இதோட குறைச்சுக்குவோம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

'இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழக கடற்பகுதிகளில் ஒரு மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயர ஆரம்பிக்கும்!"

-இப்படி எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்.

கூடவே, 'கடலோரத்தில் வசிக்கும் மக்களை இப்போதே மேடானப் பகுதிகளுக்கு மாற்றிவிடுங்கள்; தமிழ்நாட்டின் கடற்கரை பகுதி முழுவதும் சுமார் 1,076 கி.மீ. தொலைவுக்கு நீண்ட சுவர் எழுப்புங்கள்' என்றெல்லாம் எச்சரிக்கைகள் வேறு றெக்கை கட்டுகின்றன.

ஆகக்கூடி, விஷயம் கை மீறிப்போய்க் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

கட்டுப்பாடற்ற தொழில்வளர்ச்சி, கட்டுப்படுத்த முடியாத வாகனப் பெருக்கம் என்று அறிவியல் வளர்ச்சியை தாறுமாறாகப் பயன்படுத்தி வருகிறோம். இதன் எதிர்விளைவாக... புவியின் வெப்பநிலை உயர்ந்து, அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிகள் உருகி, கடலின் நீர்மட்டம் உயரப்போகிறது என்பதுதான் பிரச்னை.

முதலில், '2100-ம் ஆண்டில் மூழ்கும்' என்றார்கள். அடுத்து, '2050-ம் ஆண்டில் மூழ்கும்' என்றார்கள். இப்போதோ... 'அடுத்த பத்தாண்டுகளுக்குள் ஆபத்து ஆரம்பமாகிவிடும்' என்கிறார்கள்.

இத்தனைக்குப் பிறகும்கூட, 'வளர்ச்சி' என்ற பெயரில் பஞ்சபூதங்களையும் மாசுப்படுத்தும் தொழிற்சாலைகளை உருவாக்குவதில் அதீத அக்கறை காட்டப்படுகிறது. 'விண்ணை முட்டும் கட்டடங்கள்தான் எங்களின் பெருமை' என்ற பெயரில் இஷ்டம்போல கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. 'வீடே இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இந்தா கார்' என்றபடி கடன்கள் அள்ளிவிடப்படுகின்றன.

'போதும், இதோட நிறுத்திக்குவோம்' என்றுகூட வேண்டாம்... 'இதோட குறைச்சுக்குவோம்' என்று யோசித்தாவது, சூழலைக் காக்கும் விஷயங்களுக்கு உலக அளவில் முன்னுரிமை தரப்பட வேண்டும். அதை நோக்கிய முயற்சிகளை நம் அரசியல்வாதிகள் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.

இல்லையேல்... 'லெமூரியா கண்டத்தை கடல் விழுங்கியது', 'சங்கம் வளர்த்த கபாடபுரத்தை கடற்கோள் காணாமற் போகச் செய்தது', 'சிலம்பு பேசும் பூம்புகாரைப் பெருங்கடல் பேரலை தின்று தீர்த்தது' என்றெல்லாம் வரலாற்றில் படிக்கும் நாம், 'தங்கத் தமிழ்நாட்டை கடல் தழுவிக் கொண்டது' என்று நம் கண் முன்னே காணும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நேசத்துடன்
பா.சீனிவாசன்
ஆசிரியர்