Published:Updated:

ஏரிகளை காப்பாற்ற ஒரு பயணம்... லேக் சவாரி!

ஏரிகளை காப்பாற்ற ஒரு பயணம்... லேக் சவாரி!
ஏரிகளை காப்பாற்ற ஒரு பயணம்... லேக் சவாரி!

தமிழகத்தில் கடந்த வருடம் பெய்த கனமழையை அடுத்து, இயற்கை வளங்கள் குறித்து மக்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. அந்த விழிப்புணர்வை சரியான பாதையில் அழைத்து செல்ல பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் முயன்று வருகின்றனர்.

ஏரிகளை காப்பாற்ற ஒரு பயணம்... லேக் சவாரி!

இ.ஃஎப்.ஐ. (Environmentalist Foundation of India) என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஏரிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சென்னையை சார்ந்த சுமார் பதினைந்து பேருடன் தொடங்கியது லேக் சவாரி என்ற ஏரிகளை காப்பாற்றும் விழிப்புணர்வு பயணம்.

ஏரிகளை காப்பாற்ற ஒரு பயணம்... லேக் சவாரி!

வண்டலூர் தொடங்கி ஒரகடம் மற்றும் முடிச்சூர் வரையில் உள்ள ஓட்டேரி, மணிமங்கலம் ஏரி, சாலமங்கலம் ஏரி, ஓரகடம் ஏரி, முடிச்சூர் சீக்காணம் ஏரி உட்பட சுமார் பன்னிரண்டு ஏரிகளுக்கு சென்றனர்.

ஏரிகளை காப்பாற்ற ஒரு பயணம்... லேக் சவாரி!

ஒவ்வொரு ஏரிக்கு செல்லும்போதும், அந்த ஏரி குறித்த தகவல்களை இ.ஃஎப்.ஐ.யின் நிறுவனர் அருண் கிருஷ்ணமூர்த்தி விளக்கினார். அதேபோல், ஒவ்வொரு ஏரிக்கு செல்லும்போதும், அந்த ஏரி, பத்து இருபது வருடங்களுக்கு முன்னர் எது வரை இருந்தது என்பதையும், தற்போது எது வரை உள்ளது என்பதையும் நேரடியாக விளக்கப்பட்டது.

ஏரிகளை காப்பாற்ற ஒரு பயணம்... லேக் சவாரி!

அதேபோல் ஏரிகளில் கொட்டப்படும் கழிவுகள் குறித்தும் நேரடியாக கூறப்பட்டது. நமது நாட்டில் உள்ள நீர் நிலைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதின் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஏரிகளை காப்பாற்ற ஒரு பயணம்... லேக் சவாரி!

ஒரகடம் பகுதியில் நல்ல நிலத்தடிநீர் இருப்பதால் அங்கு குடியிருப்புகள் அதிகம் வருகின்றது எனவும், அதனால் இந்த பகுதியில் உள்ள குளங்கள் ஏரிகள் அழிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஏரிகளை காப்பாற்ற ஒரு பயணம்... லேக் சவாரி!

இது குறித்து மேலும் அருண் கூறுகையில், ''இந்த லேக் சவாரி எனப்படும் ஏரிகளை காப்பாற்றும் பயணத்தை கடந்த எட்டு மாதங்களாக செய்து வருகிறோம். இதில் கலந்து கொள்பவர்கள் இந்த நிகழ்வுக்கு பின் அவர்களது சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்த ஏரிகள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவார்கள்.

ஏரிகளை காப்பாற்ற ஒரு பயணம்... லேக் சவாரி!

இதனை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இந்த லேக் சவாரி பயணத்தை கோவை மற்றும் திருச்சி போன்ற மாவட்டங்களிலும் செய்ய உள்ளோம்" என்றார்.

எஸ்.கே.பிரேம் குமார்

படங்கள்: அபிரக்க்ஷன்
(மாணவ பத்திரிகையாளர்)

அடுத்த கட்டுரைக்கு