பசுமை மேடை

வாசகர்கள்

நிதி இல்லாமல் தவிக்கும் விவாதக் குழுக்கள்!

தமிழகத்தில் வேளாண்மைத் துறை, 'உழவர் பயிற்சி நிலையம்' மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் உழவர் விவாதக் குழுக்கள் அமைத்து, பயிற்சிகளை நடத்தி வருகிறது. பயிற்சி உதவித் தொகை ஒரு நாளைக்கு '15, அமைப்பாளர்கள் பயிற்சித் தொகை '15, செயல் விளக்கம் '20, கல்விச் சுற்றுலா ஆண்டுக்கு '2,000, உழவர் தினவிழா தொகை '2,000 அமைப்பாளர்கள் பரிசு '1,000 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால்... கடந்த 25 ஆண்டுகளாக இதே தொகைதான் கொடுக்கப்படுகிறது! காலத்துக்கு ஏற்ப உரிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், உழவர் விவாதக் குழுக்கள் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என அரசுக்கு பல முறை கடிதம் அனுப்பியும், 'ஆவண செய்யப்படும்' என்கிற பதில் மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இனியாவது சம்பந்தப்பட்ட துறையின் உயரதிகாரிகள், உரிய நிதி ஒதுக்கி உழவர் விவாதக் குழுக்கள் சிறப்பாக செயல்பட முயற்சி எடுக்க வேண்டும்.

பா.மா. வெங்கடாசலபதி,
மாவட்ட உழவர் விவாதக் குழு செயலாளர்,
கவுந்தப்பாடி,
ஈரோடு.

வேண்டும், பசுமைத் தொலைக்காட்சி!

இன்று நம் நாட்டில் தொலைக்காட்சிகள் இல்லாத வீடே கிடையாது. ஆனால், பெரும்பாலான தொலைக்காட்சி நிறுவனங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்குத்தான் முக்கியத்துவம் தருகின்றன. 80% விவசாயத் தொழில் செய்யும் நாட்டில், விவசாயிகளுக்குப் பயனுள்ள நிகழ்ச்சிகள் நூற்றில் ஒன்று வருவதே அரிதாகிவிட்டது. அரசாங்கமோ, அல்லது தனியார் துறையோ விவசாயத்துக்கு என்று தனி சேனல் ஒன்றை துவங்கினால், அதில் இருந்து நல்ல பல செய்திகள் மக்களுக்கும் கிடைக்கக்கூடும். அதுமட்டுமல்லாது... உணவு உற்பத்தியின் கஷ்டநஷ்டங்களையும் விவசாயிகளின் துயரத்தையும் அறிந்து கொள்ளும் வகையில் அதனை அமைத்தால் நன்றாக இருக்கும்.

ச. பூபதி, சேலம்10.

புவி வெப்பத்தைக் குறைக்கக் குடும்பக் கட்டுப்பாடு!

இன்று நாம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய சவால்... உலக வெப்பமயமாதல்! இதன் காரணமாகவே பல்வேறு இயற்கைச் சீரழிவுகளையும் எதிர்கொள்கிறோம். வெப்பமயமாதலுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், மிகமுக்கியக் காரணம் பெருகி வரும் மக்கள்தொகையே. மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யவே விளைநிலங்கள் மற்றும் காடுகள் அழிக்கப்பட்டு தொழிற்சாலைகளாகவும், வீடுகளாகவும் மாற்றப்படுகின்றன. 1947ல் இந்தியாவின் மக்கள்தொகை 33 கோடியாக இருந்தது. தற்போது 120 கோடியாக உள்ளது. இவ்வளவு மக்களுக்கும் உணவளிக்க நம்மிடம் 52 விழுக்காட்டுக்கும் குறைவான விவசாய நிலமே உள்ளது. 2050ல் மக்கள்தொகை தற்போது உள்ளதைவிட 4 மடங்கு அதிகரித்துவிடும். அப்போது நம்மிடம் இருக்கும் விவசாய நிலம் மிகவும் குறைவாகவே இருக்கும்.

75, 85களில் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரத்தை அரசு தீவிரப்படுத்தி இருந்தது. தற்போது அது குறைந்துவிட்டது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாமல் சுற்றுச்சூழல், நீர், நிலப் பராமரிப்பு என பேசுவது எந்தவொரு நிரந்தரத் தீர்வையும் தரப் போவதில்லை.

சு.ப. சிவசுப்ரமணியம், கும்பகோணம்.

விவசாயிகளோடு ஆலோசனை செய்யுங்கள்!

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் மூலம் மாநிலம் முழுவதும் உண்மையான விவசாயிகளுக்குப் பயிர் கடன் கிடைத்திட, எளிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குழுக்களுக்குத்தான் கடன் வழங்கப்படும் என்ற விதிமுறையை நீக்கி, கடந்த காலங்களில் வழங்கப்பட்டது போன்ற வழிமுறையைப் பின்பற்றிட வேண்டும். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் வங்கிகளில் நடைபெறும் முறைகேடுகளைக் களைவதற்கும், சிறப்பாக செயல்படவும் மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது விவசாயிகள், மாவட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துரையாடி பிரச்னைகளைக் களைய வேண்டும்.

தோட்டக்கலைத்துறை மூலம் மானியத்தில் வழங்கப்படும் இடுபொருட்கள் பெரும்பாலும் தரமற்றவையாக இருக்கின்றன. அவற்றின் தரத்தை உறுதிப்படுத்துவது அவசியம்.

அனைத்துப் பயிர்களுக்கும் காப்பீடுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தனி விவசாயிக்கும் நேர்மையான முறையில் காப்பீடு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரா. மாதேசுவரன், சூரமங்கலம்