வழிகாட்டி

ஆறுச்சாமி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துறைகள் ஒவ்வொன்றையும் வரிசையாக பார்த்து வருகிறோம். இந்த இதழில் திறந்தவெளி

மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் முனைவர். வள்ளுவபாரிதாசன் சொல்வதைக் கேட்போம்.

''பொருளாதார வசதி, கல்வியின் பயன் தெரியாமை... போன்ற காரணங்களால் சுமார் 57% கிராமப்புற மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிடுகிறார்கள். வருமானத்துக்காக விவசாய வேலைகளில் ஈடுபடும் அவர்கள், அதில் போதிய வருமானம் கிடைக்காதபோது, நகர்ப்புறத்தில் கிடைக்கும் வேலையில் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். இப்படிப்பட்ட மக்களுக்கு, வேளாண் கல்வி கொடுத்து, அவர்களை மேம்படுத்துவதுதான் எங்கள் இயக்ககத்தின் முதல்பணி.

வேளாண்மைக்காக திறந்தநிலைக் கல்வி முறையை இந்திய அளவில் முதன் முறையாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்தான் அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த விவசாயிகளுக்காக பல வகையான பாடத் திட்டங்கள் உள்ளன. காளான் வளர்ப்பு, தென்னை சாகுபடி, இயற்கை உரம் தயாரிப்பு... என்று 21 வகையான சான்றிதழ் பாடங்களை நடத்தி வருகிறோம். அடுத்து, இளநிலை வேளாண் தொழில்நுட்பம் (பி.எப்.டெக்) என்ற மூன்று ஆண்டு பட்டப்படிப்பும் இருக்கிறது. தமிழ் மொழியில்தான் பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆறு மாதத்துக்கு ஒரு முறை, பத்து நாட்களுக்கு நேர்முகப் பயிற்சி நடைபெறும்.

விவசாயிகளுடைய தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தி, உற்பத்தியைப் பெருக்கத்தான் இந்த சான்றிதழ்கள், பட்டயம், பட்டம் எல்லாம் வழங்கப்படுகின்றன. இதைப் பயன்படுத்தி அரசுப் பணிகளுக்குச் செல்ல முடியாது. ஆனால், தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெற இது கை கொடுக்கும்.

பி.ஏ., எம்.ஏ. போன்ற கலைப்பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்காக, எம்.பி.ஏ. கல்வி வழங்கி வருகிறோம். இந்தக் கல்வியானது, வேளாண் வணிகம், மேலாண்மை, நிர்வாகம் போன்ற துறைகளில் வெற்றிகரமாக செயல்பட உதவும். இந்தப் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பும், தனியார் துறையில் வேலை வாய்ப்பும் அதிகம் உள்ளது.

இன்னும் பலவிதமான சான்றிதழ், பட்டயம், இளநிலை பட்டம், முதுநிலை பட்டம் என்று கல்வித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். தொலைதூரக் கல்வி குறித்து மேலும் தகவல்கள் தேவைப்படும் விவசாயிகள், தயங்காமல் எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்'' என்றார் உற்சாகமாக.

தொடர்புக்கு: தொலைபேசி: 0422-6611229,
இயக்குநர் அலைபேசி: 94890-56713.
படங்கள்: தி. விஜய், மு. நியாஸ் அகமது

- தொடர்ந்து சந்திப்போம்