விவாதம்

கு.ராமகிருஷ்ணன்

'இப்படித்தான் இருக்கவேண்டும்...
இயற்கை வேளாண் கொள்கை!'

அரசுக்கு அன்பான கோரிக்கை

'புலியூருக்கு பயந்து அலியூருக்குப் போனா... அலியூரும் புலியூரா மாறிப் போயிடுச்சாம்' என்பார்கள். அந்தக் கதையாகத்தான் இருக்கிறது... இயற்கை வேளாண்மை விஷயத்தில் தமிழக அரசின் காய் நகர்த்தல்கள்!

ஏற்கெனவே, அரசு கையில் எடுத்திருக்கும் 'தமிழ்நாடு மாநில வேளாண் மன்றம்' என்ற சட்டம். இயற்கை வழி வேளாண்மைக்கு எதிரான போக்கில் உருவாக்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்து நிற்கின்றன. அதையடுத்துதான், அந்தச் சட்டத்தை நிறைவேற்றாமல், தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது அரசு.

இதற்கு நடுவே, 'இயற்கை வழி வேளாண்மைக்கும் ஒரு மன்றம் அமைக்கலாம்' என்ற கோரிக்கைகள் எழவே, சட்டென்று அதைப் பிடித்துக் கொண்ட அரசு... சத்தமில்லாமல், அதற்கான கொள்கைகளை உருவாக்கும் வேலைகளைச் செய்யச் சொல்லி வேளாண் பல்கலைக்கழகத்திடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறதாம்.

ஆனால், 'அங்கே உருவாக்கப்படும் கொள்கைகள் அனைத்தும், கொள்ளைக்கார வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவானவைகளாக உருவாகி வருகின்றன. அவற்றின் மூலம் இயற்கை விவசாயிகளுக்குத் துளிகூட பலன் இருக்காது' என்றொரு பேச்சு கிளம்பி... இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்டோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 'இயற்கை வேளாண் கொள்கை எப்படி இருக்க வேண்டும்' என்பது குறித்து 'தாளாண்மை உழவர் இயக்கம்' வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன் மீதான விவாத அரங்கம், நவம்பர் 10&ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில், 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், இந்திய இயற்கை வழி வேளாண்மை இணையத்தின் செயலாளர் கிளாடு ஆல்வாரிஸ், தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் சுந்தர்ராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கிளாடு ஆல்வாரிஸ் பேசும்போது "தமிழகத்தில் ரசாயன விவசாயம் செய்பவர்களின் வேளாண் அறிவு, மழலையர் பள்ளி மாணவர்களின் அறிவு போல் உள்ளது. ஆனால், இயற்கை விவசாயம் செய்பவர்களோ... முனைவர் பட்டம் பெற்றவர்கள் போல் இருக்கிறார்கள். இயற்கை வேளாண்மைக்குத் திரும்பவில்லையென்றால்... ரசாயன விவசாயத்தோடு சேர்ந்து விவசாயிகளும் அழிந்துதான் போகவேண்டும்" என கவலை தெரிவித்தார்.

தாளாண்மை உழவர் இயக்கத்தின் செயலாளர் பாமயன் பேசும்போது, "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் பல்வேறு வகையான வேளாண் முறைகளைக் கண்டுபிடித்து பின்பற்றியிருக்கிறார்கள். எனவே, தமிழக அரசு உருவாக்கும் இயற்கை வேளாண்மை கொள்கை, தமிழர்களின் தொன்மையான வேளாண் அறிவியலை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும். மாறாக... பன்னாட்டு நிறுவனங்கள் எழுதிக் கொடுத்தவற்றை கொள்கையாக்கக் கூடாது" என்று சொன்னார்.

தமிழிக உழவர் முன்னணியின் ஆலோசகர் கி. வெங்கட்ராமன் பேசும்போது, "இயற்கை வேளாண்மைக்கென வாரியம் உருவாக்கப்பட வேண்டும். அது, அரசு சார்ந்து இல்லாமல், தனித்து இயங்கும் சுதந்திரம் பெற்றதாகவும் இருக்க வேண்டும். இயற்கை வேளாண் உழவர்கள், இயற்கை வேளாண் நிபுணர்கள் மட்டுமே அதில் இடம் பெற வேண்டும்" என்று யோசனைகள் சொன்னார்.

இயற்கை விவசாயி செந்தமிழன், "பெரும் பெரும் நிறுவனங்கள், இயற்கை இடுபொருள் உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும் தடை செய்ய வேண்டும். இல்லையென்றால், தற்சார்பு என்பதே கேலிக்கூத்தாகிவிடும். இயற்கை வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனையிலும் பெரும் நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது.

ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளைக் கையாள்வதால் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து விரிவான மருத்துவ ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும். இயற்கை வேளாண் கொள்கை உருவாக்கத்துக்கு இந்த மருத்துவ அறிக்கை மிகவும் உதவியாக இருக்கும். இயற்கை விளைபொருட்களின் விலை நிர்ணயம் விவசாயிகளின் கையில் இருக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

எல்லாவற்றையும் கேட்டுமுடித்து வெளியில் வந்தபோது நம்மிடம் பேசிய செங்கிப்பட்டியைச் சேர்ந்த இயற்கை விவசாயி பால்ராஜ்,

''ஆகா... எத்தனை அருமையான யோசனைகள். இதையெல்லாம் நிறைவேற்றினால், நிச்சயமாக விவசாயிகள் ஒட்டுமொத்தமாக தற்சார்பு அடைவார்கள்.

ஆனால், அரசியல்வாதிகளுக்கு இதனால் என்ன பயன்... அதிகாரிகளுக்கு என்ன பிரயோஜனம்? அமெரிக்கா, ஜெர்மனி என்று டாலர்களில் வரும் கமிஷன் பறிபோய்விடுமே...? ஆராய்ச்சி என்ற பெயரில் பல நாட்டுக்கும் பறந்து, கம்பெனிகளின் விருந்தினர் விடுதிகளில் தங்கி ஊரைச் சுற்றும் சொகுசு வாழ்க்கை கிடைக்காமல் போய்விடுமே... அதையெல்லாம் இந்த இயற்கை விவசாயிகள் ஈடுகட்ட முடியுமா... முடியாது. அதனால், கொள்ளையடிக்கத்தான் கொள்கைகளை வகுப்பார்களே தவிர, ஊரை வாழ வைக்கவா வகுப்பார்கள்?'' என்று சீறலாகச் சொன்னபடியே சென்றார்!

வாஸ்தவம்தானே?!