பி வரும் இளைஞர்கள் பாராட்டுக்குறியவர்களே...

த.எழிலரசன், சு.அகிலாண்டேஸ்வரி
(மாணவ பத்திரிகையாளர்கள்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு