மரத்தடி மாநாடு

ஏறுமுகத்தில் காய்கறி, வெல்லம்...!

கொஞ்சம் வானம் வெறித்து சூரியன் தென்படவும், கொட்டோ கொட்டென கொட்டிய மழையின் உபாயத்தால் தென்னந்தோப்பில் தேங்கியிருந்த தண்ணீரை வாய்க்கால் வெட்டி வெளியேற்றிக் கொண்டிருந்தார், 'ஏரோட்டி' ஏகாம்பரம். கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு காலாட்டியபடியே ஏரோட்டிக்கு கோளாறு சொல்லிக் கொண்டிருந்தார், 'வாத்தியார்' வெள்ளைச்சாமி. கொஞ்சநேரத்திலேயே 'காய்கறி' கண்ணம்மாவும் வந்து சேர்ந்துவிட கலகலப்பாகத் தொடங்கியது மாநாடு.

''என்னய்யா இந்நேரத்துலேயே படுத்துட்டீக'' என்று காய்கறி கேட்க, 'கயித்துக் கட்டிலைப் பாத்ததும் படுக்கணும்னு தோணுச்சு... அதான் படுத்துட்டேன்'' என்ற வாத்தியார்... தொடர்ந்து,

''தென்னந்தோப்புக்குள்ள கயித்துக் கட்டில்ல படுத்துப் பாத்தாதான் கண்ணம்மா, அந்த சொகம் தெரியும். என்னதான் தேக்குமரக்கட்டில்ல மெத்தையைப் போட்டுப் படுத்தாலும் இந்த சொகம் கிடைக்காது. அதுல படுத்து ஒரு தூக்கம் தூங்கி எந்திரிச்சோம்னா நல்லா மசாஜ் பண்ணுன மாதிரி இருக்கும். கடசக்கட்டில்னும் இதைச் சொல்வாங்க. அதாவது, மரத்தைக் கடைஞ்சு துளை போட்டு அதுல கட்டைகளைச் செருகி இணைக்கிறதால இந்த பேரு. இப்போலாம் இந்தக் கட்டிலை கிராமங்கள்ல மட்டும்தான் பாக்க முடியுது. இதுக்கு கயிறு பின்னுறதே ஒரு கலை தெரியுமா... அது மாதிரியான ஆளுங்களும் இப்ப குறைஞ்சுட்டாங்க. திருச்செங்கோட்டுல நடக்குற வாரச்சந்தையிலதான் இப்போ அதிகமா கயித்துக்கட்டில் கிடைக்குது. வாகை, வேம்பு, மூங்கில்னு மரம் வெச்சுருக்காங்க. நாம போய் மரத்தைத் தேர்வு பண்ணிக் கொடுத்தா... ரெண்டு மணி நேரத்துல கட்டிலை செஞ்சுக் கொடுத்துடுறாங்க'' என்றார்.

''கார்த்திகை மாசம் பிறந்த உடனேயே காய்கறி விலையெல்லாம் எகிறிப் போயிடுச்சு. ஏகப்பட்ட பேர் சபரி மலைக்கு மாலை போட்டு விரதம் இருக்க ஆரம்பிச்சுடுறாங்க. அதனால அசைவம் சாப்பிடுறவங்ககூட முழு சைவத்துக்கு மாறிடுறதால காய்கறிக்குத் தட்டுப்பாடு. குறிப்பா... தக்காளி, முருங்கைக்காய், கத்திரிக்காய். அதுபோக மழை வேற அதிகமா பெய்யுறதால காய்கறி வரத்தும் கம்மியாயிடுச்சு. அப்புறம் விலை ஏறுறதுக்கு கேக்கவா வேணும்?'' என்றார் காய்கறி.

''காய்கறி விலை மட்டும் ஏறிப்போகல கண்ணம்மா... ஆடு, மாடு விலையும் ஏறிப்போச்சு தெரியுமா. கொஞ்சம் மழை பேஞ்சு புல்லு, பூண்டு முளைக்கவும்... சந்தைக்கெல்லாம் இப்போ நிறைய பேரு ஆடு, மாட்டை ஓட்டிக்கிட்டு வர்றதில்லையாம். பல்லடம் வாரச்சந்தை கூடுனா வழக்கமா முன்னூறு ஆடு வரைக்கும் விற்பனைக்கு வருமாம். இப்போ ரெண்டு வாரமா நூறு ஆடுககூட வர்றதில்லையாம். வரத்து கம்மியானதால விலையும் எகிறிப் போச்சாம். 2,000 ரூபாய்க்கு வித்துக்கிட்டுருந்த ஆடெல்லாம்... 2,500 ரூபாய் வரைக்கும் விலையேறிப் போச்சாம். அதேமாதிரி பொள்ளாச்சி, மணப்பாறைப் பக்கமெல்லாம் அடிமாடுகளோட விலையும் அதிகமாயிட்டதால, கேரளாவுல இருந்து வர்ற வியாபாரிங்கதான் கலங்கிப் போய்க் கிடக்குறாங்களாம்'' என்றார் ஏரோட்டி.

"அது கெடக்கட்டும்... நானொரு அதிசய சேதி சொல்லப்போறேன்" என்று முன்னோட்டம் கொடுத்த வாத்தியார்,

"ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியில் 'சின்னார்&20'னு ஒரு நெல் ரகத்தை நிறைய விவசாயிக சாகுபடி பண்றாங்க. இதுல என்னா விசேஷம்னா... இதைக் கண்டுபிடிச்சது ஒரு விவசாயி. 'சின்னார்'ற ஒரு விவசாயி, அஞ்சாறு வருஷத்துக்கு முன்ன, சம்பா நெல்லை வாங்கிட்டு வந்து விதைச்சுருக்கார். அதுல சில பயிர்கள் மட்டும் கருப்பா இருந்துச்சாம். அதை மட்டும் தனியா எடுத்து வெச்சு விதைச்சப்போ... வழக்கத்தைவிட அதிகமான மகசூல் கிடைச்சுருக்கு. தொடர்ந்து அதை பயிர் பண்ண ஆரம்பிச்சுருக்கார். மத்த விவசாயிகளும் அதை அவர்கிட்ட இருந்து வாங்கி விதைக்க ஆரம்பிச்சதால அந்த ரகத்துக்கு 'சின்னார்&20'னு பேர் வெச்சுட்டாங்களாம்" என்று சொல்ல...

"அதெப்படிங்க வாத்தியாரய்யா... இப்படியெல்லாம் திடுதிப்புனு ஒருத்தரால புதுசா கண்டுபிடிக்க முடியுமா என்ன?" என்று சந்தேகம் கிளப்பினார் காய்கறி.

"நல்லா கேட்ட போ... அதாவது, பயிர்ல இனப்பெருக்கம் (சடுதி மாற்றம்) நடக்குறப்போ செல் குறைபாட்டால இந்த மாதிரி புது ரகப் பயிர்கள் உற்பத்தியாகும்ங்கறாங்க விஞ்ஞானிங்க'' என்று விளக்கம் கொடுத்தார் வாத்தியார்.

''இப்போலாம் ஆப்பிள் மாதிரி இளநீர்லயும் ஸ்டிக்கர் ஒட்டி விக்க ஆரம்பிச்சுட்டாங்க தெரியுமா?'' என்ற ஏரோட்டி,

''சேலத்துல நிறைய இடங்கள்ல விக்குற இளநியில பண்ணையோட பேர், மரத்தோட எண், இளநியோட வரிசை எண்ணெல்லாம் அச்சடிச்ச ஸ்டிக்கரை ஓட்டி விற்பனை செய்யுறாங்க. அது மூலமா ஒரே தோட்டத்து இளநியைத் தேடி வாங்கிக் குடிக்க முடியுமாம்'' என்று குஷியோடு சொன்னார்.

"ம்... இப்படியே போனா, நாளைக்கு நான் கொண்டுட்டு போற கத்திரிக்காய், சுண்டைக்காய் இதுலயெல்லாம் கூட, ஸ்டிக்கர் ஏன் ஒட்டலனு கேக்க ஆரம்பிச்சுடப் போறாங்க..." என்று தன் கவலையில் காய்கறி மூழ்க,

''அப்படியே ஆயிட்டாதான் நாம என்ன பண்ண முடியும். ஸ்டிக்கர் அடிச்சுட வேண்டியதுதான். அதுக்காக கவலைப்பட்டு என்ன ஆகப்போகுது" என்ற வாத்தியார்,

"இதோ அடுத்த கவலை ஒண்ணைச் சொல்றேன் கேட்டுக்க... அதாவது, பொங்கல் சமயத்துல வெல்லத்தோட விலையும் எகிறப் போகுதாம். இப்ப பேய்ஞ்சுக்கிட்டுருக்குற தொடர்மழையால... வெல்லம் காய்ச்சுறதுக்கு முக்கியமான எரிபொருளான கரும்புச் சருகுகளையெல்லாம் காய வைக்க முடியலையாம்.

அதனால் வெல்ல உற்பத்தி கடுமையா பாதிச்சுருக்காம். பனைமட்டை, மத்த விறகுகளை காசு கொடுத்து வாங்கி எரிக்க வேண்டியிருக்காம். ஈரப்பதம் அதிகமா இருக்கறதால... மின்சாரக் காற்றாடியைப் போட்டும் காய வெக்க வேண்டியிருக்காம்.

இதனாலயெல்லாம் உற்பத்திச் செலவு அதிகமாகி, வெல்லத்தோட விலையைக் கூட்டிப்போடும்னு சொல்றாங்க'' மூச்சுவிடாமல் வாத்தியார் சொல்லி முடிக்கவும், லேசாக தூறல் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. அத்தோடு கலைந்தது, அன்றைய மாநாடு.

ஏரோட்டி சொன்ன கொசுறு
மீன வளர்க்க மானியம்!
வீட்டுக்குப் பின்னாடி காலியா இருக்குற இடத்துல அலங்கார மீன் குஞ்சுகளை வளர்க்கறதுக்கு தேசிய மீன் வள மேம்பாட்டு வாரியம் மூலமா மானியம் கொடுக்குறாங்க. மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், மீனவ மகளிர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு 50% மானியம் கிடைக்குமாம். ஆர்வம் உள்ள தனிநபர்களுக்கு 25% மானியம் கிடைக்குமாம். தண்ணீர் வசதியோட 250 சதுர அடி இடம் இருந்தா போதுமாம். மொத்தம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு தேவைப்படுமாம். மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துல இதுக்கான விவரங்கள் கிடைக்குமாம்.
வாத்தியார் சொன்ன கொசுறு

மாசுக்கட்டுப்பாடு வாரியம் அதிரடி!

திருப்பூரைச் சுத்தி முறையாக இயங்காம இருந்த

54 சாய ஆலைகளை மூடுறதுக்கும், மின்சார இணைப்பை துண்டிக்கறதுக்கும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டிருக்கு. மொத்தம் இருக்கற 733 சாய ஆலைகள்ல சில ஆலைகள்... 'ஜீரோ டிஸ்சார்ஜ்' கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காம, நொய்யல் ஆத்துல கழிவுகளைக் கலந்து விட்டுக்கிட்டு இருந்தாங்களாம். அதைக் கண்டுபிடிச்சு, சம்பந்தபட்ட ஆலைகளை மூடச்சொல்லி உத்தரவு போட்டுஇருக்காங்களாம். மின் இணைப்பையும் துண்டிக்கச் சொல்லிட்டாங்களாம்.

இத்தனைக்கும் இந்த 54 ஆலைகளும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துல உறுப்பினரா இருந்தும், நொய்யல் ஆத்துல கழிவுகளைக் கலக்க விட்டதுதான் வேதனையான விஷயம்.