கூட்டம்

ஜி.பழனிச்சாமி

"டாஸ்மாக் கடைகளில் கள்..!"

தென்னை விவசாயிகள் கோரிக்கை...
வாய் திறக்காத வாரியம்..!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, 'தென்னை விவசாயிகள் நல வாரியம்' சார்பாக... கடந்த நவம்பர் 11-ம் தேதி, கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. வாரியத்தலைவர் ராஜ்குமார் மன்றாடியார், வாரிய உறுப்பினர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் என பலரும் இதில் பங்கேற்றனர்.

இனி கூட்டத்திலிருந்து... முதலில் கருத்து சொல்ல வந்த, தமிழ்நாடு கள் இயக்க அமைப்பாளர் நல்லசாமி, "கள் உணவின் ஒரு பகுதி என்பதால், தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கு உள்ள தடையை நீக்கி, உணவுப் பட்டியலில் சேர்க்க வேண்டும். கள் பற்றி விவசாயிகளிடம் கருத்துக் கேட்டு, தன்னுடைய அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துவிட்டது நீதிபதி சிவசுப்ரமணியம் கமிஷன். அதைப் பற்றிய விவரங்களையும் உடனடியாக வெளியிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் என்.எஸ். பழனிசாமி, "தேங்காய் எண்ணெயின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யவேண்டும். தேங்காய் எண்ணெயில் பளபளப்புக்காக ஒயிட் ஆயில் சேர்க்கப்படுகிறது. கொப்பரை தயாரிப்பின்போது சல்ஃபர் பயன்படுத்தப்படுகிறது. இவற்றையெல்லாம் தடை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்தவர்,

"டாஸ்மாக் கடைகளில் மதுபானத்தோடு சேர்த்து கள்ளையும் விற்க ஏற்பாடு செய்தால், தேவைப்பட்டவர்கள் வாங்கிக் குடித்துக் கொள்-வார்கள்" என்றொரு கோரிக்கையை வைக்க... அரங்கமே அதை ஆமோதித்தது.

விவசாயிகள் விழிப்பு உணர்வு இயக்க மாநிலத் தலைவர் 'அக்ரி' டி. வேலாயுதம், "கொப்பரை முழுவதையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். தேங்காய் மற்றும் இளநீருக்குக் கொள்முதல் மற்றும் விற்பனை மையங்களை அரசு ஏற்படுத்த வேண்டும். இலங்கையைப் போல தென்னையில் இருந்து மதிப்புக்கூட்டிய பொருட்களை அரசே உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

நிறைவாகப் பேசிய வாரியத் தலைவர் ராஜ்குமார் மன்றாடியார், "தென்னை விவசாயம் அதிகமாக உள்ள 12 மாவட்டங்களில் 23 தாலூகாக்களில் முதற்கட்டமாக கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட உள்ளது. பெறப்படும் கருத்துக்களை அறிக்கையாக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம். அதன்படி, திட்டங்கள் மற்றும் சலுகைகளை பெறுவதற்கான முயற்சிகளை செய்வோம்.

தென்னை வளர்ச்சி மற்றும் அறுவடைக்குப் பின் செய்நேர்த்தித் தொழில்நுட்பம், மதிப்புக்கூட்டுதல் மற்றும் சந்தைவளர்ச்சி ஆகியவற்றுக்காக தனித்தனியாக மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தென்னை சார்ந்தத் தொழில்களை ஏற்படுத்துவோம். மண்பரி-சோதனைத் திட்டம், காப்பீடு, தேங்காய் எண்ணெய் பயன்பாடு குறித்த விழிப்பு உணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். உரித்த தேங்காயைக் கொள்-முதல் செய்ய அரசை வலியுறுத்துவோம். முன்னோடி விவசாயிகளின் பண்ணைகளை மாதிரி தென்னை வேளாண் பண்ணைகளாக்க முயற்சிகள் செய்வோம்" என்று ஏகப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டவர், கள் பற்றிய கேள்விகளுக்கு கடைசிவரை வாய் திறக்கவே இல்லை.

அன்று மதியம் பொள்ளாச்சியிலும் இதேமாதிரியான கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

படங்கள் வெ. பாலாஜி