பிரச்னை

ஆர். குமரேசன்,
இரா. முத்துநாகு,
என். சுவாமிநாதன்

'எண்டோசல்ஃபான் எனும் எம தூதன்’ என்ற தலைப்பில் எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லியால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி கடந்த இதழில் அட்டைப்படக் கட்டுரை வெளியாகிருந்தது.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதியன்று, எண்டோசல்ஃபான் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு இந்தியா முழுக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். அத்தோடு, இந்த விஷயத்தில் இத்தனை ஆண்டுகளாக மெத்தனமாக இருந்து வரும் மத்திய அரசுக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விஷயத்தை உச்ச நீதிமன்றம் வரை கொண்டு சென்றவர், 'இந்திய ஜனநாயக வாலிபர் சங்க'த்தின் தேசிய இணைச் செயலாளர் டி.வி. ராஜேஷ். கேரளாவைச் சேர்ந்த இவர், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்ணனூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். தீர்ப்பு பற்றி அவரிடம் பேசியபோது,

மக்களுக்குக் கிடைத்த வெற்றி!

'இது மக்களுக்குக் கிடைத்த வெற்றி. உண்மையைச் சொன்னால், நான் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதை விட, இடைக்காலத் தடை செய்தி மிகமிக சந்தோஷப்பட வைத்துவிட்டது.

எண்டோசல்ஃபான் கொடூரத்தால் உலகின் பல்வேறு பகுதிகளிலும், உள்ள மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். காசர்கோடு இன்று கேரள மாநிலத்தின் வறுமைக் கோடாகவே காட்சி தருகிறது. ஆனால், இந்திய அரசு மட்டும் எண்டோசல்ஃபானுக்கு வக்காலத்து வாங்கி வருகிறது. நிரந்தரத் தடை விதிக்கப்படவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கவும் எங்களின் சட்டப் போராட்டம் தொடரும்' என்றார், உறுதியானக் குரலில்!

இந்நிலையில், எண்டோசல்ஃபான் உள்ளிட்ட பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு காரணமாக ஏற்படும் பாதிப்பு பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிக் கிளம்பி, அதிர வைத்தபடி இருக்கின்றன.

உண்மைகள் மறைக்கப்படுகின்றன!

இதுகுறித்து நம்மிடம் பேசிய கேரள மாநிலம், இடுக்கி மாவட்ட தி.மு.க செயலாளர் மோகன்தாஸ், ''இடுக்கி மாவட்டத்தில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட்களில் தினந்தோறும் பத்தாயிரம் லிட்டருக்கும் மேல் எண்டோசல்ஃபான் தெளிக்கப்படுகிறது.

தொடர்ந்து அளவுக்கு அதிகமாக தெளிப்பதால், தொழிலாளர்களுக்கு தோல் நோய், நுரையீரல் புற்றுநோய், இதய பாதிப்பு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் இறந்தும் உள்ளனர். பெண்களுக்கு மகப்பேறு, மாதவிடாய் தொடர்பானப் பிரச்னைகள் அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு தனியார் எஸ்டேட் நிர்வாகமே மருத்துவ வசதி செய்து கொடுப்பதால், வெளி உலகத்துக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டு விடுகிறது.

இளைப்பு நோயால் இறக்கும் தொழிலாளர்கள்!

கடந்த மாதம் நாரையாறு தேயிலை எஸ்டேட்டைச் சேர்ந்த தொழிலாளி ராஜனுக்கு இளைப்பு நோய் ஏற்பட்டு, மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை சோதித்த டாக்டர்கள், 'ரத்தத்தில் பூச்சிக்கொல்லி கலந்திருக்கிறது, அத்துடன் நுரையீரலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் காப்பாற்ற முடியாது’ என கை விரித்து விட்டனர். கடைசியில் அவர் இறந்தே விட்டார். நூற்றுக்கணக்கனவர்கள் இதே முறையில் இறந்து வருகிறார்கள். இளைப்பு நோயால் பாதிக்கப்படும் தொழிலாளர்களை எஸ்டேட் நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பி விடுவதால், சில மாதங்களில் இறந்து விடுகிறார்கள். இவர்களது இறப்புக்கான காரணத்தை யாரும் பதிவு செய்வதில்லை.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றரை லட்சம் தோட்டத் தொழிலாளர்கள் இருந்த இடுக்கி மாவட்டத்தில், தற்போது பதிமூன்றாயிரம் பேர் மட்டுமே இருக்கிறார்கள். எண்டோசல்ஃபான் காரணமாக அதிகம் பாதிக்கப்படுவர்கள் இடுக்கி, வயநாடு, கொச்சி மாவட்டங்களில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள்தான். இவர்களில் எழுபது சதவிகிதம் பேர் தமிழர்கள்'' என்றார், வேதனையுடன்.

தமிழகமும் தப்பவில்லை!

திண்டுக்கல் அருகே உள்ள கொசவப்பட்டி பகுதியில் மருந்தடிக்கும் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கிறார்கள். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மருந்தடிக்கும் வேலை செய்ததால், அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு பலர் இளநீர் வியாபாரம், சைக்கிள் கடை என தொழில்களையே மாற்றிக் கொண்டு விட்டனர்.

நொச்சிஓடைப்பட்டியைச் சேர்ந்த காந்தன், 'பல வருசமா மருந்தடிக்கிற வேலைதான் பாத்துட்டு இருந்தேன். ஆறு வருசத்துக்கு முன்ன நரம்பு தளர்ச்சி வந்தப்புறம் மருந்தடிக்கப் போறது இல்ல. காட்டம் அதிகமா இருக்கறதால எண்டோசல்ஃபானைதான் அதிகமா அடிப்பேன். அப்பப்ப பென்வால், மோனோகுரோட்டபாஸ் அடிப்பேன். கொஞ்ச நாளா அடிக்கடி உடம்பு சுகமில்லாம போனவுடனே டாக்டர போய் பாத்தப்போ, செக் பண்ணி பாத்துட்டு, 'என்ன வேலை பாக்குற’னு கேட்டாரு. மருந்தடிக்கிற வேலைனு சொன்னேன்.

'சீக்குக்கு அதுதான் காரணம், இனிமே மருந்தடிக்கப் போகக்கூடாது’னு சொல்லவும் ஆடிப் போயிட்டேன். 'உழைக்கிறதே உசுரு வாழத்தானே!'னு அதிலிருந்து இன்னிய வரைக்கும் ஸ்பிரேயர கையால தொடவே இல்ல. இப்பவும் என்னால கஷ்டமான எந்த வேலையையும் பாக்கமுடியல... வேகமா நடக்கவும் முடியல' என்றார் சோகத்துடன்.

எண்டோசல்ஃபானை எதிர்க்கும் பூச்சிகள்!

அதே ஊரைச் சேர்ந்த ஜோசப், ''ஆரம்பத்துல ஒண்ணும் தெரியல. நாளாக, நாளாக கண் எரிச்சல் வந்துச்சு, நாலு வருசத்துக்கு முன்ன விரல்ல இருக்குற நகமெல்லாம் தன்னால பிச்சுகிட்டு விழுந்துடுச்சு, ஏகப்பட்ட காசு செலவு பண்ணித்தான் சரி செஞ்சேன். இப்பவும் திடீர் திடீர்னு காய்ச்சல் வருது. ஆஸ்பத்திரியில, 'இனிமே மருந்தடிக்கற வேலைக்குப் போக கூடாது'னு சொல்லிட்டாங்க, ஆனா, எனக்கு இதை விட்டா வேற தொழில் தெரியாதுங்க, அதனால, வேற வழியில்லாம இன்னமும் மருந்தடிக்குற வேலைதான் பாத்துகிட்டிருக்கேன்'' என்று சோகத்துடன் சொன்னவர் கூடுதல் தகவலாக

''இங்க அவரைதான் அதிகமா விதைப்பாங்க. இந்த எண்டோசல்ஃபான் மருந்தை அடிச்சப்ப ஆரம்பத்துல அவரையில இருந்த புழுங்க செத்துகிட்டுருந்துச்சு. இப்ப பெரிய, பெரிய புழுவா கிளம்பி வருதுங்க. மருந்தடிச்சாலும் சாகமாட்டேங்கிது. அதனால, காய் பறிக்கறப்ப, அந்தப் புழுவையெல்லாம் பிடிச்சு எரிச்சுதான் கொல்றாங்க!''

தற்போது உலக நாடுகள் பலவற்றிலும் தடை செய்யப்பட்டுவிட்ட இப்பூச்சிக்கொல்லியை, இந்தியாவில் நிரந்தரமாகத் தடை செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் தீவிரமாகியிருக்கின்றன. மத்திய அரசும் இதுதொடர்பான பரிசீலனையைத் துவக்கியிருக்கிறது.

நிரந்தரத் தடைக்காக நீதிமன்றம்... போராட்டம் என்பவை தவிர்க்க இயலாமல் செய்யப்படுகின்றன. மனித நலனுக்கு எதிரான ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்துவிட்டு, செலவு குறைவான இயற்கை வழி விவசாயத்தில் ஆர்வம் காட்டினால்... தன்னாலே வந்து விடுமே தடை!.

ஆண்டுக்கு

25 கோடி!
எண்டோசல்ஃபான் பற்றி தமிழக வேளாண்மை துறையினரின் விளக்கம் என்ன..? மதுரை மண்டல மருந்தியல் துறை ஆய்வக அலுவலர் ரமேஷ், ''பயிர்களைத் தாக்கும் வெள்ளை ஈ, சாறு உறிஞ்சும் பூச்சிகளை அழிக்க எண்டோசல்ஃபான் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இதை ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். ஆனால், விவசாயிகள் ஐந்து முதல் பத்து மில்லி வரை கலக்கிறார்கள். இந்தக் கரைசல் மண்ணில் விழும்போது எளிதாகக் கரையாது. இலைகளில் படும் கரைசல், ஒரு வாரம் வரை தங்கி இருக்கும். தொடர்ந்து தெளிக்கும்போது இலைகளில் படிமமாகத் தங்கி விடும்.

இது, 'ஆர்கினோ குளோரின்’ வகையைச் சேர்ந்த பூச்சிக்கொல்லி. இதை தெளித்த இலைகளைச் சாப்பிட்டாலோ அல்லது தொடர்ந்து இதை தெளிக்கும் வேலையைச் செய்தாலோ இதில் உள்ள 'அசிட்டைல் கோலின்’ (acetylcholine)என்ற ரசாயனம்... நரம்புக் கட்டுகள், எலும்பு மஜ்ஜைகளில் தங்கி விடும். இதனால் நரம்பு தொடர்பான நோய், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு, நுரையீரல் புற்றுநோய், ரத்த அழுத்தம், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது'' என்றவர்,

''தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு இருபத்தி ஐந்து கோடி ரூபாய்க்கு எண்டோசல்ஃபானைக் கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் பருத்திக்கு மட்டுமே இது அதிகம் பயன்படுத்தப்படுவதால்... இங்கு பாதிப்பு குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்'' என்றார்.

முந்திக் கொண்ட தேனி!

உச்ச நீதிமன்ற தடையைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதிகளவு பூச்சிக்கொல்லி பயன்பாட்டில் உள்ள தேனி மாவட்டத்தில், கடந்த 16-ம் தேதி முதல் எண்டோசல்ஃபானுக்கு தடை விதித்திருக்கிறது மாவட்ட நிர்வாகம். அதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

படங்கள்: வீ.சிவக்குமார்