ஆலோசனை

ஆர்.குமரேசன்

கம்புக்குக் காத்திருக்கு தெம்பான விலை !

கொண்டைக்கடலை, கொத்தமல்லி, கம்பு ஆகியவை, தமிழகத்தைப் பொறுத்தவரை கார்த்திகைப் பட்டத்துக்கான (அக்டோபர்- நவம்பர் விதைப்பு) முக்கியமானப் பயிர்கள். இவ்வருடம் போதுமான அளவு வடகிழக்குப் பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கையில், மேற்படி பயிர்களைப் பயிரிட விரும்புகின்றனர் விவசாயிகள். அதேசமயம், அறுவடை சமயத்தில் நல்ல விலை கிடைக்குமா.. கிடைக்காதா..? என்ற சந்தேகம் அவர்களிடம் எழுந்திருக்கிறது.

இந்நிலையில், சில முக்கியமான அறிவிப்புகளை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மையம் வெளியிட்டிருக்கிறது. அதிலிருந்து...

நிலையாக இருக்கும் கொண்டைக்கடலை!

தமிழகத்தில் கொண்டைக்கடலை பொதுவாக கார்த்திகைப் பட்டத்தில் (நவம்பர்) பயிரிடப்பட்டு, பிப்ரவரி-மார்ச் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விலை நிலவரங்களை ஆய்வு செய்து பார்த்ததில்... வரும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் கொண்டைக்கடலையின் விலை குவிண்டாலுக்கு 2,400-2,500 வரை இருக்கும் எனத் தெரிகிறது. இறக்குமதி மற்றும் உள்நாட்டு வரத்துகளால் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இதன் விலை நிலையாகவே இருக்கும்.

கொத்தமல்லிக்கு குஷியான வரும்படி!

தூத்துக்குடி, விருதுநகர், கோவை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் 24,748 ஹெக்டேரில் கொத்தமல்லி பயிர் செய்யப்படுகிறது. தற்போது, கார்த்திகைப் பட்டத்தில் விதைக்கும் கொத்தமல்லிக்கு அறுவடை நேரத்தில் (பிப்ரவரி-மார்ச்) குவிண்டாலுக்கு '3,000 முதல் '3,200 வரை விலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

கம்பு நட்டா காசு பாக்கலாம்!

வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்து தென்தமிழ்நாட்டில் கம்பு அதிகம் பயிரிடப்படுகிறது. நடப்பு ஆண்டில் அறுவடை சமயத்தில் (ஜனவரி) கம்பின் விலை ஒரு கிலோ ' 8 என இருந்தது. ஆனால், கூலியாட்கள் உள்ளிட்ட சில பிரச்னைகள் இருப்பதால், கம்பு விவசாயிகள் மக்காச்சோளப் பயிர் சாகுபடிக்கு மாறி வருகின்றனர். இதனால், இந்த ஆண்டு கம்பு சாகுபடிப் பரப்பு குறைய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், கோவில்பட்டி சந்தையில் கடந்த 15 ஆண்டு கால விலை நிலவரங்களை ஆய்வு செய்ததில், கம்பு விலை வரும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் குவிண்டாலுக்கு '750 முதல் '875 வரை இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.

மஞ்சள் விலை குறையலாம்!
'தமிழ்நாட்டிலும், இந்திய அளவிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உயர்ந்து கொண்டே வந்த மஞ்சள் விலை, விரைவிலேயே இறங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது' என எச்சரிக்கை விடுத்திருக்கிறது உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மையம்.

இம்மையத்தின் அறிக்கையில், 'விலை தொடர்ந்து உயர்ந்ததால், தற்போது மஞ்சள் சாகுபடிப் பரப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வரும் 2011-ம் ஆண்டில் இந்திய அளவில் மஞ்சள் உற்பத்தி

70 லட்சம் மூட்டைகளாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த டிசம்பர் மாதக் கடைசியிலேயே புதுமஞ்சள், சந்தைக்கு வரத் துவங்கிவிடும். ஈரோடு ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் கடந்த 15 ஆண்டு காலமாக நிலவிய விலை நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது, டிசம்பரிலேயே விலை குறையத் தொடங்கும் எனத் தெரிகிறது. எனவே, மஞ்சளைத் தொடர்ந்து இருப்பு வைக்க நினைக்கும் விவசாயிகள் யோசித்து முடிவு செய்து கொள்ளலாம்' என்று கூறப்பட்டுள்ளது.