முறையீடு

கோவணாண்டி

பங்கு பாக்கெட்டுல போடுங்க...ஓட்டை, யோக்கியனுக்கு ?

கோவாண்டிகளுக்கு கோவணாண்டி கோரிக்கை

என்னருமை ஏரோட்டிகளா... எல்லாருக்கும் ஒரு வணக்கம் போட்டுக்கறான்... இந்தக் கோவணாண்டி. இந்தத் தடவை நமக்கே நமக்குத்தான் நம்ம கடுதாசி.

அய்யா, மகராசனுங்களே... மண்ணோட மல்லுக்கட்டியே மனுசப் பொறப்பு மக்கிப் போறதத் தவிர, வேற என்னத்த கண்டோம் நாம. அதனால, காட்டுல வெக்குற கவனத்தை, கொஞ்சம் நாட்டுப் பக்கமும் திருப்புங்க.

தூங்குறப்பக்கூட காலாட்டிகிட்டே தூங்கணும். இல்லைனா... அப்படியே எரிச்சு, சாம்பலை எறைச்சு விட்டுட்டு போற அளவுக்கு நாட்டுக்குள்ள நாகரிகம் வளந்துகிடக்கு... அதனாலதான் சொல்றேன்.

நாம போட்ட முதலீட்டை (ஓட்டு) மூலதனமா வெச்சு, கட்சி வித்தியாசமில்லாம எல்லா அரசியல்வியாதிகளும் லஞ்சம், ஊழல், சொத்துக் குவிப்புனு கின்னஸ் சாதனை செய்றது கணக்கா கிளம்பிட்டாங்க.

சும்மா சொல்லக்கூடாது... சொல்லி வச்ச மாதிரி, ஆளுங்கட்சி எதிர்கட்சி, ஆண்ட கட்சினு எல்லா கட்சிக மேலயும் ஒரே நேரத்துல முடை நாத்தம் வீச ஆரம்பிச்சதுதான் சரியான க்ளைமாக்ஸ்!

'காமன்வெல்த் போட்டியில கோடிக்கணக்கான ரூபாய் ஊழல்'னு காங்கிரஸ் எம்.பி-யா இருக்கற சுரேஷ் கல்மாடி மேல தினம் தினம் குற்றச்சாட்டு!

தேசத்துக்காக உசுரைக் கொடுத்த கார்கில் வீரர்களோட மனைவிகளுக்குக் கட்டிக் கொடுத்த வீட்டை, மாமியார், மருமக, மச்சினன்னு பலரும் பங்கு போட்டுக்கிட்டதுல... கடைசியா மாட்டிக்கிட்டு மண்ணைக் கவ்வி இருக்கறாரு மகாராஷ்டிர காங்கிரஸ் முதல்வர் அசோக் சவான்.

நம்ம ஊரு ராசா, தேசத்துக்கு நூத்தி எழுபத்தியாறு லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்திட்டு, நாடு பூராவும் நாக்கைப் புடுங்குற மாதிரி கேட்ட பிறகு, ராஜினமா செஞ்சிருக்காரு. 'இதுல அவருக்குக் கிடைச்சது எத்தனை கோடியோ?'னு கணக்குப் போட்டுப் பேசிக்கிட்டிருக்கறாங்க ஆளாளுக்கு.

கர்நாடகாவுல பி.ஜே.பி. முதலமைச்சர் எடியூரப்பா, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மகள், மகனுக்கு ஒதுக்கிக்கிட்டு, யோக்கிய சிகாமணியா கோயில், குளம்னு திரிஞ்சாரு. இப்ப, 'யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ள வை'னு சொல்றது கணக்கா... அவரை சொந்தக் கட்சிக்காரங்களே சுத்தி சுத்தி அடிக்கறாங்க.

இதுக்கு நடுவுல, 'என்னாலதான் ராசா ராஜினமா செஞ்சார்’னு அறிக்கை கொடுத்து குஷியாகறாங்க ஜெயலலிதா அம்மையார்.

அதுக்குப் பதிலடியா... 'உம்மேல இன்னும்கூட ஏகப்பட்ட கேஸ் கட்டு பாக்கியிருக்கு. குறிப்பா, வருமானத்தை மீறி சொத்துக் குவிச்ச வழக்கை மறந்துட்டியா..? டான்சி வழக்குல நீதிமன்றமே கண்டிச்ச உனக்கு, இதைப் பத்தி பேச யோக்கியதை இல்லை'னு வாயை அடைக்கப் பாக்குறாரு கருணாநிதி.

'கறைபடியாதக் கரங்களுக்குச் சொந்தக்காரங்க'னு சொல்லப்படுற... சொல்லிக்கற கம்யூனிஸ்டுங்க கதையே கொஞ்ச நாளைக்கு முன்ன கேரளாவுலயும் மேற்கு வங்காளத்- துலயும் நாறினதை மறந்துட முடியுமா என்ன?

மொத்தத்துல காங்கிரஸ், பி.ஜே.பி., தி.மு.க., அ.தி.மு.க-னு வகை தொகையில்லாம வருமானத்தைப் பெருக்குறது ஒண்ணைத்தான் நோக்கமா வெச்சுருக்காங்கறது திரும்பத் திரும்ப ஊர்ஜிதமாகிட்டே இருக்கு.

'என்னைத் தேர்தல்ல ஜெயிக்க வெச்சா... அதைக் கொண்டு வருவேன், இதைக் கொண்டு வருவேன்'னு முழுநீளத்துக்கு முழங்கிட்டு, ஜெயிச்சு வந்தவுடனே ஆத்துல மணல், காட்டுல மரம், ரோட்டுல இடம்னு கண்ணுல பட்டதை எல்லாம் கொண்டு போயிடுறாங்க.

நாப்பாதயிரத்தை செலவு பண்ணி, நாலு சுவர், நடுவுல ஒரு கக்கூசு வெச்சு வீடு கட்டுறதுக்குக்கூட டெண்டர்னு பேப்பருல விளம்பரம் கொடுக்கறாங்க. ஆனா, பல லட்சம் கோடி வியாபாரத்தை சுண்டக்காய் கணக்கா கூறுகட்டி வித்திருக்காங்க. கல்யாண பந்திக் கணக்கா... முதல்ல வந்தவங்களுக்கு முன்னுரிமையாம்.

அதாவது... 'சிக்கினா, சுரண்டு'னு புதுப்புது கொள்கைகளோடதான் கோட்டைப் படியிலயே காலை வெக்கறாங்க. இப்படிப்பட்ட ஆத்மாக்கள்தான், நாளைக்கு இந்த நாட்டோட... நம்ம வாரிசுங்களோட தலையெழுத்த நிர்ணயிக்கப் போற முக்கியமான கொள்கை விஷயங்கள்ல முடிவெடுக்கறாங்கங்கறத நினைச்சாலே குலைநடுங்குது.

உதாரணமா... பி.டி.னு சொல்லப்படுற மரபணு மாற்றப்பட்ட விதையையே எடுத்துக்கோங்க. அதை உணவுல பயன்படுத்தினா... எதிர்காலத்துல என்ன எதிர்விளைவு உண்டாகும்னு அதை உருவாக்கினவங்களுக்குகூட தெரியாதுனு சொல்லிக்கறாங்க. ஐரோப்பா கண்டத்துலயே தடை பண்ணிட்டாங்களாம். ஆனா, நம்மாளுங்க மட்டும் தங்கத் தாம்பாளத்துல வெச்சு தாங்கறாங்க.

நம்ம ஊருல ஆளாளுக்கு பாரம்பர்யமான விதைகள சேமிச்சு வெச்சி விவசாயத்தைப் பார்த்துக்கிட்டிருக்காங்க. ஆனா, அந்த விதைகளையெல்லாம் விட்டுட்டு, வீரிய விதைகள வாங்குனு கட்டாயப்படுத்தறாங்க.

அப்படீனா... இதுல எவ்வளவு கமிஷன் விளையாடியிருக்குமோனு சந்தேகப்படாம என்ன செய்யமுடியும்?

'எண்டோசல்ஃபான்'னு ஒரு மருந்து, அது கொஞ்ச நாளைக்கு முன்ன கேரளாவையே கதிகலங்கடிச்சுடிச்சு. உலக அளவுல பல நாடுகள்ல தடை பண்ணப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து. கேரளாவுலயும் தடைதான். ஆனா, அந்தத் தடையை நீக்கறதுக்காக படாதபாடு படறாங்க வேளாண்துறையைக் கையில வெச்சுருக்கற சரத் பவார் அண்ட் கோ. அப்ப-டின்னா... உங்களுக்குப் பேசப்பட்ட தொகை எவ்வளவு?னு கேக்காம இருக்க முடியுமா?

'நாடு வளருது... நாடு வளருது'னு மந்திரிமாருங்க மாறிமாறி அறிக்கை விடுறாங்க. உண்மைதான் அம்பானிகளுக்கு மட்டும் வளந்தா அதுக்கு பேரு வளர்ச்சி இல்லீங்க, அய்யாசாமிகளுக்கும் வளரணும். உடம்புல எல்லா உறுப்புகளும் சமமா வளந்தாதான் அதுக்கு பேரு வளர்ச்சி. சில பாகம் மட்டும் வளந்தா... அதுக்கு பேரு வீக்கம்... நோய்.

நாடு வளருதோ இல்லையோ... அரசியல்-வாதிங்க எல்லாருமே நல்லபடியாத்தான் வளர்ந்து நிக்கறாங்க. பாத்ரூம் போறதுக்குக் கூட, பளபளா கார்ல போற அளவுக்கு வீட்டைச் சுத்தி கார்களா நிறுத்தி வெச்சிருக்காங்க. அந்த அளவுக்கு இறைஞ்சு கிடக்குது கமிஷன் காசு.

'நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாணவர்களுக்கு பைக் கொடுப்பேன்’னு பீகார் தேர்தல் பிரசாரத்துல சொல்லியிருக்கார் லாலு பிரசாத் யாதவ். மிகவும் பின்தங்கின அந்த மாநிலத்துலயே

50 ஆயிரம் ரூபா மதிப்புள்ள பைக்கை இனாமா கொடுக்க முடியும்னா..? தமிழ்நாட்டு ரேஞ்சுக்கு எவ்வளவு கிடைக்கும்னு கணக்கு போட்டுக்குங்க.

அடுப்பு ஓசி, பருப்பு ஓசி, அரிசி ஓசின்னு, ஓசிக்காக ஓட்டு போடாம, இந்த வாட்டியாவது யோசிச்சு ஓட்டு போடலைனா... நம்ம பொழப்புல ஓட்டை யைப் போட்டுடுவாங்க. 'விதைக்கிற காலத்துல ஊருக்குப்போனா அறுவடை காலத்துல ஆள் தேவை இல்லை'ங்கறது கணக்கா... இது நமக்கு விதைக்கிற காலம். எல்லா பக்கம் இருந்தும் அரசியல் வியாபாரிக ஓட்டுப் பிச்சைக் கேட்டு வருவாங்க. கூடவே பெட்டிகளும் வரும். எல்லா கட்சிக்காரங்களும் சக்திக்கு ஏத்த மாதிரி சம்பாதிச்சு வெச்சு இருக்காங்க.

அது எல்லாமே... நாம போட்ட ஓட்டை முதலீடா வெச்சு சேர்த்த சொத்துதான். அந்த லாபத்துல பங்கு கேட்குறதில எந்தத் தப்பும் இல்லை. கொஞ்ச காலத்துக்கு எல்லா வேலைகளையும் ஒதுக்கி வெச்சுட்டு, ஊர் கூட்டம்-போட்டு இருக்கிற ஓட்டுகளை கணக்கு எடுத்து, வரிசையா நின்னு பேரம் பேசினா... ஒரு நல்ல தொகை கிடைக்கும்.

'கருப்பு எம்.ஜி.ஆர்' சொல்ற மாதிரி, 'கொடுக்குறவன்கிட்ட எல்லாம் வாங்கிக்கங்க. ஓட்டை மட்டும் யோக்கியனுக்கு போடுங்க. 'அவன எங்க தேடுறது?'னு கேக்கறீங்களா... இருக்கவே இருக்கு 49-ஓ (49-0)! அதுல ஒரு குத்துவிட்டுட்டு, 'என் ஓட்டு எந்த அயோக்கியனுக்கும் இல்லை'னு தெம்பா நடங்க வீட்டுக்கு!

இப்படிக்கு