Published:Updated:

தேவை நெஞ்சுரம் !

தேவை நெஞ்சுரம் !

தேவை நெஞ்சுரம் !

தேவை நெஞ்சுரம் !

Published:Updated:
தேவை நெஞ்சுரம் !
தேவை, நெஞ்சுரம் !
தேவை நெஞ்சுரம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்..!

தேவை நெஞ்சுரம் !

'தமிழகத்தில் 37% நிலத்தடி நீர் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நிலத்தடி நீரை மேம்படுத்திட கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டும். இதற்கான வழிமுறைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்' என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் வின்சென்ட் ஹெச். பாலா.

தொழில் முதலாளிகளின் குழுவான 'இந்தியத் தொழிலக கூட்டமைப்பு' (சிஐஐ) செப்டம்பர் 21-ம் தேதியன்று 'தமிழ்நாடு நீர் வளம்-2010' என்ற தலைப்பில் சென்னையில் நடத்திய மாநாட்டில்தான் இப்படி பேசியிருக்கிறார்.

நிலத்தடி நீரைக் காப்பாற்றுவதற்காக... கோடானுகோடிகளை அள்ளிக் கொட்டிக் கொண்டேதான் இருக்கின்றன மத்திய-மாநில அரசுகள். ஆனால், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டேதான் இருக்கிறது. காரணம்... நாள்தோறும் பலகோடி லிட்டர் அளவுக்கு நிலத்தடி நீரை அசுரத்தனமான இயந்திரங்களை வைத்து உறிஞ்சும் தொழிற்சாலைகள், அதேஅளவு கழிவுநீரை சுத்திகரிக்காமல், வெளியேற்றிக் கொண்டிருப்பதுதான்.

திருப்பூர் சாயப்பட்டறைகளின் புண்ணியத்தால், ஒரத்துப்பாளையம் அணை நீர் சாயக்கழிவுகள் தேங்கி நிற்கும் சாக்கடையாக மாறிக்கிடக்கிறது. தஞ்சைத் தரணியைக் கொழிக்க வைத்த காவிரியிலும் அந்த கழிவு நீர் நீக்கமற கலந்து கிடக்கிறது.

ஆக, நிலத்தடி நீர் குறித்த அபாய மணி எப்போதோ அடித்தாகிவிட்டது. இந்த சூழ்நிலையிலும், 'ஏதோ கூப்பிட்டார்கள்... கருத்து சொன்னேன்' என்றபடி மேடைகளில் எடுத்து வைக்கப்படும் பேச்சுக்கள் இனியும் தொடர்வதில் அர்த்தமில்லை.

பொறுப்பில் இருப்பவர்கள், 'நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு காரணமே... உங்களைப் போன்ற முதலாளிகளில் பலரும் பொறுப்பற்று இருப்பதுதான். உங்களுக்குத் தேவையான வரிச்சலுகைகளுக்கு கூட்டாக சேர்ந்து குரல் கொடுக்கிறீர்கள். அதேபோல, உங்கள் சகாக்கள் தவறு செய்யும்போது தட்டிக் கேட்டு அவர்களைத் திருத்துங்கள். கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியிடமாட்டோம் என்பதை உறுதிப்படுத்துங்கள்' என்றெல்லாம் நெஞ்சுரத்தோடு கருத்துக்களை எடுத்து வைக்கவேண்டிய கட்டாயத்தில்தான் தற்போது நாடு இருக்கிறது.

அதைவிட்டுவிட்டு, அரசுக்கும் பொதுமக்களுக்கும் அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை, என்றே தோன்றுகிறது!

நேசத்துடன்,
பா.சீனிவாசன்,
ஆசிரியர்.

தேவை நெஞ்சுரம் !
தேவை நெஞ்சுரம் !
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism