Published:Updated:

குழாய் கசிவால் பாழாகிய விளைநிலங்கள்: வேதனையில் விவசாயி...!

குழாய் கசிவால் பாழாகிய விளைநிலங்கள்: வேதனையில் விவசாயி...!
குழாய் கசிவால் பாழாகிய விளைநிலங்கள்: வேதனையில் விவசாயி...!

குழாய் கசிவால் பாழாகிய விளைநிலங்கள்: வேதனையில் விவசாயி...!

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள கிராமங்களில், ஒ.என்.ஜி.சி நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாக கேஸ் மற்றும் பெட்ரோல் எடுத்து வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஏராளமான கிணறுகளாலும், விளைநிலங்களில் பதிக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்களாலும் இப்பகுதி விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு விளைநிலங்கள் பாதிக்கப்படும் அவல நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

குழாய் கசிவால் பாழாகிய விளைநிலங்கள்: வேதனையில் விவசாயி...!

திருவாரூர் அருகே உள்ள தென்கரை வேலங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரத்னவேல் சுப்ரமணியன், ஐந்தரை ஏக்கரில் பச்சைப்பயறு சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில்தான் இவரது வயலில் பதிக்கப்பட்டிருந்த ஒ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன கழிவுநீர், நிலம் முழுவதும் பரவி மண்ணை மலடாக்கியுள்ளது.

குழாய் கசிவால் பாழாகிய விளைநிலங்கள்: வேதனையில் விவசாயி...!

வேதனையுடன் ரத்னவேல் சுப்ரமணியன் கூறுகையில், ‘‘என்னோட வயல் வழியா மூன்று குழாய்கள் போகுது. கேஸ் மற்றும் ஆயிலுக்கு இரண்டு குழாய்களும், ரசாயன கழிவுநீரை வெளியேற்ற ஒரு குழாயும் இங்க பதிக்கப்பட்டிருக்கு. திடீர்னு மண் மேல பயங்கரமான வாடையோடு தண்ணீர் மிதந்துச்சு. அடுத்த சில மணி நேரங்கள்ல பயிர்கள் கருக தொடங்கிச்சு. வயல்ல இருந்த நண்டு ஒண்ணு செத்து கிடந்துச்சு. ரசாயன கழிவுநீர் பரவிய மண் மேல உஷ்ண காற்று வெளியானது. மண்ணுல கைய வச்சா, கை அரிக்குது. இப்போதைக்கு ஒரு ஏக்கர் அளவுக்கு ரசாயன கழிவுநீர் படர்ந்து பயிர் பாதிச்சிருக்கு. இந்த பாதிப்பு இன்னும் தொடர்ந்துக்கிட்டே இருக்கு. அடுத்தடுத்து பரவிக்கிட்டே இருக்கு.

குழாய் கசிவால் பாழாகிய விளைநிலங்கள்: வேதனையில் விவசாயி...!

கொடிய நச்சு தன்மை வாய்ந்த ரசாயன கழிவுநீர் ஊடுருவியதால் என்னோட நிலம் மலடாயிடுச்சு. இன்னும் 10 வருசத்துக்கு எந்த பயிரும் இதுல விளையாது. இந்த நஷ்டத்தை ஈடுக்கட்ட ஒ.என்.ஜி.சி நிறுவனம் ஏக்கருக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கணும். என்னோட விளைநிலத்துல பதிக்கப்பட்டுள்ள குழாய்களை எல்லாம் அப்புறப்படுத்தணும்’’ என்றார்.

காரைக்காலில் உள்ள ஒ.என்.ஜி.சி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியிடம் பேச முயற்சித்து வருகிறோம்.

-கு. ராமகிருஷ்ணன்

படங்கள்: க. சதீஸ்குமார்

அடுத்த கட்டுரைக்கு